புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தகரைச் செடியின் நன்மைகள் thagarai setiyin nanmaigal

Thagarai setiyin nanmaigal

தகரைச் செடியின் நன்மைகள் !!


  எந்த ஒரு சரும நோய்களையும் குணப்படுத்தும்  வல்லமை கொண்ட ஒரு அற்புத மூலிகை தகரைச் செடி .

 

 இந்தியாவில் தமிழ்நாட்டில் பரவலாகக் எங்கும் காணப்படும் சிறு செடிகளில் ஒன்று, தகரை செடிஇது ஊசித் தகரை, யானைத் தகரை, கருந் தகரை மற்றும் வேந் தக்ரை என்று பல்வேறு வகைகள் உள்ளன. பல வகைகள் தகரைச் செடிகள்  இருந்தாலும்அவை யாவும் ஒரே பலன்களை கொண்டுள்ளது.

தகரை செடிகள் பார்ப்பதற்கு முருங்கை இலைகள் போன்ற இலைகளைக் கொண்டிருக்கும், அதனுடைய பூவின் நிறம் இளம் மஞ்சளாகவோ, அதனுடைய காய்கள் தட்டைப்பயிறு போன்று இருக்கும்,


thagarai seti,thagarai setiyin nanmaigal,thagarai benefits tamil,தகரை,தகரைச் செடி

.

தகரை செடியின் பயன் தரும் பாகங்கள்  இலைகள், வேர்கள் மற்றும் விதைகள்.

 

 தோல்வியாதிகளைப் போக்கும் தகரை:

பலருக்கு அசவுகரியங்கள் தரக்கூடிய தந்திரங்களில் ஒன்று தோல்வியாதிகள். இவை கை கால்களில் மற்றும் முகங்களில், மற்ற வெளிப்புற உறுப்புகளில்  தோளில் வரும் பொழுது  பாதிப்பைத்  தருவதோடு  சங்கடங்களையும் ஏற்படுத்திவிடுகிறது.

மேலும்  பெண்கள்  ஆடைகளை இறுக்கமாக அணிவதாலும், கை மற்றும் கால்களில் எடுப்பு இடுக்குப் பகுதிகளில்  வரக்கூடிய தோல் வியாதிகளில் ஒன்று  படைஇதை வெளியே சொல்ல   இயலாமல் இருப்பதாலும்  மற்றும் அலட்சிய போக்கினாலும் இது படர்தாமரை ஆக மாறி உடல் எங்கும் பரவ வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.

 

பெரும்பாலும் ஒரு வகையான எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து விடுபட நாம் பல வழிகளை மேற்கொண்டாலும்  நம் நாட்டு வைத்தியத்தில் ஒன்றுதான் தகர இலை வைத்தியம். இதை எவ்வாறு செய்வது என்பதை கீழே பார்ப்போம்.

 

இதற்கு தகரை இலைகளை எலுமிச்சை சாறுடன் நன்கு அரைத்து குளிப்பதற்கு முன் படை அல்லது படர்தாமரை உள்ள இடங்களில் தடவி கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்யும் பட்சத்தில் இது போன்ற சர்ம வியாதிகள் சரியாகும் என்று கூறுகிறார்கள்.

 

 சிறுவர்களின் சொறி, சிரங்கு குணப்படுத்தும்    தகரை  விதை::

 

 சில காலங்களுக்கு முன் பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் பெரும்பாலான சிறுவர்-சிறுமிகள் தெருக்களில் அல்லது பொது மைதானங்களில் விளையாடுவார்கள். இப்போது கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்ற சாதனங்கள் வந்து விட்டதால் இந்த விளையாட்டுக்கள் குறைந்தாலும்  ஒரு சில குழந்தைகள் விளையாடு கொண்டுதானிருக்கிறார்கள். அவ்வாறு விளையாடும் பட்சத்தில் மண் புழுதி மற்றும் தூசுகள் போன்றவற்றால் அவர்கள் அசுத்தமாகி விடுவதும் உண்டு. மேலும்  இந்த அசுத்தங்கள் நச்சுக்கிருமிகள் ஆக மாறி சிறுவர்களின் தோல்களில் சிறுசிறு கொப்புளங்கள் வரக்கூடும். பின் அந்த கொப்பளங்களை  சொரியும் போது அது உடைந்து நீர் போன்று திரவம் வெளிவரும். இதுவே பிறகு சொரிசிரங்கு களாக மாறி அவர்களுக்கு பெரிய தொந்தரவுகளை ஏற்படுத்தும். இது போன்ற சரும அல்லது தோல் வியாதிகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது தகரை செடி. இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் தகரை விதைகளை மோர் கலந்து அரைத்து பின் சொரி சிரங்குகள் மீது பூசிவந்தால் அது விரைவில் குணமடையும் என்று சித்தர்கள் நம் நாட்டு வைத்தியத்தில் கூறிச் சென்றுள்ளார்கள்.

மேலும் ஒரு சிரங்கினால் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு கீழ்கண்ட முறையை பயன்படுத்தலாம்.

 

 காயங்கள்  ஆறுவதற்கு:

சொரி சிரங்கினால் வரும் காயங்கள் சிறுவர்-சிறுமிகளை துன்பப்படுத்தும். அந்த காயங்கள் ஆறுவதற்கு தகரை தழைகளை பறித்து அதை நீரில் போட்டு காய்ச்ச வேண்டும். அந்த  நீரை சொறி சிரங்கு மீது வெதுவெதுப்பாக இருக்கும் பட்சத்தில் ஊற்ற வேண்டும். பிறகு மேலும் தகர இலைகளைப் பறித்து அதனுடன் மஞ்சள் சேர்த்து அரைக்க வேண்டும்பின் அந்த கலவையை புண்களின் மீது பூச  பெண்கள் விலகி விடும்.




  வாய்வு கோளாறுகள், கட்டிகள் :

வாயு நிறைந்த காய்கறிகளான உருளைக்கிழங்கு அல்லது வாழைக்காய் போன்றவற்றை அதிகமாக சாப்பிட்டால்  நமது முதுகு மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளில் ஒரு பிடிப்பு போன்ற உணர்வு தோன்றும். இந்த வாயு பிடிப்பை சரி செய்ய, தகரை இலைகளை பறித்து அதை நீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை வானலியில் போட்டு வதக்க வேண்டும். பிறகு சற்று வெந்ததும் அதை எடுத்து இதமான சூட்டில் வாயு பிடிப்பு உள்ள இடங்களில் தடவினால் வாய்வு பிடிப்பு குணமாகும்.

 

 மேலும் வெயில் மற்றும் உஷ்ண கோளாறுகளால் ஏற்படும் ஒரு சிலருக்கு ஏற்படும் கட்டிகள் மற்றும் வீக்கங்களை குணப்படுத்த இந்த கலவையை கட்டிகள் மற்றும் வீக்கங்கள் மீது பூசினால் அது சரியாகும்.


நோய் புண்கள் குணமாக ;

 தகரை விதைகளை எடுத்துக் கொண்டு அதனுடன் கல்விசார் கலந்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதை  கோமியத்துடன் அரைத்து, அந்த கலவையை  பல நாட்களாக ஆறாமல் இருந்து வரும் காயங்கள்  மற்றும் தொழுநோய் புண்கள் போன்றவற்றிலும், சருமத்தில் தோன்றும் படர்தாமரை, படைகள் ஆகியவற்றிலும் பூசி வர அவையெல்லாம் குணமாகிவிடும்.

.

 

 விளக்கெண்ணெயுடன்தகரை இலை :

 விளக்கெண்ணையை, தகர இலைச் சாறுடன் கலந்து பிறகு அதை தயிலம் போல காய்ச்ச வேண்டும். அவ்வாறு காய்ச்சிய தைலத்தை எந்த ஒரு பெண்கள் மீதும் தடவிவந்தால் உங்கள் ஆறி விடும் என்பது நம் நாட்டு வைத்தியத்தில் கூறப்படும் பாட்டி வைத்தியம் ஆகும்.

 

 மலச்சிக்கலுக்கு :

தகரை இலைகளை உணவாக உண்ணலாம்இந்த இலைகளை பொரியல் செய்து உண்ணும்போது  மலச்சிக்கல்  நீங்கி, உடல் சுத்தமாகி, உடல் ஆரோக்கியமாகும்

 

மேலும்  இந்த இலைகளை துவையலாக செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.

 தகரை இலைகள் போதும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பை கொண்டது. இது பொதுவாக சரும வியாதிகளை குணப்படுத்தும்  என்பதை தெரிந்து கொள்கிறோம்.

"thagarai "thagarai seti,thagarai setiyin nanmaigal,thagarai benefits tamil,தகரை,தகரைச் செடி