புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம்.. horai timings today in tamil

Horai timings today  in tamil

Horai timing என்றால் என்ன? சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம்..!! 


 ஆன்மீகத் தகவல்களில் நாம் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்றைக்கு ஹோரை பற்றி காண்போம்.  ஹோரை தான் ஆங்கிலத்தில் hour என்று மாற்றப்பட்டது. ஹோரை உண்டான மகத்துவம் என்ன? இன்றைய நாள் சரியில்லை என்றால் இந்த மாதம் நல்லா இருக்கா என்று பார்க்க வேண்டும் அதுவும் சரியில்லை என்றால் லக்னம் நன்றாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். சரி இல்லை என்றால் இப்பத நொடி  நல்லா இருக்கா என்று பார்க்க வேண்டும்.அவ்வாறு பார்ப்பது ஓரை என்று அழைக்கப்படுகிறது. 


இந்த ஹோரையை பார்க்கும் பொழுது நமக்கு எந்தவித பாதிப்புகளும் கிடையாது. ஏனென்றால் பூர்ணமாக ஒரு நாளைக்கு ஏழு ஹோரைங்களும் பாத்தீங்கன்னா அதாவது ஏழு கிரகங்களுக்கு கொடுக்கப்பட்ட ஹோரைகள் மாற்றி மாற்றி வரும் பொழுது அந்த கிரகத்தின் உண்டான ஆக்கக்ஷனத்தில் இருக்கும்.


இந்த ஹோரையில் இது தான் பண்ணவேண்டும் இந்த ஹோரையில் இது பண்ண கூடாது என்று தனித்தனியாக பிரித்து வேலைகளை செய்யக் கூடியது நல்ல பலன்களைத் தரக் கூடியதாக இருக்கும். 


சுப ஓரைகளின் விளக்கம் :


ஞாயிற்றுக்கிழமை

 

     ஞாயிற்றுக்கிழமை மருத்துவம் சம்பந்தப்பட்ட முடிவுக்கு  உகந்த நாளாகும்.ஞாயிற்றுக்கிழமையில் மருந்துகளை உட்கொண்டால் விரைவில் குணமாகும். பெரியோர்களை சந்தித்து பேசலாம்.பெரியோர்களின் ஆலோசனையை கேட்கலாம். அதேபோல் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளைக் கேட்டுப் பெறலாம். மருந்திற்கு உகந்த நாள் ஞாயிற்றுக் கிழமை என்று கூறலாம். 


திங்கட்கிழமை


  புதிய ஆடைகள் வாங்கலாம்.புதிய தொழில் தொடங்கலாம். புதிய வியாபாரங்கள் தொடங்கலாம். மணமகள் பார்ப்பதற்கு மணமகன் பார்ப்பதற்கு திங்கட்கிழமை உகந்த நாளாகும். அதேபோல் வங்கியில் கடன் கேட்பதற்கு திங்கட்கிழமை உகந்த நாளாகும். அதேபோல் வழக்கு தொடர்பாக வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வக்கீலை சந்தித்துப் பேசலாம். 


செவ்வாய்க்கிழமை


  அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் செவ்வாய்க்கிழமை ஈடுபடலாம். ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்கள் அதைக் கொண்டு பயிற்சி செய்வதற்கு உகந்த நாளாகும். அதேபோல் மொபைல்போன்,லேப்டாப்,இன்டர்நெட் போன்ற மின்னணு சாதனங்கள் வாங்குவதற்கு உகந்த நாளாகும். 


புதன்கிழமை


  புதிய கலைகள் எல்லாம் பயிலலாம். புதிய பணி அல்லது தொழிலில் ஈடுபடுவது புதன்கிழமை உகந்த நாளாகும். கலைத் துறை சம்பந்தப்பட்ட செயல்களில் ஈடுபடலாம். புதிய கணக்கு எழுதுவது தொடர்பாக அன்றைய நாள் செய்யலாம். புத்தகங்கள் வெளியிடலாம். நகையை உருக்கி புது நகை செய்யலாம். 


வியாழக்கிழமை


  புதியதாக வேலையில் சேர்வது அல்லது ரெகமெண்டேஷன் கேட்பதற்கு வியாழக்கிழமை உகந்த நாளாகும். கடன் கேட்கலாம்.கடன் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கலாம். அதேசமயம் ஏற்கனவே உள்ள கடன்களை அடைப்பதற்கு முயற்சி செய்யலாம். புதிய ஆடைகள் வாங்கலாம். தையல் பயிற்சி நிலையம் மற்றும் கல்வி நிலையங்கள் தொடங்குவதற்கான உகந்த நாளாகும்.


வெள்ளிக்கிழமை

 

  சுப காரியங்கள் செய்யலாம் மற்றும் சுப காரியங்களில் ஈடுபடலாம். திருமண சம்பந்தம் மற்றும் திருமண நிச்சயதார்த்தம் பற்றிய பேச்சு வார்த்தைகளுக்கு ஏற்புடைய நாள். கட்டிட வேலைகள் தொடங்கலாம். ஜவுளிக்கடை,நகைக்கடை,வாசனை திரவியங்கள் கடை,ஆகிய கடைகள் தொடங்கலாம். தயாரிப்பு நிறுவனங்கள் கட்டலாம்.கோவில் கட்டலாம் என்ற பேச்சு வார்த்தைகளுக்கு உகந்த நாள். 


சனிக்கிழமை


  சுப காரியங்களுக்கு வெளியூர் செல்லலாம்.கறிக்கடை,சிமெண்ட்,செங்கல்,ஜல்லி போன்ற கடைகளில் நாளில் தொடங்கலாம். மதுபான கடைகள் தொடங்கலாம்.குளிர்சாதனப் பொருட்கள் கடைகள் தொடங்கலாம். விளம்பரங்கள் செய்யலாம் அல்லது விளம்பரங்கள் செய்யும் நிறுவனங்கள் தொடங்கலாம்.











ஏகாதசி நாட்கள் ekadashi dates 2022



சிவராத்திரி 2022  maha shivaratri date



பிரதோஷம் நாட்கள்   2022  pradosham dates


கார்த்திகை நாட்கள்  2022 karthigai dates



சங்கடகர சதுர்த்தி நாட்கள் 2022 sangada hara chaturthi dates


கிரிவலம்  நாட்கள் 2022 girivalam dates 



அம்மாவாசை விரத தினங்கள்  மற்றும் நேரம் 2022 amavasai  



 பௌர்ணமி நாட்கள் 2022 pournami dates 2022 



சுப ஓரை மற்றும் சில ஓரை களின் விளக்கம் 2022.. horai timings today  in tamil



பண்டிகை விடுமுறை நாட்கள் 2022 festival  holidays tamilnadu



வாஸ்து நாள் 2022 vastu seyyum naal dates or days This month



மனையடி சாஸ்திரம் manaiyadi sasthiram 





Post a Comment

0 Comments