sitharathai benefits tamil
மூட்டு வலி குணமாக சித்தரத்தை மற்றும் பயன்கள்
சித்தரத்தை என்பது பண்டைய காலம் முதல் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு மருந்துப் பொருளாகும். இதில் இரண்டு வகைகள் உண்டு அவை சித்தரத்தை மற்றும் பேரத்தை ஆகும். இது இஞ்சி போன்ற நிலத்தின் அடியில் வளரும் கிழங்கு வகையைச் சார்ந்தது. இதை சீன இஞ்சிஎன்றும் அழைக்கின்றனர்.
இது உடலில் உள்ள கபத்தை கட்டுபடுத்தி உடலில் முக்கியமாகதொற்று காலங்களில் நோய் ஏற்படுத்தாதவாறு நம்மை பாதுகாக்கிறது.
சித்தரத்தையை மூலிகை சமையல்களில் அதிகமாக பயன்படுத்துகின்றனர். மேலும் இதனுடைய பயன்கள் என்ன என்பதனை கீழே பார்க்கலாம்.
- வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஆற:
- மூட்டு வலி குணமாக:
- தொண்டை கரகரப்பு நீங்க:
- பயண வாந்தியை நிறுத்த:
- மலச்சிக்கல் நீங்க ஒரு எளிய வழி:
நெஞ்சு சளி கரைய:
நமது உடலில் சளி அதிகமாகி விட்டால் அது நெஞ்சில் அதிகமாக போய் சேர்ந்து விடும். இவ்வாறு சேர்ந்த சளியை வெளியேற்ற சித்தரத்தை பொடி ஒரு டீஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் குடித்து வந்தால் நெஞ்சு சளி அது கரைந்து, மலத்தின் வழியாக வெளியேறிவிடும். மேலும் இது நுரையீரலுக்குச் செல்லும் குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு விடுவதற்கு எளிமையாக்கி சதிகளைவெளியேற்றும். மேலும் இது ஆஸ்த்மா உடையவர்களுக்கு மூச்சு பிரச்சினையை தீர்ப்பதற்கு நல்ல தீர்வாக அமைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ஆற:
வாய்ப்புண் வருவதற்கு காரணமாக வயிற்றிலுள்ள புண் என்பது மிக முக்கிய காரணமாகும். வயிற்றில் உள்ள பிரச்சனைகள் வயிறு புண் மற்றும் அல்சர் வருவதற்கு காரணமாக உள்ளது.இவ்வாறு வரும் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் அல்சர்ஆறுவதற்கு சித்தரத்தை பொடியை நீரில் கலக்கி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை கையில் எடுத்து அரிசி கஞ்சியுடன் கலந்து குடித்துவர வயிறு சம்பந்தமான வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் ஆறும் என்ற நூல் குறிப்பிடுகிறது.
மூட்டு வலி குணமாக:
மூட்டு வலி குணமாக அதற்கு சித்தரத்தை பொடியுடன் நல்லெண்ணெயை கலந்து மூட்டுவலி உள்ள இடங்களில் தடவிவர மூட்டு வலியானது குணமாகும் என்ற கூறுகிறார்கள்.
தொண்டை கரகரப்பு நீங்க:
சிலருக்கு சளி பிடித்தால் தொண்டையில் ஒருவிதமான கரகரப்பு ஏற்பட்டு அசௌகரியமான சூழல் ஏற்படும் மேலும் தொண்டை வலி ஏற்படும். இது நீங்க சிறிதளவு சித்தரத்தை எடுத்து வாயில் போட்டு அடக்கி வைத்துக் கொண்டால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமில் நீர் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டையில் உள்ள சளியை நீக்கும் என்று கூறுகிறார்கள்.
பயண வாந்தியை நிறுத்த:
சிலர் பயணம் செய்யும் பொழுது ஏற்படும் அசௌகரியமான பிரச்சனைகளில் ஒன்று வாந்தியாகும். பஸ் அல்லது கார்களில் செல்லும்போது சிறிது தூரம் சென்றால் சிலர் வாந்தி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதனால் பயணம் செய்யவே அதிகம் விரும்ப மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சிறிதளவு சித்தரத்தை பொடி வாயில் போட்டு அடக்கிக் கொண்டாள் ஏற்படும் உம்மில்ரானது பயணத்தின் போது வரும் வாந்தியை நிறுத்தும் வல்லமை கொண்டது.
மலச்சிக்கல் நீங்க ஒரு எளிய வழி:
காலையில் எழுந்தவுடன் மலமானது முழுவதும் வெளியேறினாள் நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், நமக்கு சுறுசுறுப்பும் அதிகமாக கிடைத்த வாழுகின்றோம். இதற்கு இரவு தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் சித்தரத்தை பொடிஒரு சிட்டிகை கலந்து குடித்து வந்தால் மலமிளக்கி காலையில் எழுந்தவுடன் வெளியேறும்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com