புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

நன்னாரி மற்றும் நன்னாரி வேர் பயன்கள்


நன்னாரி மற்றும் நன்னாரி வேர் பயன்கள் nannari ver benefits in tamil



1. வேறுபெயர்கள் - கிருஷ்ணவல்லி, அங்காரிமூலி, நறுக்கு மூலம், நறுநீண்டி.
 nannari ver benefits in tamil
2. தாவரப்பெயர் - HEMIDESMUS INDICUS.

3. குடும்பம் - ASCLEPIADACEAE.

4. வகை - நன்னாரி, சீமைநன்னாரி, பெருநன்னாரி, கருநன்னாரி.

5. வளரும் தன்மை - இது எங்கும் இந்தியாவில் வளரக்கூடியது. இது எதிரடுக்கில் குறுகிய நீண்ட இலைகளையுடைய கொடி இனமாகும். இதனுடைய வேர் கருமை நிறமாகவும் உள்ளே வெண்மை நிறமாகவும் நல்ல மணமுடைய தாகவும் இருக்கும். இதனுடைய வேர் கசப்புத்தன்மை கொண்டதுஇது விதைகள் மூலம் தன்னுடைய இனப்பெருக்கத்தை செய்கிறது
\

6. முக்கிய  வேதிபொருள்கள் -   இதன் இலைகளிலிருந்து ரூட்டின், வேர்களிலிருந்து ஹெக்ஸாட்ரை அக்கோன்டேன், லூபியால், ஆல்பா அமரின், பீட்டா அமரின், இட்டோஸ்டிரால் ஆகியவற்றில் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

7. பயன்தரும் பாகங்கள் - வேர், பட்டை, மற்றும் இலைகள்.

8. பயன்கள்இதனுடைய வேர் சிறுநீர் பெருக்கியாகவும், வியர்வை பெருக்கியாகவும், உடலில் உள்ள உஷ்ணத்தை தணிக்க கூடியதாகவும் பயன்படுகிறது. மேலும் ஒற்றைத் தலைவலி, தலைவலியை, வாத நோய், பித்த நோய், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற்றிற்கு  மருந்தாக பயன்படுகிறது. இதனுடைய வேர்கள் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுகிறது.சித்தமருத்துவத்தில் நன்னாரி பல இடங்களில் தைலங்களிலும் லேகியங்களிலும் மணமூட்டும் பொருளாகச்  பயன்படுகிறது


பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து  நன்கு அரைத்து 200 மி.லி. பாலில்  சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள்  சாப்பிட்டு வந்தால் நரை மாறும்.

 இதனுடைய வேரை  வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி பின் அதனுடன் தேவையான அளவு சீரகம் சர்க்கரை சேர்த்து பொடி செய்து அருந்திவர சிறுநீரக சம்பந்தமான நோய்கள் அனைத்தும் தீரும்



 இதன் வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்தமான  பிரச்சனைகள்நீங்கும். தவிர வயிறு, குடல், இவைகளில் உண்டாகும் நோய்கள்  சரியாகும்.

 இதன்வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால்  ஏற்படும்பக்க விளைவுகள் நீங்கும்.

பெரிய நன்னாரி கிழங்கு ஊறுகாய் செய்ய பயன்படுகிறது. இதனுடைய ஊறுகாய் கல்லீரலைக் குணப்படுத்தும் காமாலையும் குணப்படுத்தும் மற்றும்  ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடல் உஷ்ணத்தை குறைக்கும்

. nannari ver benefits in tamil, uses ,nanmaigal , payangal ,etharku payanpadukirathu,  ulla sathukal,  engu kidaikkum,  vilai/price/rate,