மூச்சுத் திணறல் moochu thinaral
நாம்
சுவாசிக்கும் நிகழ்வானது ஒரு இயற்கையான செயல். இந்த செயலின் போது ஒருவிதமான திணறல்
ஏற்பட்டால் அதுவே மூச்சுத்திணறல் என்றும் கூறப்படுகிறது. இது ஒரு சிலருக்கு
நடக்கும் போது தோன்றும் .ஒருசிலருக்கு வீட்டிலோ அல்லது கட்டிடங்களிலோ மாடிப்படி ஏறினால் தோன்றும். ஒருசிலருக்கு
பெரிய வேலைகளை செய்யும் பொழுது தோன்றும்
ஆஸ்துமா
காசநோய் மற்றும் இதர சில சுவாச நோய்கள் உள்ளவர்களுக்கு இதுபோன்று
ஏற்படுவது அதிகமாக இருக்கும் .பொதுவாக உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் குறையும்
பொழுது இந்த மாதிரியான நிகழ்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது இதை எவ்வாறு
சரி செய்வது என்பதை கீழ்க்கண்டவாறு பின்பற்றுவது மூலம் குணப்படுத்தலாம்.
எதனால்
மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பு அதிகம் என்பதை கீழே பார்ப்போம்
*அதிக எடை கொண்டவர்களுக்கு ஏற்பட வாய்ப்பு
*நாட்பட்ட கட்டுப்படாத ஆஸ்துமா நோய் உடையவர்கள்
* அதிகம் புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படலாம்.
* இருதய பாதிப்பு ,கணுக்கால் வீக்கம், முறையற்ற இருதய துடிப்பு
* அதிக ரத்த போக்கு (விபத்து, மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு போன்றவை)
* சளி, ப்ளூ
* மரத்தூள் ஒவ்வாமை
* சிறு பூச்சிகள்
* கரப்பான் பூச்சி
* உணவு அலர்ஜி
* ஒத்துக் கொள்ளாத வாசனை போன்றவை ஆகும்.
காரணத்திற்கான
சிகிச்சை எடுக்கும் பொழுதே தீர்வு கிடைக்கும். பொதுவில் இத்தகைய பாதிப்புடையோர்
சிறுசிறு உணவாக 4-6 முறை எடுத்துக் கொள்வது நல்லது. நடைப்பயிற்சி உதவும். செயற்கை
குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
எவ்வாறு இயற்கை முறையில் சரி செய்வது?
வெற்றிலை சாறு:
முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.
இந்த முறையானது மிக மிக எளிதான முறையாகும்.இதற்கு நீங்கள் எந்தவித செலவும் செய்ய தேவையில்லை.இதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பாள நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து வாய் தொண்டையில் படும்படி கொப்பளித்தால் இருமல் மற்றும் மூக்கடைப்பு ஏற்படும் மூச்சுவிடுவதில் சிரமம் குறையும் என்று கூறுகிறார்கள்.
நீர் ஆவி பிடித்தல்:
நாம் ஆவி பிடிக்கும் போது நமக்கு மூக்கடைப்பினால் ஏற்படும் மூச்சுவிடுவதில் சிரமத்தை போக்குகிறது.இதற்கு ஒரு Nபாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவுக்கு நீர் ஊற்றி அதை கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு நீங்குகிறது.தற்பொழுது ஆவி பிடிப்பதற்கு என்றே சிறு மெஷின்கள் விற்பனைக்கு வந்துவிட்டன.இதை வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
வீட்டு வைத்திய முறைகள்:
காலையில் தேனுடன் சிறிதளவு துளசி இலைகளை கலந்து சாப்பிட்டு வந்தால் குளிர் காலங்களில் ஏற்படும் சளி , இருமல் மற்றும் சுவாச தொற்றுகள் நீங்கி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாது.இஞ்சி மற்றும் தேன் கலந்து செய்யப்படும் பானம் தொண்டை கரகரப்பு மற்றும் சளியை நீக்க உதவுகிறது.இந்த முறையினால் மூக்கடைப்பு நீங்கி மூச்சுவிடுவதில் சிரமம் போகிறது என்று கூறுகிறார்கள்.
உடற் பயிற்சி மற்றும் யோகா:
உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி ,மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை தினமும் செய்து வரும் போது உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் நீங்கி நுரையீரலின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
- TOPIC RELATED ALSO: