விளாம்பழம் mooligai vilam palam
விளாம்பழம் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமில்லாமல் பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்துகிறார்கள். இது காயாக இருக்கும்போது துவர்ப்பு சுவை உடையதாகவும் சற்று கனிந்த பிறகு துவர்ப்பு மற்றும் புளிப்பும் கலந்துஒரு புது சுவையுடன் இருக்கும் . விழா மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்டது.
இந்தப் பழம் பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டது மற்றும் சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து இதில் அதிகம் உள்ளது. எனவே இது பல் மற்றும் எலும்பு சம்பந்தமானநோய்களுக்கு தீர்வாக அமையும்.
விளாம்பழத்தின் ஓடுகளை நீக்கி அதிலுள்ள சதையுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கும் .பிறகு நன்றாக பசி எடுக்கும்.
தலைசுற்றல் நீங்க
விளாம் பழத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வர பித்தத்தினால் ஏற்படும் வாந்தி மற்றும் தலைசுற்றல் போன்றவை குணமாகும்.
வெள்ளைப்படுதல் குணமாக
விளாம்பழம் பிசினை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அவர்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு மற்றும் வெள்ளைப்படுதல் குணமாகும் .