புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

கற்பகமூலிகை இலையின் அற்புத மருத்துவப் பயன்கள்|| mooligai karisilankanni

கரிசலாங்கண்ணி இலையின் அற்புத மருத்துவப் பயன்கள்...!



மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது.
சுரபிகளைத் தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

இரத்த சோகையுள்ளவர்கள் கரிசலாங்கண்ணியை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை இருவேளைகளில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கும். இதனால் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இரத்த சோகை நீங்கும்.

கரிசலாங்கண்ணி கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7-10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

இதன் மஞ்சள் பூவடைய இலை 10, வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10-20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.

கரிசலைச் சாறு மற்றும்எள் நெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம் 100 கிராம், திப்பிலி 50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா, சளி, இருமல், குரல் கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

குழந்தைக்கு இருமல் இருந்தால் இதன் சாறு பத்துச் சொட்டு மற்றும் தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும். கருகரு கூந்தல் வளர்ச்சிக்கு கைகொடுக்கிற அருமருந்து கரிசலாங்கண்ணி. இது கேச பாதுகாப்புக்கும் கவசமாக விளங்குகிறது.

mooligai karisilankanni health benefits and uses in tamil


    எடையை குறைக்கும் பாதாம் பிசின் badam pisin benefits tamil

·         ஆடா தொடை மருத்துவக் குணங்கள் aada thodai benefits...

·         உயிர் அணுக்களை சாலாமிசிரி கஞ்சி salam misri kanji benefits tamil

·         மூட்டுவலியை போக்கும் கருப்பு உப்பு black salt benefits tamil

·         கருங்காலி மரத்தின் மருத்துவ பயன்கள் karungali maram benefits tamil

·         கற்பகமூலிகை இலையின் அற்புத மருத்துவப் பயன்கள்|| mo...