கபசுர குடிநீர் பொடியை எப்படி பயன்படுத்துவது?? kabasura kudineer benefits tamil
காய்ச்சல் , சளி போன்றவற்றை குணப்படுத்தும் என்பதால் கபசுரம் என்று பெயர் பெற்றது..கபசுரக் குடிநீர் 15 வகையான மூலிகைகளை கொண்டு தயாரிக்கப் படுகின்றன. இந்த குடிநீர் மனிதனின் சுவாச குழாயில் ஏற்படும் தொற்றுக் கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது. இது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. மேலும் சுக்கு, ஆடாதொடை இலை, கடுக்காய் தோல், கற்பூரவள்ளி, நிலவேம்பு போன்ற 15 மூலிகைகள் இதில் கலந்துள்ளதாக சித்த மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
இந்த குடிநீரை காய்ச்சல் மற்றும் சளி முன்னெச்சரிக்கையாக அருந்தலாம் என்று கூறுகிறார்கள். இவ்வாறு அருந்தும்போது உடலில் உள்ள சளி வெளியேறி நுரையீரலை பாதுகாக்கிறது. மேலும் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இது அருந்தலாம்.
இந்த குடிநீரை யார் யார் குடிக்கலாம், எப்போது குடிக்கலாம் யார் யார் குடிக்கக் கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
இந்த குடிநீரை உணவு சாப்பிட்டபின் குடிக்கக்கூடாது. இதை வெறும் வயிற்றில் குடிக்கச் சொல்கிறார்கள். இந்த குடிநீர் குடிக்கும் பொழுது இளஞ் சூடாக குடிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் மேலும் இதை. ஆரோக்கியம் என்று நினைத்து அடிக்கடி எடுத்துக் கொள்ளக்கூடாது.
இதைதன்னார்வ தொண்டு நிறுவனங்கள் குடிநீராகவும் அல்லது பொடியாகவோ பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள். அவ்வாறு கொடுக்கும் பொடியை அவ்வாறு கொடுக்கும் பொடியை எவ்வாறு
குடிநீராக காய்ச்சுவது என்பதை கீழே பார்ப்போம்.
5 கிராம் கபசுர பொடியை எடுத்துக் கொண்டு அதை 5 டம்ளர் நீரில் கலந்து கொண்டு கொதிக்க வைக்க வேண்டும். அவ்வாறு கொதிக்க வைக்கும் நீரானது பாதி அளவு சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை காலை மாலை என்று ஐந்து பேர் ஐந்து நாட்களுக்கு அரை டம்ளர் வீதம் குடிக்கலாம் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள்
தங்க நகை கடன் குறைந்த வட்டியில் பெறுவது எப்படி??
முருங்கைபிசின் மருத்துவ குணங்கள்
|
|
ஈறுகளில் இரத்தம் கசிவு - தடுக்கும் வழிகள்
|
மூச்சுத் திணறல் moochu thinaral
|
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> |
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com