புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

குவா வாத்து முட்டையில் இவ்வளவு நன்மைகளா? vaathu muttai Duck eggs benefits

 Duck eggs benefits
குவா வாத்து முட்டையில் இவ்வளவு நன்மைகளா?


 vaathu muttai Nanmaigal

நாம் உண்ணும் உணவுகளில் புரதம் நிறைந்த உணவுகளுள் ஒன்று முட்டை.நம்மில் பெரும்பாலானோர் கோழி முட்டையை விரும்பி உண்ணுவது போல்,வாத்து முட்டையும் இப்பொழுது அதிகளவு வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.எப்படி கோழி முட்டைகளில் இல்லாத சத்துக்களே இல்லை என்று சொல்லுவதுபோல் வாத்து முட்டைகளிலும்  ஏராளமான சத்துக்களும், மருத்துவ பயன்களும் உள்ளது என்று கூறுகின்றனர்.

Duck eggs health benefits medical uses in tamil  vaathu vathu muttai muttaiyin payangal nanmaigal price rate vilai recipe Farm வாத்து முட்டை   pannai



ஒரு வாத்து முட்டையில் உள்ள நியூடிரிசீயன்களில் அளவுகள் வருமாறு:


கலோரிகள்: 130

 புரதம்: 9 grams

 கொழுப்பு: 10 grams

 கார்போஹைட்ரேட்டுகள்: 1 gram

 பைபர்: 0 grams

சர்க்கரை: 1 gram 



வாத்து முட்டைக் உள்ள புரோட்டீன்



வாத்து முட்டைக் உள்ள புரோட்டீன் கோழி முட்டைகளில் உள்ள புரோட்டீனை விட அதிகம் என்று கூறுகின்றனர்.வாத்து முட்டை ஒன்று சாப்பிடுவது கோழி முட்டை 2 சாப்பிடு வதற்கு சமம்.



உடலை கட்டுக்கோப்பாக வைக்க:




 வாத்து முட்டையில் உள்ள புரதம்  கோழி முட்டைகளில் உள்ள புரதத்தை விட அதிகமானது.எனவே வாத்து முட்டையை உணவாக எடுத்துக் கொண்டால் அதில் உள்ள புரதமானது உடல் எடையை பராமரிப்பதற்கும்,உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கும்,விபத்து மற்றும் காயங்களிலிருந்து மீள்பவற்கு சத்துகளை பெற உதவுவதற்கும் பயன்படுகிறது என்று குறிப்பிடுகின்றனர்.


மனச்சோர்வு:





மனச்சோர்வு மற்றும் சோர்வு போன்றவைகள்   துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் குறைபாட்டுடன் தொடர்புடையது என்று கூறுகின்றனர் .

வாத்து முட்டைகளில் இந்த மூன்று தாதுக்களும் உள்ளன. வாத்து முட்டைகள் செலினியம்  நிறைந்து காணப்படும் ஒரு உணவாகும்.இது ஒரு முட்டையில் தினசரி மதிப்பில் கிட்டத்தட்ட பாதியை வழங்குகிறது.இந்த முறை சாப்பிட்டால் மன சோர்வு மற்றும் சோர்வுகளில் இருந்து விடுபடலாம்.



பருவகால   பாதிப்பு கோளாறுகள் மற்றும் சோர்வு போன்றவைகள் விட்டமின் டி சத்து குறைபாடுடன் தொடர்புடையது.விட்டமின் டி சத்துக்கள் சூரிய ஒளியிலிருந்து நமக்கு கிடைப்பது போன்று வாத்து முட்டைகள்லும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது.


சரும பராமரிப்பு:





சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு விட்டமின் பி என்பது இன்றியமையாதது என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எட்டு வகையான பி விட்டமின்கள் வாத்து முட்டையில் உள்ளதால் இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவும்.


ஓவொமுகோயிட் ஒவ்வாமை:


ஒரு சில பேருக்கு கோழி முட்டை சாப்பிட்டால் ஒவ்வாமை அலர்ஜி ஏற்படும்.இதற்கு முக்கிய காரணம் முட்டைகளில் காணப்படும் புரதம் ஓவொமுகோயிட் ஒவ்வாமை ஆகும்.


வாத்து முட்டைக்கும் கோழி முட்டைக்கும் என்ன வித்தியாசம்:





வாத்து முட்டை  மஞ்சள், பச்சை ,நீலம்,கருப்பு போன்ற பல வண்ணங்களில் இருக்கும்.மேலும் இது கோழிமுட்டையை காட்டிலும் 50% வரையிலும் பெரியதாக இருக்கும்.இதனால் கோழி முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள வைட்டமினான B12 அளவைக் காட்டிலும் வாத்து முட்டையில் வைட்டமின் அதிகமாக காணப்படும்.


அல்புமின் என்ற நுரைக்கும் புரதம் :





பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பல உணவுப் பொருட்கள் முட்டை கலந்து செய்கின்றனர்.காரணம் அதிலுள்ள  அல்புமின் என்ற புரதம் ஆகும்.இந்த புரதம் வாத்து முட்டை யில் அதிகரித்து காணப்படுகிறது.இதனால் பேக்கரி பொருட்களில் இதை வைத்து கலக்கும் போது அதிக நுரை க்கும் தன்மையுடன் இருப்பதாலும்,ஓவன் களில் அதிக வெப்ப நிலையைத் தாங்கும் தன்மையுடன் இருப்பதால் இது குக்கிஸ் மற்றும் பேக்கிங் மற்றும் பிற பேக்கரி உணவு தயாரிப்பிற்கு ஏதுவாக இருக்கும் என்று கூறுகின்றனர்.



ஒமேகா-3 நிறைந்த வாத்து முட்டை மஞ்சள் கரு:





கோழி முட்டையின் மஞ்சள் கருவில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள்  நிறைந்து காணப்படுகிறது.அதைப்போலவே வாத்து முட்டைகள் அதிலும் மஞ்சள் கரு பெரிதாக இருப்பதால் ஒமேகா 3 ஐ அதிகமாகக் கொண்டிருக்கும்.


கரு வளர்ச்சிக்கு பாதுகாப்பு:





வாத்து முட்டையில் உன்ன வெள்ளைக்கரு கோழி முட்டையிலுள்ள வெள்ளைக் கருவை காட்டிலும் அதிக அளவு ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையை கொண்டுள்ளது. இந்த பண்பு பெண்களுக்கு கரு வளர்ச்சியை தடுக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது என்று கூறுகின்றனர்.


முட்டைகளை பராமரிப்பு:





வாத்து முட்டை கோழி முட்டையை காட்டிலும் 15 நாட்கள் வரை அதில் உள்ள புரதங்களில் தன்மை மாறாமலும் இருக்கும் என்று ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.எனவே இந்த முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறுகின்றனர்.மேலும் வாத்து முட்டையின் ஓடு மொத்தமாக இருப்பதால் இது எளிதில் உடையாத வண்ணமாகவும்,அறை வெப்பநிலையில் அதிக நிலைப்புத் தன்மையுடன் இருப்பதால் வாத்து முட்டைகளை பராமரிப்பது எளிது.


பக்க சுருக்கம் :

1.உடல் எடை பராமரிப்பு

2.கரு வளர்ச்சிக்கு

3.இதய நோய் போன்றவற்றிலிருந்து காக்க

4.அதிகளவு B12 மற்றும் ஒமேகா 3


வாத்து முட்டை யார் உண்ணக் கூடாது?





வாத்து முட்டையின் மஞ்சள் கருவில் அதிக அளவு கொழுப்பு இருப்பதால் சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் இருப்பவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.


TAGS:

Duck eggs health benefits medical uses in tamil vaathu vathu muttai muttaiyin payangal nanmaigal price rate vilai recipe Farm வாத்து முட்டை pannai








Post a Comment

0 Comments