Jackfruit benefits in tamil
பலாபழம் சாப்பிட்டால் என்னவாகும்?
முக்கனிகளில் ஒரு கனி பலாக்கனி.தோற்றம் கரடு முரடாக இருந்தாலும் உட்புறம் உள்ள பல சுழயானதும் மிகவும் தித்திப்பான சுவையுடன் இருப்பதோடு மருத்துவ குணங்களும் நிறைந்து காணப்படுகிறது,இது பெரும்பாலும் எல்லா சீசன்களிலும் கிடைப்பதில்லை.சீசன்களில் இதை வாங்கி உண்பதால் அதனால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பலா பழத்தில் சத்துக்கள் விவரங்கள்:
வைட்டமின் ஏ,
வைட்டமின் சி,
கால்சியம்,
பொட்டாசியம்,
இரும்புச்சத்து,
தையமின்,
ரிபோஃப்ளேவின்,
நியாசின்,
மக்னீசியம்
மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.
இரத்த சோகை:
பலாப்பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை உடையவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்று கூறுகிறார்கள்.
எலும்புகளுக்கு வலு சேர்க்கும் பலா:
எலும்புகள் உடலில் வலு வாழ்வதற்கு கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது ஆகும்.உங்க சத்தை உறிஞ்ச கூடிய மெக்னீசியம் பலாப்பழத்தில் இருப்பதால் இதை சாப்பிடும் போது உடலில் உள்ள எலும்புகள் வலுவாகும்.
உடல் இயக்கத்தை சரி செய்யும்:
பலாப்பழத்தில் உள்ள சத்துக்களில் ஒன்று ஷரிங் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்தும் குடல் இயக்கத்தை சீரமைக்கிறது.
சக்தியைக் கொடுக்கும்:
இந்த பலாப்பழம் நல்ல சுவையை தருவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுப்பதற்கு மிகவும் உதவுகிறது.ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
ரத்த அழுத்தத்தை குறைக்க:
பலாப்பழத்தில் உள்ள சத்துக்களில் ஒன்றான பொட்டாசியம் ரத்த ஓட்டத்தை சீராக்கி உயர் ரத்த அழுத்த போன்ற பிரச்சனைகளில் இருந்து உடலைக் காக்கும்.இதய நோய் போன்ற நோய்களில் இருந்து விடுபடுவதற்கு இது உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி:
வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் கருதப்படுகிறது.வெயில் பலாப்பழத்தில் வைட்டமின் சி இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் நோய்த் தொற்று ஏற்படாதவாறு உடலைக் காக்கும் மேலும் இதில் உள்ள , புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான லிக்னைன்கள், ஐசோஃப்ளேவோன்கள் மற்றும் சப்போனின்கள் அதிக அளவில் உள்ளன இந்த பொருட்கள் உடலில் புற்றுநோய் வராமல் உடலை பாதுகாக்கிறது.
பார்வை கோளாறுக்கு :
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் மற்றும் சருமம் போன்றவற்றில் ஏற்படும் நோய்களை வராமல் பாதுகாக்கிறது.மேலும் குறிப்பாக மாலைக்கண் மற்றும் பார்வைக் குறைபாடுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
இந்த பழத்தை அளவோடு மட்டுமே உண்ண வேண்டும் அளவுக்கு அதிகமானால் வயிற்றுப் போக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.
Jackfruit benefits in tamil medicinal medical uses pala palam
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com