Kudal pun maruthuvam
குடல் புண் மருத்துவம்
பசித்தும் உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இரைப்பையில்
உள்ள அமிலம் அதிகமாக சுரக்கத் தொடங்கி குடலில் புண் வர வாய்ப்பு உள்ளது.
காலை உணவு நம் உடலுக்கு மிகவும் முக்கியமானது இந்த உணவை தவிர்ப்பதால்
குடல் புண் வருவதாக மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
புகையிலை அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள்,
புகைப்பழக்கம் மற்றும் மது அருந்துபவர்களுக்கு குடல் புண் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக
மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பிற நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளான சாலிசிலேட் மற்றும் ஆஸ்பிரின்
மருந்துகள், வலி நிவாரண மருந்துகள் போன்றவைகளும் குடல் புண்ணை ஏற்படுத்தும்.
நமக்கு உண்ணும் உணவைப் போலவே காற்றும் நீரும் மிகவும்
முக்கியமானது. இந்த காற்றும் நீரும் மாசுபட்டு இருந்தாலும் குடல் புண் வருவதற்கு
வாய்ப்பு இருக்கிறது, காசு இருந்தால் ஹெளிகோபாக்டர் பைலோரி (Helicobactor
pylori) என்ற பாக்டீரியா உற்பத்தியாகி உடலில் குடல் புண் வருவதற்கு காரணமாக இருக்கும் .
அதிக மசாலா கலந்த உணவுகள், கார உணவுகள், துரித உணவுகள்(foods), மற்றும்
எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் குடல் புண்
வருவதற்கு வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இரண்டு வகையான குடல் புண் உள்ளது. அதில் வாய் வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் அதன் பெயர் கேஸ்ட்ரிக் அல்சர் என்றும், சிறு குடலில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்றும் ஆங்கிலத்தில் Duodenal ulcer என்றும் பிரித்திருக்கிறார்கள். பொதுவாக குடல் புண்ணை பெப்டிக் அல்சர் என்று அழைக்கிறார்கள்.
குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?\
kudar pun kandarivathu eppadi??
குடல் புண்ணை வயதில் ஏற்படும் வலியை வைத்து தோராயமாக கண்டறியலாம். வலியானது வயிற்றின் மேல் பகுதியில் ஏற்பட்டு சாப்பிட்ட பின் அது குறைந்தால் அது டியோடினல் அல்சர் என்றோம் வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் அது கேஸ்ட்ரிக் அல்சர் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
மேலும் இதன் அறிகுறிகளான. வாந்தி. குமட்டல், திடீரென எடை குறைதல், பற்களை படிக்கத் தோன்றும்போன்ற உணர்வு, போன்றவைகளாகும்.
இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் அதை நாம் உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது மருந்துகள் மூலமாகவும் சரி செய்து கொள்ளலாம்.
குடல் புண்ணால் ஏற்படும் வலியானது காலை உணவிற்கு முன்பு வருவதில்லை என்றும் இரவில் தனது அதிகமாக வருகிறது என்றும் கூறுகிறார்கள். மேலும் இது நெஞ்சு கூட்டுக்கு பின்பகுதியில் ஒருவகையான எரிச்சல் போன்ற உணர்வை ஏற்படுத்துவது இதை நெஞ்செரிச்சல் என்று கூறுகிறார்கள்.
ஒருவருக்கு குடல் புண்ணினால் வலி ஏற்பட்டால் அதை அவர் உண்ணும் அளவை வைத்து கணிக்கலாம். மேலும் இந்த வலியானது சில நாட்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தொடர்ந்து எப்பொழுதாவது வரலாம். மேலும் இது பல வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள் இவ்வாறு இருந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?
kudal punnukku maruthuvam...
குடல் புண்ணால் அது மன அழுத்தத்தினாலும் வர வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். மேலும் ஓய்வு இல்லாமல் இருப்பது, தூக்கமின்மை, தீய பழக்கவழக்கங்கள் போன்றவைகளும் இதற்கு காரணமாக இருப்பதால் இதை சரி செய்தாலே இது குடல் புண்ணை சரிசெய்து விடலாம். அதற்கு நீங்கள் உங்கள் வேலைகளிலிருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டால் இது இதிலிருந்து விட்டு விடுபடலாம். மேலும் உணவை வீடுகளிலேயே சமைத்து உண்ணுவதன் மூலமாகவும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவம் செய்யாவிட்டால்?
குடல் புண்ணால் அது தீவிரமான ஆகி வலி அதிகரித்துவிட்டால் மருத்துவரை அணுகி மருத்துவம் எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். ஏனென்றால் உடலில் சுரக்கும் அமிலமானது உடலிலுள்ள புண்கள் மேல் பட்டு அந்த புண்ணானது மேலும் மேலும் புண்கள் ஆவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள் . மேலும் இதிலிருந்து உருவாகும் நோய் கிருமிகள் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் என்று எச்சரிக்கிறார்கள்
ஆகவே குடற்புண் இருந்தால் அலட்சியம் செய்ய வேண்டாம் உடனடியாக மருத்துவரை சந்தித்து மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்..
செய்யக்கூடாதவை
புகைபிடிக்கக் கூடாது .
மது, காபி பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்
வயிற்று வலியை அதிகப்படுத்தகூடிய உணவுகளை தவிர்க்கலாம்..
அதிகமாகச் சாப்பிட வேண்டாம்
.
பட்டினி கிடப்பது நல்லதல்ல
காரம் ,எண்ணையில் பொரித்த உணவுகள் உண்பதைக் குறைத்துக் கொள்ளவும்.
பின்-இரவு விருந்துகளை தவிர்த்துவிடுங்கள்..
முக்கியமாக சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கவே கூடாது.
சாப்பிட்ட பிறகு உடனே அல்லது சில மணிநேரங்களுக்கு முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால்நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
இரவில் அதிக நேரம் இருக்காமல் தினமும் சராசரியாக 8 மணி நேரம் நன்றாக உறங்கவும்,
கவலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
சாப்பிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் படுக்ககூடாது.
செய்ய வேண்டியவை
குறைந்த அளவில் உணவை மூன்று வேளை சாப்பிடுவதை தவிர்த்து ஐந்து வேளையாக சாப்பிட வேண்டும்,
அதிகம் த நீர் அருந்த வேண்டும்.
செவ்வாழை போன்ற வாழைப்பழங்களை உண்ணலாம்.
தயிர் போன்ற அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் லெஸ்லி உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.
மருத்துவர் கூறிய அறிவுரைகள் மற்றும் சிகிச்சைகள் ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.
இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.
இரவில் தூங்கும் போது தலைப்பகுதியை சற்று உயரமாக வைத்து தூங்கினால் அல்லது.
யோகாசனம், தியானம் ,மூச்சுப்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்யலாம்..
கவலைகளை விட்டு மகிழ்ச்சியாக இருப்பது சிறந்தது.
சுத்தம் மற்றும் சுகாதாரத்தை நன்கு பராமரித்து கொள்வோம்.
அலுவலக ஏற்படும் மன மிருகங்களில் இருந்து வெளிப்பட்டு அமைதியாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.
சாப்பிட வேண்டியவை
பொரித்த அல்லது தாளித்த உணவுகள் குடற்புண்ணை அதிகப்படுத்தும் என்பதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை என்பதால் அதை அளவாக எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவ ஆலோசனையின்படி கூறிய சத்தான சரிவிகித உணவுகளை பசித்த மற்றும் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வது சிறந்தது.
காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
தினமும் குடிக்கும் டீயின் அளவை குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுக்கு ஒவ்வாத உணர்வுகளை ஒதுக்கி விடுவது நல்லது.
குடல்புண் உள்ளவர்கள் மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது மற்றும். குளிரூட்டப்பட்ட உணவுகளான தயிர் முதலியன நல்லது.
அதிகம் பழுக்காத ஓரளவு பச்சையான வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருப்பதாக கூறுகிறார்கள்.
வெந்நீருக்கு பதிலாக பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.
வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்பட்டால் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடும்.
பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது.
கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள்
தங்க நகை கடன் குறைந்த வட்டியில் பெறுவது எப்படி??
முருங்கைபிசின் மருத்துவ குணங்கள்
|
|