Sundaikai benefits Tamil
சுண்டைக்காய் மருத்துவ பயன்கள்
சுண்டக்கா என்பது நம் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு காய் மற்றும் மருத்துவ குணம் கொண்ட ஒரு மூலிகை என்று சொல்லலாம்.
என்னப்பா நீயெல்லாம் எனக்கு ஒரு சுண்டக்கா மாதிரி என்று ஒரு சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள் அவ்வாறு சொல்லும்போது சுண்டக்காயின் சிறிய அளவு நமக்கு நினைவுக்கு வரும் ஆனால் அது சிறியதாக இருந்தாலும் அதனுடைய மருத்துவ பயன்கள் ஏராளம்.
இது உடலில் உள்ள சளியை வெளியேற்றவும் நோய்க்கிருமிகளை விரட்டி விரட்டி வெளியேற்றவும் வாத நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது என்று அகத்தியர் தன்னுடைய நூலில் குறிப்பிட்டுள்ளார்.குடலில் உள்ள புழுக்களை அழித்து வெளியேற்றும் தன்மை மருத்துவ குணம் கொண்டது.
சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அது வயிறு சம்பந்தமான அனைத்து கோளாறுகளையும் நீக்க வல்லது.சுண்டைக்காயை அடிக்கடி சேர்த்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஏனென்றால் இது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்கிறது வெள்ளை அணுக்கள் அதிகரிக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
உடலில் ஏற்படும் காயம் மற்றும் புண்களை விரைவில் ஆற்றும் மருத்துவத் தன்மை கொண்டது சுண்டைக்காய்.வாரத்துக்கு இருமுறை சுண்டைக்காயை உணவில் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்து வரும்போது குழந்தைகளின் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறும்.
நாட்பட்ட நெஞ்சு சளி வறட்டு இருமல் ஆஸ்துமா போன்ற நோயுடையவர்கள் தினமும் ஒரு 20 சுண்டைக்கா வத்தலை எடுத்துக்கொண்டுநல்லெண்ணையில் வதக்கி சாப்பிட்டு வர ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகளும் சரியாகும்.
உடலில் ஆங்காங்கு வாய்வுப்பிடிப்பு ஏற்படு பா வர்கள் சுண்டக்காயை எடுத்துக்கொண்டால் கை கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் ஏற்படும் வாய்வு பிடிப்புகள் சரியாகும்.
மூலம் உள்ளவர்களுக்கு ஏற்படும் மூலச்சூடு வயிற்று உபாதைகள் போன்றவற்றிற்கு வாரம் மூன்று முறை சுண்டைக்காய் நெய்யில் வதக்கி சாப்பிட்டு வர மூலத்தில் ஏற்படும் கடுப்பு மற்றும் மூலத்தினால் ஏற்படும் ரத்தக் கசிவு போன்றவை சரியாகும் புளித்த ஏப்பம் மற்றும் உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளையும் சரியாக்கும் வல்லமை கொண்டது.
சுண்டக்காய் சூரணத்தை ஒரு ஸ்பூன் அளவிற்கு மோரில் கலந்து தினமும் குடித்து வர வயிற்று சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நீங்கும் இந்த சூரணத்தை நாட்டு மருந்துக்கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
சுண்டைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது மேலும் இது சர்க்கரையினால் ஏற்படும் கை கால் நடுக்கம் உடல் சோர்வு மயக்கம் போன்றவைகளுக்கும் நல்ல தீர்வாக அமையும் என்று சொல்கிறார்கள்
சுண்டைக்காய் வற்றலை எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டுவர தீராத மார்புச்சளி மற்றும் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நீங்கி உடல் சுத்தமாக மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் வல்லமை கொண்டது
நாம் உண்ணும் அறுசுவைகளில் கசப்புத் தன்மையுடைய உணவுகள் ஆனது பெரும்பாலும் மருத்துவ குணம் கொண்டது சுண்டக்காய் என்பது ஒரு கசப்புத் சுவை உடைய ஒரு காய்
நாம் இதை உணவுகளில் குழம்புகளில் குளம்புகளில் வைத்தோ அல்லது சுண்டைக்காய் வத்தல் தயாரித்தோ உணவில் எடுத்துக் கொண்டு உடல்நலத்தை பாதுகாக்கலாம்.
200 gm Sundaikai price= Rs .10
You can get
details of Sundaikai health
benefits in tamil, Sundaikai medical uses in tamil, Sundakkai nanmaigal in tamil, Sundaika payangal
in tamil, Sundakka
etharku payanpadukirathu, Sundaikai ulla sathukal, Sundaikai engu kidaikkum, Sundaikai vilai/price/rate, Sundaikai,Sundaikai turkey perry oil,Sundaikai ennai
கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள்
தங்க நகை கடன் குறைந்த வட்டியில் பெறுவது எப்படி??
முருங்கைபிசின் மருத்துவ குணங்கள்
|
|
ஈறுகளில் இரத்தம் கசிவு - தடுக்கும் வழிகள்
|
மூச்சுத் திணறல் moochu thinaral
|
|
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com