சிறுபீளை பயன்கள் . sirupeelai benefits tamil
1) மூலிகையின் பெயர் -: சிறுபீளை.
2) வேறுபெயர்கள் -: சிறுகண்பீளை, கண் பீளை, கற்பேதி,பெரும் பீளை
என்ற இனமும் உண்டு.
3) தாவரப்பெயர் -: AERVALANATA.
4) தாவரக்குடும்பம் -: AMARANTACEAE.
5) தாவர அமைப்பு -: இந்தியாவில் ஈரப்பதமான இடங்களில் வளர்க்
கூடிய சிறு செடி வகையைச் சார்ந்தது. இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் சிறியதாக இருக்கும்.
6.இதனுடைய பூக்கள் தண்டை ஓட்டி அவள் போன்ற வடிவத்தில் இருக்கும் இதனுடைய எல்லா பாகங்களும்
மருத்துவ குணம் கொண்டது
7) செய்கை -: இது சிறு நீரைப் பெருக்கி, கற்களை கரைக்கும்செய்கை
உடையது.
8) மருத்துவப் பயன்கள் -:
இதனுடைய இலைச்சாறை எடுத்து அதை 15 மில்லி வீதம் மூன்று வேளை அருந்திவந்தால்
நீர் எரிச்சல் நீரடைப்பு மாதவிலக்கின் போது பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு
போன்றவற்றை குணப்படுத்தும் . கருவுற்ற பெண்களுக்கு உடல் தளர்ச்சியை நீக்கி
உடலுக்கு வன்மையை கொடுக்கும்
சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக எடுத்து
நன்கு அரைத்து 200மி.லி.பசும் பாலுடன் சேர்த்துதினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால்
நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய நோய்கள்குணமாகும்.
பெரும் பீளை வேரைத்தட்டி 1/2பலம் எடைக்கு
ஒரு குடுவையில்போட்டு 1/2சலம் விட்டு வீசம் படியாகச் சுண்டகாய்ச்சி வடிகட்டி வேளைக்கு
1 - 1.5 அவுன்ஸ் அளவு தினம் 2 -3 வேளை உட்கொள்ள நீர்கட்டு, கல்லடைப்பு,
சதையடைப்பு குணமாகும்.