chia seeds uses tamil
உடல் எடையை குறைக்கும் மாயனின் சூப்பர் ஃபுட் சியா
சியா விதைகள் என்பது சியா என்ற செடியிலிருந்து கிடைக்கும் விதைகள் ஆகும். சியா செடியின் பூர்வீகம் மத்திய மற்றும் தெற்கு மெக்சிகோ ஆகும். சியா விதைகள் அளவு ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவாக இருக்கும். சியா விதைகள் ஆற்றலைத் தனக்குள் சேமித்து வைக்கும் ஆற்றல் பெற்றது. இந்த விதைகளின் சிறப்புகளை மாயன் வார்த்தைகளில் இருந்து பெறப்பட்டது என்பதால் சியா விதைகள் என்று அழைக்கப்படுகிறது.
சியா விதைகள் தன்மைகள்:
நிறம்: பழுப்பு மற்றும் சாம்பல்
அளவு: ஒரு மில்லி மீட்டர்
உருவம்: நீள் கோள வடிவம்
அறிவியல் பெயர்: சால்வியா ஹஸ்பனிக்கா
வேறு பெயர்கள்: mecxican ciya அல்லது salban ci ciya என்று அழைக்கப்படுகிறது.
இது பார்ப்பதற்கு சப்ஜா விதைகள் விதைகளை போன்று இருக்கும். ஆனால் சப்ஜா விதைகள், சியா விதைகள் இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
சியா விதைகள் சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் இது சூப்பர் ஃபுட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் எண்ணிலடங்கா சத்துக்கள் மற்றும் விட்டமின்கள் இருப்பதால் இது ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் மிகவும் விரும்பத்தக்க பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
டயட் இருப்பவர்கள் மற்றும் உடல் பருமனை குறைக்க விரும்புபவர்களுக்கு சியா விதைகள் பெரிதும் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது உடலுக்கு பல நன்மைகளையும் மற்றும் பல நோய்களையும் தீர்க்க வல்லது. அவை என்ன என்பதை கீழே பார்ப்போம்.
உடல் பருமன் குறைய:
சியா விதைகளை பயன்படுத்தும் போது நீரில் ஊற வைத்தோ அல்லது பொடி செய்து பயன்படுத்தலாம். சியா விதைகளை நீரில் ஊற வைக்கும் பொழுது அது சிறிது நேரத்தில் அளவில்பத்து மடங்கு பெரிதாகிவிடும். இந்த தன்மையால் இந்த விதைகளை சாப்பிடும் பொழுது டயட் இருப்பவர்கள் மற்றும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள், சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பியது போல் தோன்றும். இதனால் அவர்களுக்கு அதிகமாக பசி எடுக்காது. இதனால் தானாகவே எடை குறைய ஆரம்பித்துவிடும்.
இதை பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்துகின்றனர்.
மேலும் இதில் ஒமேகா-3 என்ற கொழுப்பு, அதிக அளவு நார்ச்சத்து, அதிகஅளவு கார்போஹைட்ரேட் போன்றவை இருப்பதால் இது உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது.
மலச்சிக்கலைப் போக்குவதற்கு:
சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் இது உடலிலுள்ள மலக் கழிவுகளை வெளியேற்றி மலச்சிக்கல் வராதவாறு உடலை பாதுகாக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாமா??
சர்க்கரை நோயாளிகளுக்கு சியா விதைகள் மிகச்சிறந்த உணவாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக சர்க்கரை நோய் சாப்பிட்ட பிறகு ஏற்படும் சர்க்கரை அளவு மாறுதலை சியா விதைகள் சரி செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சருமத்தை பாதுகாக்கும் சியா விதைகள்
சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயானது சருமத்தை பாதுகாக்கிறது ஏனெனில் சியா விதைகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு இருப்பதால் இது மேனியின் பாதுகாவலனாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதயத்தை பாதுகாக்க:
சியா விதைகளில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு மற்றும் நார்ச்சத்து, ஆல்பா லினோலினிக் அமிலங்கள் போன்றவை இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை இதயம் சார்ந்த நோய் உள்ளவர்களுக்கு 12 வாரங்கள் தொடர்ந்து கொடுக்கப்பட்ட ஆய்வில் அது நல்ல பலனைத் கொடுத்ததாக வெளிநாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க:
சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்பவர்கள் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பக்க விளைவுகள்:
சியா விதைகளை பல நன்மைகள் இருந்தாலும் அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது என்று ஆய்வுகள் மற்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன.
சியா விதைகளை அதிக அளவு எடுத்துக் கொண்டால் செரிமான கோளாறுகள் வயிற்றுப்போக்கு,, வாந்தி, மூக்கடைப்பு, ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com