புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

முதியார் கூந்தல் எண்ணெய் தயாரிக்கும் முறை muthiyaar koonthal benefits

 muthiyaar koonthal benefits

முதியார் கூந்தல்


 முதியார் கூந்தல் என்பது வெள்ளை நிறம் கலந்த மஞ்சள் நிறப் பூக்களை உடைய ஒருவகையான கொடி தாவரமாகும். தரையில்  படர கூடியது, இது செம்மண் நிலங்களிலும் மற்றும் புதர்களிலும் தானாக வளரக்கூடிய ஒரு கலைச் செடியாகும். இதை சவுரி கொடி என்றும், அவ்வையார் கூந்தல் என்றும்மற்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

 


இதனுடைய அறிவியல் பெயர் merremia tridentata  ஆகும்

 இதனுடைய கொடி மிகவும் நீளம் நீளமாக படர்ந்து வளரக்கூடியது. அதனால் இதை பெண்களின் கூந்தலுக்கு ஒப்பிடலாம்.எனவே இது முதியார் கூந்தல் என்று அழைக்கப்படுகிறது.

 

 கூந்தல் ஆரோக்கியத்தை  பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பயன்படும் மிக முக்கிய  பயனாக பார்க்கப்படுகிறது.

 

முதியார் கூந்தல் எண்ணெய் (muthiyaar koonthal oil ) தயாரிக்கும் முறை:

 

 முதியார் கூந்தல் தைலம் தயாரிப்பதற்கு ஒரு முழு முதியார் கூந்தல் கொடியை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை பூ ,காய் ,வேர் ,இலை ,கொடி அனைத்தையும் எடுத்து  அதனுடன் நீர்  சேர்த்து அரைத்து அந்த கலவையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையை சம அளவுக்கு தேங்காய் எண்ணெய் எடுத்துக்  கொண்டு நன்றாக காய்ச்ச வேண்டும். தேங்காய்  எண்ணெயின் நிறம் பச்சையாக மாறும் வரை காய்ச்சி பின் ஆற வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வாரம் இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.  தலை சீவும் போது கூந்தல் வேருடன் உதிர்வதை தடுக்கும். கூந்தல் மிக நீளமாக வளரும். பொடுகு தொல்லையிலிருந்து விடுவிக்கும்.

 

 







மலச்சிக்கல்,முடக்குவாதம் ,வயிற்றுப்போக்கு, பக்கவாதம், மூலம், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை, சிறுநீரக பிரச்சனையை ,குடற்புழு பிரச்சனை ,வாதம் ,பித்தம், கபம் ,எலும்புருக்கி நோய் ,பசி மந்தம், இருமல் சளி கட்டிகள் இருந்தாலும் சரியாகிவிடும். மஞ்சள் காமாலை கல்லீரல் பிரச்சனைகள்    போன்றவற்றிற்கு முதியார் கூந்தல் செடி     பயன்படுவதாக  சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

 வாய்  துர்நாற்றம்  நீங்க:

 

 முதியோர் கூந்தல் கொடியின் வேரை எடுத்து அதனுடன் நீர் சேர்த்து அரைத்து அந்த நீரை வாய் கொப்பளித்து வந்தால் பல் சம்பந்தமான நோய்கள், வாய் துர்நாற்றம் போன்றவை குணமாவதாக கூறுகிறார்கள்.

 

உடலில் ஏற்படும்  சூடு கொப்புளங்கள் ஆற:

 

  முதியார் கூந்தல் அல்லது சவுரி கொடி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து  அந்த விழுதை உடலிலுள்ள கொப்புளங்கள் மீது தடவி வர கொப்புளங்கள் விரைவில் ஆறி விடும் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

 






Post a Comment

0 Comments