kasakasa payangal benefits tamil
கசகசா மருத்துவம்
கசகசா என்பது ஒரு வகையான விதையாகும். இதை நாம் சமையலில் குறிப்பிட்ட சில வகையான உணவுகளுக்கு பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள் உள்ளது என்பதை நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் இதை பயன்படுத்தும் போது அளவாக பயன்படுத்த வேண்டும்.
இதை ஆங்கிலத்தில் poppy seeds என்று அழைக்கிறார்கள். இது ஐரோப்பாவில் அதிகமாக விளைகிறது. இதில் நிறைய வகைகள் உள்ளன. இந்த விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் கசகசா எள் எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது.
வயிற்றுப்போக்கு நிற்க:
வயிற்றுப்போக்கு ஏற்படும்போது அது தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருந்தாள் உடல் கலைப்பு ஏற்பட்டுவிடும். அதை தடுப்பதற்கு கசகசாவை சிறிதளவு வாயில் போட்டு மென்று பின் நீர் குடித்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும் என்று கூறுகிறார்கள்.
தேமல் மற்றும் முகச் சுருக்கங்கள் மறைய:
கசகசாவை தயிருடன்
சேர்த்து அரைத்து அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தக் கலவையை இரவு படுப்பதற்கு முன் முகத்தில் பூசி பின் காலையில் எழுந்தவுடன்
முகத்தை கழுவினால் முகச் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெறும். தயிரானது எருமை தயிராக இருந்தால் நல்ல பலனைத் தரும்.
மேலும் கசகசாவை தினமும் உடலில் தேய்த்து
குளித்து வர உடலிலுள்ள தேமல் மறையும்.
கசகசா, தேங்காய்,
மற்றும் சக்கரை சேர்த்து சாப்பிட்டு வர வாயில் உள்ள புண் அல்லது வாய் அல்சர் குணமாகும்
என்று கூறுகிறார்கள். ஆனால் இதை குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கொடுக்கக்கூடாது
.
பெண்கள் கருவுற:
பெண்களின் கருவுறுதலுக்கு பெலோப்பியன் குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள் தடையாக இருக்கும். இதற்கு
ஆலோசனைப்படி கசகசா எண்ணெய் பயன்படுத்தி செய்தால் கருவுறுதல் அதிகரிக்கிறது .
மேலும் இது ஆண்களுக்கு
ஆண்மையை அதிகரிக்க செய்கிறது.
இரவில் தூக்கம்
நன்றாக வருவதற்கு:
கசகசா விதைகள்
தூக்கம் வரச்செய்யும். இதை சூடான பாலில்
கலந்து பருகி இரவில் தூங்குவதற்கு முன் குடித்தால் நல்ல தூக்கம் வரும். இதை குழந்தைகளுக்கு
மருத்துவரின் ஆலோசனை இன்றி கொடுக்கக்கூடாது ,
மலமிளக்கி அல்லது மலச்சிக்கல் போக்க:
கசகசாவில் எண்ணற்ற பல சத்துக்கள் உள்ளது. அதில் ஒன்றுதான் நார்ச்சத்து. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலத்தை இளக்கி மலச்சிக்கல் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. இதனால் உடலில் பல நோய்கள் குறைந்து ஆரோக்கியம் மேம்படுகிறது.
Tags:
kasakasa payangal benefits tamil Poppy Seeds.health uses
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com