புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

ஆஸ்துமாவை குணப்படுத்த கற்பூரவள்ளி

கற்பூரவல்லி karpuravalli benefits tamil


karpuravalli benefits tamil

1)வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.

2)தாவரப்பெயர்- COLEUS AROMATICOS.

3)குடும்பம்-லாமியேசியே.

4)வளரும் தன்மை-
இது எல்லா இடங்களிலும் வளரக்கூடிய தன்மை கொண்டது. இதனுடைய தாயகம் இந்தியா நாடு. இதனுடைய பெயர் சித்தர் நூல்களில் அதிக அளவில் காணப்படுகிறது. வீட்டின் மாடி தோட்டத்தில், பின்புற தோட்டங்களிலும் வளர்த்து உடனடி நிவாரணத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இது வளர குறைந்தபட்சம் 25 டிகிரி முதல் 35 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இது செம்மண் மற்றும் களிமண் கலந்த மணற்பாங்கான இடங்களில் நன்கு வளரும்.  இதனுடைய இலையில்மென்தால் அதிகமாக காணப்படுகிறது


5)பயன்தரும் பாகங்கள் - தண்டு, இலைகள் ஆகியவை.

6)பயன்கள் - 

இந்த தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காச்சல்  குறைக்கும்மருந்தாகும்.
 இதன் இலைச் சாற்றை  சர்க்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.

ஓமவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் குடித்தாள் இருமல்,சளிக்  காய்ச்சல்போகும்
கற்பூரவள்ளி :-


இதுஒரு கிருமி  நாசினியாக பயன்படுகிறது.  இதைநம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வள்ளியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. கற்பூரவள்ளியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்தவகையான பூச்சிகளும் தென்னையைத்  அண்டாது.
கற்ப மூலிகையில் கற்பூரவள்ளிக்கு சிறந்த  இடம் உள்ளது. இதனால்தான்  இதை பெயரும் கூட கற்பூர வள்ளி என்று அழைக்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவள்ளி  பயன்படுகிறது.



இதனுடைய இலை பஞ்சு போன்றும் அதிக காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும், கேரளா கர்நாடகா  அதிகமாக காணப்படுகிறது

 இதனுடைய இலையை பொடி செய்து அதனுடன்  தூதுவளை மற்றும் துளசி இலைகளை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு ஒரு சிறு தேக்கரண்டியில் தினமும்  காலையில் தேனில் குழைத்து 48 நாட்கள் கொடுத்து வந்தார் இருமல் சளி போன்றவை நீங்கும்

 இது ஆஸ்துமாவை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது