புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

திருமணம் நடக்க எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?

 திருமணம் நடக்க எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?


தமிழர்களின் மிகச்சிறப்பான பண்பாடுகளில் ஒன்று வீட்டில் மற்றும் கோயில்களில விளக்கு ஏற்றுவது.குறிப்பாக திருமணம் மற்றும் விசேஷ நாட்களில் விளக்கை வீட்டில் ஏற்றினால் மிகுந்த நற்பலன்களை கொடுக்கும் என்பது காலம் காலமாக பின்பற்றப்படும் முறையாகும்.

விளக்கில் பல வகைகள் உண்டு அதாவது மண் விளக்கு, மாவிளக்கு .கல் விலக்கு, வெண்கல விளக்கு இரும்பு விளக்கு, எலுமிச்சை விளக்கு ,போன்றவை ஆகும்.


வடக்கு திசையை நோக்கி விளக்கு ஏற்றினால் திருமணத்தடை விலகும்.கடன் தொல்லை மற்றும் தோஷங்கள் நீங்க ,விளக்கை மேற்கு திசையில் ஏற்ற வேண்டும்.குடும்பம் விருத்தியாக கிழக்கு திசையில் விளக்கை ஏற்ற வேண்டும்.தெற்கு திசையை நோக்கி விளக்கை ஏற்றக்கூடாது என்று முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர்.


நல்லெண்ணையில் விளக்கு ஏற்றினால் உடல் ஆரோக்கியம் மேம்படும். நெய்யில் விளக்கு ஏற்றினால் செல்வ வளத்தை பெருக்கும்,நினைத்த காரியம் வெற்றி பெறும். வசீகரத்தை உண்டு செய்ய தேங்காய் எண்ணெயில் விளக்கு ஏற்ற வேண்டும்.


 சகலகாரியத்திலும் வெற்றிக்கு இலுப்பை எண்ணெயிலும்,புகழ் உண்டாக விளக்எண்ணெயிலும் வீட்டில் தீபம் ஏற்றினால் கிடைக்கும்.வேப்ப எண்ணெயில் விளக்கு ஏற்றினால் கணவன், மனைவி ஒற்றுமையை உயரும்.



இந்த 5 எண்ணெய்யும் ஒன்று சேர்த்து ஏற்றக்கூடிய பஞ்சக்கூட்டு எண்ணெய்யில் ஏற்றினால் தெய்வ கடாட்சமும், குலதெய்வ அருளையும் பெற்று தரும்.


காலையில் சூரியன் உதயம் ஆவது ஆவதற்கு முன் அதாவது நாலரை மணி முதல் 6 மணிக்குள் விளக்கு ஏற்றினால் மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.அதேபோல் மாலையில் சூரியன் மறைந்த பிறகு அதாவது ஆறு மணிக்கு மேல் விளக்கு ஏற்றினால் சிறப்பு.இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு முகம் கிழக்கு நோக்கியும் ,ஏற்றுபவர் மேற்கு திசையை பார்த்தும் இருந்தால் மிகுந்த சிறப்பு என்று கூறுகிறார்கள்.


இறந்தவர் படத்திற்கு விளக்கு ஏற்றினால் விளக்கு முகமனாது வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.



Post a Comment

0 Comments