ஈறுகளில் இரத்தம் கசிவு - தடுக்கும் வழிகள்
உப்பு(salt method )
பல் ஈறுகளில் அலர்ஜி இருந்தாலும் அதில் ரத்தம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு ஏற்படும் அலர்ஜி களிலிருந்து காத்துக் கொள்ள அதை வீட்டில் இருக்கும் பொருளான உப்பை கொண்டு சரி செய்து விடலாம். அதற்கு நீங்கள் அரை ஸ்பூன் அளவுக்கு உப்பை வெந்நீரில் கலந்து அந்த நீரை காலையிலும் மாலையிலும் வாய் கொப்பளித்தால் போதும் .வாயில் உள்ள நுண்கிருமிகள் அழிந்து ஈறுகளில் ஏற்படும்வ்வ் வீக்கத்தை குறைக்கும் வல்லமை கொண்டது. மேலும் தொடர்ந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.
ஆயில் புல்லிங்
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பல் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு
தீர்வு காணலாம் என்பதை நாம் அறிவோம். அதில் ஒன்றுதான் எண்ணெய் கொப்பளித்தல். வீட்டில்
உள்ள நல்லெண்ணை என் வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு வாய்க்கொப்பளித்து
முடித்தவுடன் வெந்நீரில் வாய் கொப்பளித்தால் ஈறு சம்பந்தமான நோய்கள் சரியாகும் என்று கூறுகிறார்கள்.
ஈறு வலி மற்றும் ஈறுகளில் ஏற்படும்
வீக்கம் போன்றவற்றை சரிசெய்ய மஞ்சள் உதவியாக இருக்கும். மஞ்சளில் உள்ள
கர்குமின் என்ற வேதிப்பொருள் இதை சரி செய்கிறது. ஈரு அலர்ஜிக்கு மஞ்சளுடன் வைட்டமின் ஈ
உள்ள எண்ணெய்யை கலந்து ஈறுகளின் மீது பூசவும் பிறகு 15 நிமிடங்கள் கழித்து வாயை நன்கு
கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்தால் ஈறு வலி மற்றும் ஈறுகளில் ஏற்படும் வீக்கம், ஈறுகளில் ஏற்படும்
எரிச்சல் போன்றவை குணமாகும் என்று கூறுகிறார்கள்.
எலுமிச்சை பழத்தை பல தொந்தரவுகளுக்கு
நாம் பயன்படுத்துவோம். இதை ஈறு வலி மற்றும் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றை
தடுக்க எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றால் பல் துலக்கிய பிறகு எலுமிச்சை சாறு கலந்த
நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். வாய் கொப்பளிக்கும் பட்சத்தில் ஈறு சம்பந்தமான தொந்தரவுகள்
சரியாகும் என்று கூறுகிறார்கள்.
கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள்