புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

மூலிகை சமையல் mooligai samayal

 

மூலிகை சமையல்


 mooligai samayal


மூலிகை சமையல்

நாம் இந்த தளத்தில் பல மூலிகைகளின் பலன்களையும், மருத்துவ  பயன்களையும்  படித்து வருகிறோம். அவ்வாறு  படித்த மூலிகைகளை நாம் உணவில் சேர்த்துக் கொள்ளவும் அல்லது பயன்படுத்தவோ நமக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம். இந்த பக்கத்தில் நீங்கள் மூலிகையைக் கொண்டு செய்யப்படும்  உணவுகளை எப்படி சமைப்பது என்பதை  தெரிந்துகொள்ளலாம். மேலும் மூலிகையைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் வகைகளையும்,    சூப் வகைகளையும்,  ஜூஸ் தயாரிக்கும் முறைகளையும், பொடி தயாரிக்கும் முறைகளையும் மற்றும் இன்னும் பல உணவு வகைகளையும் தெரிந்துகொள்ளலாம்



பிரண்டை துவையல் செய்வது எப்படி?


pirandai thuvaiyal-மூலிகை சமையல் mooligai samayal


 

 பொருட்கள்

 அளவு 

பிரண்டை துண்டுகள்

ஒரு கப்( தோல்   நீக்கிய)

 உளுத்தம் பருப்பு

 ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு

 தேவையான அளவு

 சின்ன வெங்காயம்

 10

 மிளகாய்

 5

தேங்காய்

 சிறிதளவு

  புளி

 சிறிதளவு 

பெருங்காயத்தூள்

 சிறிதளவு

 கடுகு

 சிறிதளவு 

நல்லெண்ணெய்

 2 டேபிள் ஸ்பூன்

 

பிரண்டைத் துவையல் செய்வதற்கு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதனுடன் பிரண்டை மற்றும் புளி,தேங்காய், மிளகாய். உளுத்தம் பருப்பு, உப்பு, சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். பிறகு சிறிது ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துக்  வைத்து கொள்ளவும்.  மீண்டும் எண்ணெய் சிறிதளவு ஊற்றி கடுகு ,பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

 

 பிரண்டை  எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆகும். இது எலும்பு தேய்மானம் மற்றும்,  மூலம் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

TAGS:

mooligai samayal  samaiyal kitchen foods  drinks  powder leygiyam moolikai tea coffee kudineer seivathu eppadi soup chicken sweet மூலிகை சமையல்


Post a Comment

0 Comments