புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தேன் வகைகளும் மற்றும் அதன் பயன்களும்


தேன் வகைகள் Types of honey in tamil



  1.  கொம்புத்தேன்
  2.  மலைத்தேன்
  3.  பொந்து தேன்
  4.  கொசு   தேன்  அல்லது  மனை தேன்
  5.  அடுக்கு தேன்  அல்லது புற்றுத்தேன்

கொம்புத்தேன்
மரக்கொம்புகளில் கூடு கட்டும் .
இந்த தேன்கூட்டில்  உள்ள தேனீக்கள் ஆனது யாரையும் அதிகமாக தாக்காது. இது சுவைமிகுந்த தேன், கூட்டிலுள்ள தேன் மிகவும்  500  மிலி  கும்குறைவாகவே இருக்கும்.

 கொம்பு தேனின் மருத்துவ பயன்கள்

உடலில் ஏற்படும் குடல்புண் வயிற்றுப் புண்ணுக்கு மருந்து கொம்புத்தேன். பெரும்பாலும் இது சித்த மருந்துகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாதம்-பித்தம் கபம் ஆகிய  மூன்றையும் கட்டுப்படுத்துகிறது

 கொம்புத்தேன் விலை
கொம்புத்தேன் ஒரு லிட்டர் ரூபாய் 1500 விற்கப்படுகிறது 

மலைத்தேன்

கட்டிடங்களிலும், உயரமான மரங்களிலும், மலைகளிலும் இது கூடுகட்டி இருக்கும். கூடு  மற்றும் ஈக்கள் பெரியதாக இருக்கும். கூட்டில்உள்ள   மூன்று லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த தேனீக்கள் ஆபத்தானவை.  இந்தத் தேனீக்கள் மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்கக்கூடியது

 மலை தேனின் மருத்துவ பயன்கள்
கடுப்பு, கண் நோய்கள், காய்ச்சல் ஆஸ்துமா விக்கல் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது இந்த இந்த தேனி உட்கொண்டால் பசியை தூண்டும்  தேகம் பொலிவு பெறும். இவை சித்த மருந்துகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது 

பொந்து தேன்
/
இந்த தேனீக்கள்  மர  பொந்துகளில் கூடு  கட்டும் .இந்த தேனீக்களும் கொம்பு தேனீக்களும் ஒத்தே இருக்கும்.குறைஞ்சபட்சம் 2 லிட்டர் தேன்  எடுக்கலாம் ..
இந்த தேனீக்கள் உடனடியாக தாக்கும் .

பொந்து  தேனின் மருத்துவ பயன்கள்
விக்கல்  சோர்வு வாந்தி இருமல் போன்ற நோய்களுக்கு மரப்பொந்து தேன் மருந்தாக பயன்படுகிறது. இது உடல்  உடல் உஷ்ணத்தை அதிக  படுத்துகிறது
ஜீரண மண்டலத்தை  பாதுகாக்கிறது

 மரப்பொந்து தேன் இன் விலை
 ஒரு லிட்டர் ரூபாய் 600க்கு விற்கப்படுகிறது

கொசுத்தேன் அல்லது மனை தேன் 
வீட்டுச் சுவர்களில் உள்ள பொந்துகளில் இந்த வகை தேனீக்கள் கூடு கட்டும். இவை   உருவத்தில் சிறியவை  கருப்பு நிறத்தில் இருக்கும். ஒரு கூட்டில் குறைந்தபட்ச தேனை எடுக்க முடியும்
  இது மாந்திரீகத்தில் பயன்படுத்தப்படுகிறது

  கொசு தேனின் பயன்கள்

  கொசு தேனின் விலை
 இந்த தேன்  ஒரு லிட்டர் 3,500 வரை விற்கப்படுகிறது


அடுக்கு தேன்
 இது இனிப்பு சுவையுடைய தேனாகும். இது பெரும்பாலும் வயல் வரப்புகளிலும், பெரிய பாறைகளிலும்  அடுக்கு போல் தன்னுடைய கூட்டினை கட்டியிருக்கும் இதனால் இதன் பெயர்     அடுக்கு  தேன் என்று அழைக்கப்படுகிறது

அடுக்கு  தேனின மருத்துவ பயன்கள்

இருமல் வாந்தி  கபம்  வயிற்று உபாதைகள் போன்றவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

  அடுக்கு  தேனின் விலை

 இந்த தேன் ஒரு லிட்டர் ரூபாய் 700 வரை விற்கப்படுகிறது