புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

கற்றாழை-மூலிகை மருத்துவம் katralai benefits and uses


  கற்றாழை-மூலிகை மருத்துவம்(katralai benefits and uses)


இயற்கை கொடுத்த அதிசயங்களில் ஒன்று கற்றாழை என்கின்ற மூலிகையாகும். சித்தர்களால் போற்றப்பட்ட மூலிகைகளில் ஒன்று. இதை கன்னி என்றும், குமரி என்றும் சித்தர்களால்  அழைக்கப்பட்டிருக்கிறது.

 இது உச்சி முதல் பாதம் வரை உள்ள பல நோய்களை தீர்க்கும் மருத்துவ குணங்களை கொண்ட காயகற்ப மூலிகை ஆகும்

 

கற்றாழையில் பல வகைகள் உண்டு. அவைகள் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங் கற்றாழைபேய்கற்றாழை, கருங் கற்றாழை, ரயில் கற்றாழை என்பதாகும். இதில் சோற்றுக்கற்றாழை மற்றும் சிறு கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. சிறு கற்றாழை மருத்துவ பயன்பாட்டிற்காக, மற்றும் காஸ்மெட்டிக் பொருட்கள் தயாரிப்பிலும் முதன்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.சோற்றுக்கற்றாழை மருத்துவ குணத்துக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலான   கற்றாலைகள்  கிடைக்காததால் சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது

 

 இதில் சோற்றுக்கற்றாழையை நாம் கிராமப்புறங்களில் உள்ளது வேலி ஓரங்களில் பார்க்க முடியும். இதுவும் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை கீழே பார்ப்போம். சோற்றுக் கற்றாழை மேல் உள்ள தோலை நீக்கி விட வேண்டும். பிறகு உள்ளிருக்கும் ஜெல் அல்லது சதைப்பகுதியை 7 முதல் 10 முறை நன்றாக கழுவ வேண்டும். இதன்பிறகு அதை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு கழுவும் போது அதில் உள்ள கசப்பு மற்றும் உடலுக்கு ஒவ்வாத தன்மைகள்   நீங்கிவிடும் என்று கூறுகிறார்கள்

ஆலோவேரா (Aloe vera)  இதனுடைய தாவரவியல் பெயர் ஆகும்

 

தாம்பத்திய உறவு மேம்பட:

 

 சோற்றுக்கற்றாழை வேர்களை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவேண்டும். பிறகு அதை ஆவியில் இட்லி வேக வைப்பது போல் வேக வைத்து, பிறகு காய வைத்து, பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். வார் பொடி செய்த சூரணத்தை  ஒரு டீஸ்பூன் எடுத்து பாலில் கலந்து குடித்து வந்தால் தாம்பத்திய உறவு மேம்படும் என்று கூறுகிறார்கள். மேலும் இது தாம்பத்திய உறவுக்கான அதிக அளவிலான சக்தியை கொடுக்கும் ஒரு மாமருந்தாகும்.

 

கூந்தல் வளர:

 இன்றைய காலகட்ட நடிகை முதல் அனைவராலும் விரும்பப்படும் மூலிகைகளில் ஒன்று கற்றாழை. ஏனென்றால் இது சருமப் பராமரிப்பிற்கும் கூந்தல் வளர்ச்சிக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

 இதை பயன்படுத்த 3 கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு அதனுடன் படிக்காரத் தூளை துளி வைத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது ஜெல்லில் உள்ள நீர் வெளியேறிவிடும். பிறகு அதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது எல் எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினசரி தலைக்கு தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.

 

. கரும்புள்ளிகள் முதல் சேவிங் லோசன் வரை:

 

 பெரும்பாலான  பெண்கள் முகத்தில் ஏற்படும் அழகு பிரச்சனைகளில் ஒன்று கரும்புள்ளி மற்றும் சரும வறட்சி ஆகும். இதைப் போக்குவதற்கு கற்றாழை ஜெல்லை எடுத்து தடவி வந்தால் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.

 மேலும் ஆண்களுக்கு சவரம் செய்யும் பொழுது ஏற்படும் காயங்கள் மற்றும் எரிச்சலைப் போக்குவதற்கு கற்றாழைச் சோற்றை எடுத்து தடவினாலே நல்ல பலன் கிடைக்கும்.

 மேலும் இது தீக்காயங்களுக்கும் மருத்துவ மருந்தாக பயன்படுகிறது என்று கூறுகிறார்கள்.

 

 ஹெர்பல் பாத்திங் ஆயில் தயாரிக்க:

 

நாம் இயற்கையாக முறையில் வரும்  குளியல்பொருட்களை பயன்படுத்தினால்   நமது சருமத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். அவ்வாறு கற்றாழையிலிருந்து நாம்  மூலிகை குளியல் பொருளை தயாரிக்கலாம். அதற்கு அரை கிலோ கற்றாழை சோற்றுப் பகுதியை எடுத்துக் கொள்ள வேண்டும் அதனுடன் அவர்களிடம் நல்லெண்ணெய் கலந்து வெயிலில் வைத்து விட வேண்டும். இவ்வாறு வைத்த எண்ணெயை 30 நாட்கள் கழித்து எடுத்து வாசனை கலந்து பிறகுவடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை குளியலின் போது பயன்படுத்தினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்

வற்றாக் குமரிதன்னை வற்றலென உண்ணிவஞ்சீர்முற்றாக் குமரியென மூளுமே - நற்றாக்குந்திண்மையு மல்லாத் தெரிவையமே யானாலுமுண்மைமிகு நூறாம் ஆயுள்.- தேரன் வெண்பா

 

சோற்றுக் கற்றாழையில் உள்ள நீரானது வற்றாத தன்மையுடையதுஅவ்வாறு உள்ள சோற்றுக்கற்றாழை நன்றாக உலர்த்தி பிறகு பொடியாக செய்து வைத்துக்கொண்டு  உண்டு வந்தால் என்றும் இளமையாகவும், நூறு ஆண்டு வரையிலும் வாழும் சக்தியைக் கொடுக்கும். இது முழுக்க முழுக்க உண்மை இதில் எந்த ஒரு பொருளும் இல்லை என்று இந்த பாடல் வரிகள் குறிப்பிடுகிறது .

 சோற்றுக்கற்றாழை 98.5%  நீர்ச்சத்தையும்,.0.3%  கார்போஹைட்ரேட் போன்றவற்றையும் உள்ளடக்கியது.

 

சோற்றுக்கற்றாழை உடன் இனிப்பு சேர்த்து  சாப்பிட்டு வந்தால்  மலச்சிக்கல், மூட்டு வலி, தலைவலி, சர்க்கரை நோய் போன்றவை குணமாக கூறுகிறார்கள்.மேலும் இது மூல நோய் உள்ளவர்களுக்கு மா மருந்தாக பயன்படுகிறது.

 

கற்றாழையில் உள்ள சத்துப் பொருட்கள் மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதற்கு கற்றாழை ஜெல்லை வலியுள்ள மூட்டுகளில் மீதும் தடவியும் மற்றும் கற்றாழை உட்கொண்டு வந்தால் மூட்டுகள் நன்றாக இயங்குவதற்குத் தேவைப்படும் தினமும் உற்பத்தியாவதற்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

 எவ்வளவுதான் அது மருந்து பொருளாக இருந்தாலும் அதை சரியான அளவு மற்றும் யார் யார் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

அதிக அளவில் பயன்படுத்தும் போது நீர்ச்சத்து  குறைபாடுமற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது.

அதன் பட்சத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் முன்  கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் கற்றாழையை கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

 

காற்றாலையின் பொதுப்பயன்கள்:



கற்றாழையின் சோற்றுப் பகுதியை தினமும் அளவோடு உண்டு வர கண்பார்வை தெளிவாகும் என்று கூறும் கூறுகிறார்கள்.

 

கற்றாழையின் ஜெல்லை சாப்பிட்டு மற்றும் வெளிப்புறமாக பூசிவந்தால் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும் சிறுநீர் தாரையில் எரிச்சல் குணமாகும் என்று கூறுகிறார்கள்.

 

 தினமும் கற்றாழை சோற்றுப் பகுதியை சாக்லேட் அளவுக்கு நன்றாக கழுவி சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள கழிவுகள் நீங்கி வயிறு சுத்தமாகும் என்று கூறுகிறார்கள்

 

கற்றாழை சோற்றுப் பகுதியை மோரில் கலந்து தினமும் குடித்துவர  உடல் சூட்டினால் ஏற்படும் வரட்சி மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள்,முகக் கருமை, போன்றவை குணமாகி முகம் பொலிவாகும்.

   mooligai katralai