karunjeeragam benefits in tamil
நுரையீரல் சளி வெளியேற கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தின் சிறப்பு:
கருஞ்சீரகத்தில் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத இல்லை என்பதுதான் இதனுடைய சிறப்பு. அந்த வேதிப்பொருளின் பெயரானது தைமோகுயினன்ஆகும்.
கருஞ்சீரகம் மூலிகை யுனானி மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது இறப்பைதவிர மற்ற எல்லா நோய்களுக்கும் மருந்தாக பயன் படுவதால் இது சர்வரோக நிவாரணி என்று அழைக்கப்படுகிறது.
இதைப் பயன்படுத்தும்போது மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.
கருஞ்சீரகத்தின் பயன்கள்:
இது குளிர் காலங்களில் ஏற்படும் நோய்களான மூக்கடைப்பு, நுரையீரல் சளி, தொடர் இருமல் போன்றவற்றிற்கு மருந்தாகும் பயன்படுகிறது.
இதில் உள்ள வேதிப் பொருளான இன்டெர்பிதான் எலும்பு மஜ்ஜை களை உருவாக்கி குறிப்பாக கணைய புற்றுநோய் மற்றும் புற்றுநோய் கட்டிகள்வராமல் உடலை பாதுகாக்கிறது.
கருஞ்சீரகத்தில் உள்ள நல்ல கொழுப்பு உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடலை பாதுகாக்க உதவுகிறது.
50 மில்லி லிட்டர் தேங்காய் எண்ணெயுடன், ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகப்பொடி உடன் போட்டு கொதிக்க வைத்து பிறகு அந்த எண்ணெயை வடிகட்டி ஆற வைத்து பிறகு எடுத்துக் கொள்ளவும். அந்த எண்ணெயை 2 துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகும் என்று நூல்கள் குறிப்பிடுகிறது.
முகப்பரு குணமாக:
தினமும் கருஞ்சீரகப் பொடியை பசும்பாலுடன் கலந்து முகத்தில் பூசி கழுவி வர முகத்தில் உள்ள பருக்கள் குணமாகும்.
தோல் வியாதிகள் குணமாக:
நாம் கடைகளில் வாங்கும் குளியல் பொடியுடன் கருஞ்சீரகப் பொடியை கலந்து தினமும் குளித்து வந்தால் உடலில் ஏற்படும் சோரியாசிஸ், தழும்புகள், படை, படர்தாமரை குணமாகும்.
நுரையீரல் சளி வெளியேற:
கருஞ்சீரகப் பொடியுடன் தேன்கலந்து அதனுடன் அரை டேபிள்ஸ்பூன் பூண்டு பெஸ்ட் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் உள்ள சளியானது வெளியேறும் மற்றும் தொடர் இருமல் குணமாகும் என்று நூல்கள் குறிப்பிடுகிறது.
சிறுநீரக மற்றும் பித்தப்பை கல் கரைய:
கருஞ்சீரகப் பொடியுடன் தேன் கலந்து அதனை சுடுநீரில் கலந்து குடித்துவர சிறுநீரகத்தில் ஏற்படும் கல் மற்றும் பித்தப்பையில் ஏற்படும் கல் போன்றவை கரையும்.
கருஞ்சிரக எண்ணெய் :karunjeeraga ennai uses
கருஞ்சீரகத்தை போன்றே கருஞ்சீரக எண்ணெயும் பலவிதமான நற்பலன்களை கொடுக்கக் கூடியது.
எண்ணையை தலைக்கு தடவும் போது,நரை முடி வராமல் வராமலும்,முடி உடையாமலும் முடியை பாதுகாக்கிறது.நரை முடி வராமல் முடியைப் பாதுகாக்கிறது.
100 Gm Karunjeragam price=Rs.70
கருஞ்சீரகத்தின் பக்க விளைவுகள்:side effects of Kalonji
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கச் செய்யும்.
ரத்தப்போக்கு இருந்தால் ரத்தப் போக்கு அதிகரிக்கச் செய்யும்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டால் நல்லதல்ல.
அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.
குறைந்த ரத்த அழுத்தம் உடையவர்கள் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டால் மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com