.இத்தனை நோய்க்கு கருப்பு தங்கம் மிளகு மருந்தா ????
நம் கையில் 10 மிளகு இருந்தால் நமது பகைவன் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்று சொல்வார்கள் நமது முன்னோர்கள். காரணம் மிளகானது நஞ்சை முறித்து உயிரை காக்கும் தன்மை உடையது. மேலும் உணவில் மிளகு சேர்க்கும் போது உணவின் சுவை மற்றும் மணம் அதிகரிக்கிறது. மிளகு நமது நாவில் உள்ள சுவை நரம்புகளையும், உமிழ்நீர் சுரப்பிகளையும் தூண்டுகிறது. ஆதலால் மிளகை “கருப்பு தங்கம்” என்று நமது முன்னோர்கள் அழைக்கின்றனர்.
மிளகின் மருத்துவ குணங்கள்:-
1செரிமான பிரச்சனைகள்:-
பொதுவாகவே மிளகு ரசம் நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் ஒருவகை உணவுப்பொருள். இது அளவுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் உடையது. நமது உடலின் செரிமானத்தை சரி செய்து குடலை பலப்படுத்த உதவுகிறது. மேலும் வாயுத்தொல்லை, அஜீரணம் ஆகியவற்றை தடுக்கிறது.
2வீக்கம் மற்றும் வலி:-
மிளகு இலை மருத்துவகுணங்கள் உடையது. மிளகு இலை மற்றும் நொச்சி இலை இரண்டையும் ஒன்றாக சேர்த்து நீரில் கொதிக்கவைக்க வேண்டும். பின்னர் அதை கால் வீக்கம், கால் வலி மற்றும் அடிபட்ட இடத்தில் இந்த நீரை கொண்டு ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி நீங்கும்.
3காய்ச்சல்:-
இரண்டு மிளகு இலை, லவங்கம் மற்றும் ஒரு வெற்றிலை ஆகியவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனை சுண்டைக்காய் அளவு உருண்டையாக எடுத்து காலை மற்றும் மாலை என்று இருவேளையும் கொடுத்து வந்தால் விட்டு விட்டு வரும் காய்ச்சல் சரியாகும்.
4மாதவிடாய் கோளாறுகள்:-
பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாய் கோளாறுகள் சரியாக தொடர்ந்து 48 நாட்கள் ஐந்து மிளகோடு ஒரு கழற்சிக்காய் தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். இதனால் முறையற்ற மாதவிடாய் கோளாறு சரிப்படும். மேலும் இந்த மருந்தை அதிக ரத்தப்போக்கு உள்ள நாட்களில் தவிர்த்தல் நலம்.
5மலச்சிக்கல்:-
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர்க்கு மிகவும் தொல்லையாக இருப்பது மலச்சிக்கல். மலச்சிக்கல் மற்றும் மூலம் குணமாக மிளகு போடி கால் ஸ்பூன், சோம்பு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து காலை மற்றும் மாலை என இருவேளை சாப்பிட வேண்டும். இதனால் மலச்சிக்கல் விரைவில் சரியாகும்.