புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

நரம்புகளுக்கு பலம் தரும் கழற்சிக்காய்-மூலிகை மருத்துவம் kalarchikai benefits tamil



நரம்புகளுக்கு பலம் தரும் கழற்சிக்காய்-மூலிகை மருத்துவம் kalarchikai  benefits tamil


மூலிகை மந்திரம்

நம் நாட்டு வேலிகளிலும், சாலையோரங்களிலும், புதர்களிலும் பயிராகும் ஒரு கொடி கழற்சிக்கொடி ஆகும். இது இறைவனைப் போலத் தானாய் வந்து தயை செய்யும் ஒரு மூலிகை ஆகும். ஊமத்தங்காய் போல காய்களின் மேல் முட்கள் போன்ற அமைப்பைக் கொண்டது. ஆனால், சற்று சிறியதும் முட்டை வடிவினதுமான காய்களைக் கொண்டது. இதன் விதைகள் மிகவும் கடினமானவை. உள்ளிருக்கும் பருப்புகள் முந்திரியைப் போல மென்மையும், வண்ணமும் பெற்றிருந்தாலும் கடுமையான கசப்பு குணம் கொண்டவை ஆகும். கல்லுக்குள் ஈரம் என்று சொல்வார்கள். அது போல தன்மையில் தடினமானதாகத் தோன்றினாலும் பல்வேறு சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கியவையாக விளங்குகின்றன.

Caesalpinia bonducella என்பது கழற்சிக்காயின் தாவரப் பெயர் ஆகும். Fever nut, Bonduc nut, Molucca Bean என்பவை ஆங்கிலப் பெயர்களாகும். குபேராக்‌ஷி, வஜ்ஜிர பீஜம் என்பவை கழற்சிக்காயின் வடமொழிப் பெயர்களாகும். கச்சக்காய், களிச்சக்காய் என்றெல்லாம் தமிழில் குறிப்பிடுவ துண்டு. இதன் இலை, வேர், பட்டை, விதைகள், விதைகளின் மேலோடு ஆகியன மருத்துவத்துக்கு பயன்படுகின்றன.
  • கழற்சிக்காயும் மருத்துவப் பயனும்

கழற்சிக்காய் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிப் பலன் தருகிறது. விதைகள் வயிற்றுப்போக்கைக் நிறுத்தக் கூடியது, தொற்றுக் கிருமிகளுக்கு எதிரானது, நோய்த் தடுப்பு மருந்தாவது, நுண்கிருமிகளை அழிக்கவல்லது, பூஞ்சைக் காளான்களைப் போக்கவல்லது, சர்க்கரை நோயைப் போக்கவல்லது, கட்டிகளைக் கரைக்கவல்லது, காய்ச்சலைத் தணிக்கக்கூடியது, சிறந்த வலி நிவாரணியாவது, யானைக்கால் காய்ச்சல் மற்றும் வீக்கத்தைத் தணிக்கக்கூடியது, மனப் பதற்றத்தைப் போக்கக்கூடியது, வீக்கத்தைக் கரைக்கக் கூடியது, சோர்வைப் போக்கக்கூடியது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது, வலிப்பைத் தவிர்க்கவல்லது, கடுப்பைத் தவிர்க்கக்கூடியது, சிறுநீரைப் பெருக்கவல்லது, பூச்சிகளைக் கொல்லவல்லது, உடல் நோயுறுந் தன்மையில் அதை சமன் செய்யவல்லது, ஞாபக சக்தியையும், உடல் பலத்தையும் பெருக்கவல்லது, பூச்சிகளைத் தடுக்கவல்லது, நரம்புகளுக்கு பலத்தைத் தரவல்லது.

கழற்சிக்காயின் மருத்துவ குணம் பற்றி அகத்தியர் பாடல்

‘விரை வாதஞ் சூலையறும் வெட்டையன் லேகும்
நிரை சேர்ந்த குன்மம் நிலையா - துரை சேர்
அழற்சி விலகும் அருந்திற் கசப்பாங்
கழற்சியிலை யென்றுரைக்குங் கால்.’
- அகத்தியர் குணபாடம்

You can get details of   kalarchikai   benefits in tamil,  kalarchikai   uses in tamil,  kalarchikai   nanmaigal in tamil,  kalarchikai   payangal in tamil,  kalarchikai   etharku payanpadukirathu,  kalarchikai   ulla sathukal,  kalarchikai   engu kidaikkum,  kalarchikai   vilai/price/rate,  kalarchikai 
eppadi irukkum

கற்றாழை-மூலிகை மருத்துவம்


கழற்சிக்காய்-மூலிகை மருத்துவம்


நாட்டு மருத்துவத்தில் கழற்சிக்காய்


வெள்ளறுகு குணம


தும்மலை போக்கும் கற்பூரவல்லி