துளசி மருத்துவ பயன்கள் thulasi benefits in tamil
இது ஒரு தெய்வீக மூலிகையும் என்றும், கல்ப மூலிகையும் என்றும் அழைக்கப்படுகிறது.நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி வகையான துளசி உள்ளன.துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
இதனுடைய அறிவியல் தாவர பெயர்கள் Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family) ஆகும்.
இவை இந்தியா மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பெருமளவு காணப்படுகிறது .இது வண்டல்மண் செம்மண்,களிமண், மண் வகைகளில் நன்கு வளரக்கூடியது. மேலும் இது காடுகளிலும், வனங்களிலும், பாதை ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும், தானாக வளரும் தன்மை கொண்டது. மருத்துவ பயன்பாட்டிற்காக இது வீடுகளில் தொட்டிகளிலும் , வீட்டுத் தோட்டங்களிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.
துளசி வளர்க்க அதனுடைய குச்சிகளையும் அல்லது அதனுடைய விதேயோ நட்டு வைத்தால் வளரும் தன்மை கொண்டது.
இதனுடைய அனைத்து பாகங்களான இலை,தண்டு, பூ, வேர் மருத்துவ குணம் கொண்டது.துளசியின் பயன்களை கீழே பார்ப்போம்.
துளசியை வீட்டு மருத்துவத்திற்கும், வாசனைப் பொருள் தயாரிப்பதற்கும், மருந்து தயாரிப்பதற்கும், பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துளசியானது இருமல், சளி, ஜலதோசம் போன்றவற்றிற்கு பயன்படும் ஒரு மூலிகை. மேலும் இது தொற்று நீக்கியாகவும், கிருமி நாசினியாகவும், பூச்சிகளை தடுக்கவும், பல்வேறு வியாதிகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் இது எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
குழந்தைகளுக்கு
ஏற்படும் சளி மற்றும் இருமலை போக்க துளசி சாறுடன் சிறிதளவு தேனை கலந்து கொடுத்தால்
குணமாகிவிடும்.
சரும நோய்களான தோல் அரிப்பு, கொப்புளம், இதர தோல் நோய்களுக்கு துளசி ஒரு மாமருந்து. உடம்பில் ஏற்படும் கொப்புளங்களுக்கு துளசி இலையை ,நீரை விட்டு அரைத்து பின் அதை பூசிவந்தால் கொப்புளம் மறையும்.
தொண்டை புண் உள்ளவர்கள் துளசி இலை சாறை அல்லது துளசியை பச்சையாக சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமாகும்.
கொசு மருந்து
வீடுகளில் கொசுக்கள் அண்டாமல் இருக்க வீட்டைச்சுற்றி துளசி
செடி களையோ அல்லது துளசி இலைகளை கட்டி வந்தால் கொசுக்கள் அண்டாது. இதனால்
கொசுவினால் ஏற்படும் நோய்கள் தடுக்கப்படுகிறது.
மேலும் வெட்டு காயங்களை
குணப்படுத்த இதனுடைய சாரை தடவிவந்தால் வெட்டுக்காயம் விரைவில் ஆறும்.
பல்வலி குணமாக துளசி இலை சாறை கற்பூரத்துடன் கலந்து பின் வலி உள்ள இடத்தில் தடவினால் பல் வலி சரியாகும்
பேன் மற்றும் பொடுகு தொல்லை
பேன் மற்றும் பொடுகு தொல்லையை சரி செய்வதற்கு, இதன் சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து பின்
ஒரு மணி நேரம் கழித்து குளிக்கும் போது பேன்
பொடுகு நீங்கும்
இது நரம்பு நோய்களை ஊக்கப்படுத்தும்தன்மை
கொண்டதால் ஞாபக சக்தி அதிகரிக்க செய்கிறது
துளசி மணி மாலை:
துளசியானது துளசி மணிமாலை தயாரிக்க பயன்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்படும் மாலையை அணிவதன் மூலம்
அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கும்.
கருத்தடை மருந்து:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம்
அளவு ஆண், பெண்
இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.
குணமாகும் வியாதிகள்.