kalakai benefits tamil
களா காய் பயன்கள்
1) வேறுபெயர்
- கிளா.
2) தாவரப்பெயர்
--CARRISSA CARANDAS.
3) குடும்பம்
-- APRCYANACEAE.
4) வளரும்
தன்மை --
இது மலைப்பிரதேசங்களில்
தானாகவே வளரக்கூடிய புதர் போன்ற செடி. இது வளரஏற்ற மண் செம்மண். இதனுடைய காய்
மற்றும் புளிப்பு சுவையுடையது. இது காயில் உள்ள விதை மூலம் இனப்பெருக்கம் செய்கிறது.
5) பயன்தரும்
பாகங்கள் --பூ, காய், பழம், வேர் ஆகியவை மருத்துவ குணம் கொண்டவை.
6)பயன்கள்
-- காய், பழம், ஆகியவை பசியை தூண்டும். தாதுக்களின்வெப்பு தணிக்கும், சளியை
அகற்றும்,மாத விலக்கைத்தூண்டும்.
இந்த
காயை ஊறுகாய் ஆகி உணவுடன் அடிக்கடி சேர்த்துக்கொள்ள பசியின்மை, சுவையின்மை ,பித்தம்,
பித்தத்தினால் வரும் குமட்டல் போன்றவை குணமாகும்
இது
தாகத்தை தணிக்கிறது.
இதனுடைய
வேரை பொடிசெய்து சர்க்கரை கலந்து 3 கிராம் காலை மாலை இருவேளை உண்டுவர பித்தம், தாகம்
வியர்வை பிரச்சனை போன்றவை குணமாகும்.
இதனால்குணமாகும்
இதர நோய்கள் கண் நோய் கண்ணில் ஏற்படும் வெண்படலமும், கரும்படலம், ரத்தப் படலம், சதை
படலம் போன்ற நோய்கள் குணமாகும்.
இதனுடைய
வேரை 50 கிராம் எடுத்துக்கொண்டு அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும் .அந்தத்
தண்ணீர் 100 மில்லி ஆக சுண்டக் காய்ச்சிய பின் எடுத்து வடிகட்டி காலை மாலை இருவேளை
50 50 மில்லி எடுத்துக்கொண்டால் கருப்பையில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.
களா காயின் பயன்கள்:
1.பெண்கள்:
மாதவிலக்கு பிரச்சனை உள்ள பெண்கள் இந்த கலாக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால்,கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றி மாதவிலக்கு பிரச்சனையை சரி செய்ய இது உதவுகிறது என்று கூறுகிறார்கள்.
2.பித்தம் நீங்கி தலைவலி தலை சுற்றல் குணமாக:
நமது உடலில் பித்தம் அதிகரித்தால் ,அது பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும்.இதற்கு சிறந்த தீர்வாக கலாக்காய் விளங்குகிறது.களாக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி கொண்டு வந்தால் அது பித்தத்தை குறைத்து பித்தத்தால் ஏற்படும் தலைசுற்றல் மற்றும் தலைவலி போன்றவற்றை குணமாக்குகிறது என்று கூறுகிறார்கள்.இதனால் கல்லீரல் பலப்பட்டு ,உடல் எந்த நோயும் இன்றி ஒழுங்காகிறது என்று கூறுகிறார்கள்.
3.தலைமுடி வளர்ச்சி:
கலாக்காய் அடிக்கடி உண்டு வந்தால் அது முடி உதிர்வை கட்டுப்படுத்தி, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறுகிறார்கள்.
4.சரும பராமரிப்பு:
கலா கையில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், நமது சருமத்தில் ஏற்படும்
இளம் வயதில் ஏற்படும் முதுமை போன்ற நோயை குணப்படுத்தி ,என்றும் இளமையாக உடலை வைத்துக் கொள்ள உதவுகிறது.
You can get details of kalakai benefits in tamil,kalakai uses in tamil,kalakai nanmaigal in tamil,kalakai payangal in tamil,kalakai etharku payanpadukirathu,kalakai ulla sathukal,kalakai engu kidaikkum,kalakai vilai/price/rate,kalakai Kelakai kalakaai kela kai pickle vurukai
eppadi irukkum,kalakai oorugai,kalakai thokku cranberry fruit in tamil