கருங்கோழி - மருத்துவ பயன்கள் karung koli health benefits in tamil
கருங்கோழி என்பது மத்தியபிரதேச நாட்டுக்கோழி இனம் ஆகும் .சதை, ரத்தம் மற்றும் அனைத்து பாகங்களும் பாகங்களும் கருப்பாக இருக்கும்...இவை இந்தியாவில்
வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, "கடக்நாத்' என்றழைக்கப்படும் கோழியினமாகும்... இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது…
கருங்கோழி முட்டை(kadaknath black chicken eggs)
கருங்கோழி முட்டையானது கருங்கோழி போலவே கருப்பு நிறம் உடையது.
கருங்கோழி ஆண்டிற்கு 120 முதல் 150 முட்டைகளை இடுவதால் இதனுடைய விலையும் சற்று அதிகமாக இருக்கும்.
எல்லாம் நாட்டுக்கோழி போலவே இதிலும் நல்ல கொழுப்புச்சத்து மற்றும் புரதம் உள்ளது. இந்த முட்டையில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன எனவே இது வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது .முட்டை சாப்பிடுவதால் பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் பிரச்சனைகளையும், ஆஸ்துமா தலைவலி போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
கருங்கோழி முட்டைகள் கொலஸ்ட்ராலின் அளவு குறைவாக இருப்பதாலும் ,இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாலும் முதியோர் முதல் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாக கருதப்படுகிறது.மேலும் இதில் அதிகளவு புரதச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளது என்று கூறுகின்றனர்.
கருமை நிறத்திற்கு
காரணம்:(karung koli/ kozhi or kadaknath chicken colour)
இந்தக் கோழிகள் மெலனின் என்ற நிறமி
அதிகம் உள்ளது எனவே இதை உண்பதால்
நரம்புகளை வலுப்படுத்தி நரம்புத் தளர்ச்சி
போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக
பயன்படும் என்றும் கூறுகின்றனர் .
அதிக ருசியும் மணமும் கொண்ட இந்த கோழி தமிழ்நாட்டில் வேலூரிலும், சேலம் மாவட்டம் ஓமலூரில் பண்ணைகள் அமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இது அதிக மருத்துவ குணம் கொண்டது.
கருங்கோழி மருத்துவ பயன்கள் மற்றும் குணங்கள்:(karung koli health benefits or uses)
நாள்பட்ட நோய்களுக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாக பயன்படுகிறது. ஏனென்றால் கோழியில் 25 சதவீதம் புரதச்சத்தும்
கொலஸ்ட்ரால் 0.73 -1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இதை
இதய நோய் மற்றும் இதய பாதிப்பு
உடையவர்கள் சாப்பிடலாம் என்றும்
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சி கழகம்
சான்றளித்துள்ளது.
இந்த கோழி சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.இதில் பி1, பி2, பி6, பி12, சி மற்றும் இ, வைட்டமின் சத்துகளும் உள்ளன. இந்த கோழி இறைச்சி யுனானி மற்றும் ஓமியோபதி மருத்துவத்தில் நரம்பு தளர்ச்சியை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறுகிறார்கள்.
மத்தியபிரதேச மலைகளில் வாழும் மக்கள் இது ஒரு இயற்கை ஆண்மை பெருகி என்றும் இயற்கை வயாகரா என்றும் கூறி இதை விரும்பி உண்டுவருகிறார்கள் .சீன மருத்துவத்திலும் இந்த கோழியை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கருங்கோழி விலை/karung koli /kadaknath black chicken/ rate/price:
கருங்கோழி ஒன்றின் விலை ரூபாய் 5000
க்கும்
கருங்கோழி முட்டை ஒன்று ரூபாய் 50 க்கும் விற்கப்படுகிறது.
கடக்நாத் எங்கே வாங்குவது மற்றும் விற்பது???:(where to buy or sell kadaknath black chicken or karung koli)
கடக்நாத் கோழி விற்பனை செய்வதற்கு
மத்தியபிரதேச அரசால் புதிய மொபைல் ஆப்
ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஆப் பெயர் “MP Kadaknath” ஆகும். இந்த மொபைல் ஆப் பயன்படுத்தி இந்த ஆப்பை பயன்படுத்தி யார் வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும்
இந்த கோழியை வாங்கிக் கொள்ளலாம்
என்று அறிவித்துள்ளது.
karung koli health benefits in tamil,karung kozhi,kadaknath chicken,kalamasi kalimasi chicken health benefits in tamil,uses in tamil black chicken price rate egg vilai