murungai pisin benefits in tamil
முருங்கைபிசின் மருத்துவ குணங்கள்
முருங்கை மரம் தரக்கூடிய அத்தனை பொருட்களும் மருத்துவ குணம் கொண்டது மற்றும் சுவைமிகுந்த பொருள்களாகும். முருங்கை மரம் கற்பகதரு என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு முருங்கை மரம் வீட்டில் இருந்தால் ,.அந்த வீட்டில் உள்ளவர்கள் அனைத்துவிதமான சத்துக்களையும் பெறுவார்கள் என்று சொல்லலாம். இது தரக்கூடிய பொருட்கள் முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பிசின், முருங்கைப்பூ ஆகியவை சத்து மிகுந்தது .
முருங்கை பிசின் எப்படி இருக்கும்:
முருங்கை பிசின் என்பது முருங்கை மரத்திலிருந்து வெளிவரும் கருஞ்சிவப்பு நிறமான பொருள். இதில் கால்சியம், சுண்ணாம்பு சத்து உள்ளது. இது உடலை வலுப்படுத்தவும் கட்டுக்கோப்பாக வைக்கவும் பயன்படுகிறது .இதனுடைய பயன்கள் ஆனது தங்கபஸ்மத்திற்கு இணையானது என்று கூறுகிறார்கள்.
மூட்டு வலி குணமாக.
ஊறவைத்த முருங்கைப் பிசின் ஆனது ஒரு இயற்கையான ஜெல்லி சுவைக்கு மாறிவிடும் ,இயற்கை நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம். இவ்வாறு இதை அடிக்கடி பருகி வந்தால் மூட்டு வலி,ஜவ்வு தேய்மானம்,ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணம் ஆகும்.
குழந்தை பெற விரும்புவோர்:
குழந்தை பேரு பெற விரும்புவோர் தம்பதியர்கள்,மாதவிடாய் வலி ,ஆண்களுக்கு உயிரணுக்கள் அதிகரிக்க செய்யவும் மற்றும் ஆண் மலட்டுத்தன்மையை சரி செய்யவும் உதவுகிறது.
மற்றும் பெண்களுக்கு கருமுட்டை சார்ந்த பிரச்சனைகளை,நாட்பட்ட நோய்கள் இருப்பவர்கள் உடல் பலம் பெறவும்,வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீக்கவும், நாட்பட்ட தலைவலி போன்ற நோய்களை தீர்க்க உள்ளதாக கூறுகிறார்கள்.
ஆண்மை பிரச்சனையை சரி செய்ய:
பச்சைப் பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும், காது வலி உடனே நின்று விடும்.
முருங்கைப் பிசினை எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்களின் ஆண்மையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
காது வலி குணமாக:
நரைமுடி இளமையில் வராமல் இருக்க:
இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தலைமுடி நரை சீக்கிரம் வராமல் தள்ளிப்போகும்.
கீரை வகைகளில் இரும்புச் சத்து கணிசமாக உள்ளது. முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது.
முருங்கைகீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய் இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
|
இக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி சத்து அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் இந்த கீரை பெரும்பங்கு வகிக்கிறது.மேலும் கண்பார்வை திறன் குறைவாக உள்ளவர்கள் இந்த கீரையை வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் கண்பார்வை சிறந்து விளங்கும் என்று கூறுகிறார்கள்.
உங்கள் கண்களின் பார்வை திறனை அறிய படத்தில் உள்ள எண்களை கண்டுபிடிக்கவும்:
முருங்கைக்காய்:
இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம். முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
மேலும் இந்தப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு.
இவ்வாறு நாம் இயற்கையான முறையில் மூலிகைகளை எடுத்து கொண்டு நம் நலனில் அதிக கவனம் செய்தால் நலத்தை அதிகரிக்கலாம்..
முருங்கை பிசின் ஜெல்லி தயாரிப்பது எப்படி?
தேவையான அளவு முருங்கைப் பிசினை நாட்டுமருந்து கடையில் வாங்கியோ அல்லது உங்கள் வீட்டின் அருகில் முருங்கை மரம் இருந்தால் அந்த மரத்திலுள்ள பிசினை எடுத்து வைத்துக் கொள்ளவும்.அந்த முருங்கை பிசின் மீது உள்ள தூசிகளை நீக்கி கழுவி வைத்துக் கொள்ளவும்.
உங்களுக்கு எவ்வளவு ஜெல்லி தேவைப்படுமோ அந்த அளவிற்கு நீரை ஊற்றி அதில் தேவையான அளவு முருங்கைப் பிசினைப் போட்டுக் கொள்ளவும்.ஒரு நாள் இரவு முழுவதும் முருங்கைப் பிசினை நீரில் ஊற விடவும்.பிறகு அதை எடுத்து ஊறிய பிசின்களை நீரில் நன்றாக உடைத்து நீரைக் கலக்கி விடவும்.இந்த நீருடன் சேர்ந்த ஜெல்லியை இளஞ்சூடான நாட்டுப்பசு பாலுடன் கலந்து பருகவும்.
Also related to:
முருங்கைபிசின் ,murungai pisin,murugai pisin health benefits in tamil uses ,murunkai pisin,murungai pisin powder price online where to buy drumstick tree leaves resin