Herbal Sambrani powder making method benefits in tamil
மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் முறை மற்றும் நன்மைகள்:
நாம் இறைவனை வழிபடும் போதும்,சுப நிகழ்ச்சிகளில் மற்றும் வார நாட்களான வெள்ளி .செவ்வாய் கிழமைகளில் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் சாம்பிராணி புகை போடுவதை அறிந்திருப்போம்.இதில் ஒரு வகையான தெய்வீக சக்தி கொண்ட சாம்பிராணி தான் மூலிகை சாம்பிராணி இங்கே மூலிகை சாம்பிராணி தயாரிக்கும் முறையையும், தூபம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் கீழே பார்ப்போம்.
சாம்பிராணி தயாரிக்க பயன்படும் மூலிகைகள் தன வசியத்தையும்,லட்சுமி கடாட்சத்தை யும், கணவன் மனைவி ஒற்றுமையும்,பேய் மற்றும் பிசாசு ,பில்லி மற்றும் சூனியம் போன்றவற்றை விளக்கும் சக்தி கொண்டதையும்,கொண்ட மூலிகைகள் ஆகும் இவை அனைத்தும் தெய்வீக மூலிகைகள் என்றும் கூறப்படுகிறது.இதன் பற்றிய சிறப்பை அகத்தியர் மற்றும் போகர்,நீ போன்ற சித்தர்கள் எழுதிய நூல்களில் எப்படி சாம்பிராணி தயாரிப்பது அதனுடைய சிறப்பு என்ன என்பதை படித்து அறிந்து கொள்ளலாம்.
மூலிகை சாம்பிராணி செய்ய தேவையான பொருட்கள் :
(ingredients for mooligai or herbal sambrani):
சுத்தமான சாம்பிராணி 500 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் தசாங்கு பொடி, அகில்,வெட்டிவேர் சமூலம்,திருநீற்றுப்பச்சிலை, கருந்துளசி,கஸ்தூரி மஞ்சள்,குப்பைமேனி,வில்வ இலை,பேய் மிரட்டி இலை, மருதாணி விதை, தலைச்சூரி வேர்,கொட்டைக்கரந்தை இலை அருகம்புல்,தொட்டான் சிணுங்கி வேர், தேவதாரு, விஷ்ணு கிரந்தி போன்றவற்றை தலா 50 கிராம் எடுத்துக்கொண்டு, அதனுடன் 70 வேப்ப இலைகள் மற்றும் வேர் பட்டை பொடி 50 கிராம் மற்றும் ஆலங்குச்சி, அரசங்குச்சி, வெண்கடுகு, சிறியா நங்கை தலா 30 கிராம், ஓமம்,சுக்கு,கோரோஜனை,மா இலை போன்று தலா 20 கிராம், குங்கிலியம் 150 கிராம்,புனுகு 10 கிராம்,சுத்தமான சந்தன தூள் 100 கிராம் போன்ற இருபத்தி இரண்டுக்கும் மேற்பட்ட மூலிகைகள் நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.இந்த பொடியை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் வைத்து அடைத்து வைத்துக் கொள்ளவும்.
சாம்பிராணி கரண்டியில் தேங்காய் கொட்டாங்குச்சியை உடைத்து அதில் நெருப்பு போட்டுக் கொண்டு அதனுடன் இந்தப் பொடியை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணி புகை அல்லது சாம்பிராணி தூபம் இட்டு வந்தால் நல்ல பலனை தரும்.
இந்த மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக் கூடியது இவற்றை வாங்கி அதன் தரத்தை சோதித்து பிறகு உபயோகித்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.
சாம்பிராணி தூபம் இட்டு கிடைக்கும் புகையினால் ஏற்படும் பயன்கள்:(Benefits of mooligai or herbal sambrani pugai)
இந்த சாம்பிராணி புகை மூலம் சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவை குணமாகும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பலன்களையும் என்றும்,வீட்டில் லட்சுமி தங்குவாள் என்றும்,தொழில் வளர்ச்சி,கடன் சுமை நீங்குதல்,வமன அமைதி கிடைத்தால்,வீட்டில் தெய்வீக அருள் கிடைத்தல், சூனியம் பேய் பிசாசு போன்ற கெட்ட சக்திகளை இடித்தல் போன்ற ஆன்மீகம் சார்ந்த பலன்களை கொடுக்கும் என்று சித்த நூல்கள் குறிப்பிடுவதாக கூறுகிறார்கள்.
Also:
Mooligai sambrani powder herbal sambrani cup price benefits uses seimurai thayarikkum murai making method
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com