பிரண்டை பயன்கள் pirandai benefits in tamil
1) வேறுபெயர்கள் -: வச்சிரவல்லி.Veld grape
2) தாவரப்பெயர் -: VITIS QUADRANGULARIS.
3) தாவரக்குடும்பம் - :VITACEAE.
4) வகைகள் -:முப்பிரண்டை, சதுரப்பிரண்டை, மூங்கில்பிரண்டை அல்லது
கோப்பிரண்டை, உருண்டைப்பிரண்டை, களிப்பிரண்டை, புளிப்பிரண்டை, தீப்பிரண்டை.
5) வளரும் தன்மை -:
இந்தியாவிலும் ,இலங்கையிலும் உள்ள வெப்பமான பகுதிகளில் காணப்படும் கொடிவகையைச் சேர்ந்த செடி. இதனுடைய
கொடியை நாற்கோணம் முடையதாகவும் அதனுடன் பற்று கம்பிகள் போன்ற இலை உடைய கொடியை கொண்டிருக்கும்.
இதை வெறும் வயிற்றில் அல்லது கையிலோ தொட்டால் நமைச்சல் போன்ற உணர்வு ஏற்படும்.
இதனுடைய
கனியின் நிறம் சிவப்பு. இதில் ஆண் பிரண்டை பெண் பிரண்டை என்று இரு வகைகள் உண்டு. ஆண்
பிரண்டையின் கனவு இரண்டு முதல் மூன்று அங்குலமும், பெண் பிரண்டையின் கனவு ஒன்று முதல்
ஒன்றரை அங்குலமு ம் இருக்கும். இதனுடைய தண்டு சதைப்பற்றுடன் இருக்கும்.
6) பயன்தரும் பாகங்கள் -: வேர், தண்டு, இலைஆக்கியவை
7) பயன்கள் -:
>>>பிரண்டை மூலம், வயிற்றுப்புண், தாது நட்டம்வாயு அகற்றல்,
பசிமிகுதல், நுண்புழுக் கொல்லுதல்,மனஅழுத்தம்,வாய்வு சம்பந்தமான நோய்கள் போன்றவற்றை குணமாக்கும்.
>>>பெண்கள் குழந்தை பெற்ற பிறகு அவர்களுக்கு ஏற்படும் வயிற்றுப் புண்களை ஆற்ற வல்லது பிரண்டை.
>>>ரத்தக் குழாய்களில்
ஏற்படும் கொழுப்புகளை கரைக்க வல்லது பிரண்டை. இதைத்
வாரமிருமுறை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதயத்தை
காக்கும்.
>>>எதை சாப்பிட்டாலும்
உடல் தேராதவர்கள் பிரண்டைத் துவையலை வாரம் இருமுறை சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
>>>எலும்பு முறிவு
ஏற்பட்டால்,உடைந்த எலும்புகளை எளிதில் ஒன்று சேர்க்கும் குணம் கொண்டது .
>>>பெண்களுக்கு ஏற்படும்
இடுப்பு வலி மற்றும் முதுகு வலி போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது பிரண்டை.
மேலும் இது சித்த மருத்துவத்தில் புற்று நோய்க்கு மருந்து கொடுக்கப்படும் மருந்தில்
சேர்க்கப்படுகிறது.
>>>கழுத்து வலி, தசைப்பிடிப்பு,
கழுத்தை திருப்ப முடியாமல் இருத்தல், குனிய முடியாமல் இருத்தல் போன்ற நோய்களுக்கு பிரண்டை துவையல் ஒரு நல்ல மருந்து.
>>செரியாமை -:
பிரண்டைத் தண்டை நெய் விட்டு வதக்கி துவையல் அரைத்து உண்டு வர வயிற்றுப் பொருமல், உடலிலுள்ள புண்கள் நீங்கி நல்ல பசி எடுக்கும் இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர மூலத்தில் ஏற்படும் குருதி வடிதல் நிற்கும்.
ஒரு கட்டின் விலை -20 ரூபாய்
துவையல்
பிரண்டையை மேல் தோலை உரித்தால் உள்ளே இருக்கும் சதைப் போன்று இருக்கும் அதை எடுத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து வணக்க வேண்டும். நன்றாக வதங்கிய பின் அதனுடன் மிளகாய், புளி, உப்பு,சேர்த்து அரைத்தால் பிரண்டை துவையல் ரெடி. இதனுடன் தேங்காய் மற்றும் உளுந்து பூ சேர்த்து அரைத்தால் இன்னும் கொஞ்சம் சுவை அதிகமாக இருக்கும்.
பிரண்டை இலைத் துவையல்
இதன்இலையிலும் துவையல் செய்யலாம். சாப்பிட்டு வந்தாள் இதய நோய்கள், ரத்தஅழுத்தம், சர்க்கரைநோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
தேவையான பொருட்கள்:
இலை 100 கிராம், இஞ்சி, பூண்டு -4, மிளகு 5, மிளகாய்-3, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, மஞ்சள்.
முதலில் பூண்டு இஞ்சி மிளகாய் மஞ்சள் போன்றவற்றை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், பிறகு இலையுடன் கொத்தமல்லி, கருவேப்பிலை, சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்தால் பிரண்டை இலை துவையல் ரெடி.
பிரண்டை உப்பு என்றால் என்ன -:
.
உலர்த்திய பிரண்டையை சிறிதளவு எடுத்து அதை நெருப்பில் போட்டு சாம்பலாக்க வேண்டும் . இதன் மூலம் கிடைக்கும் ஒரு கிலோ சாம்பலை 3 லிட்டர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி பின் தெரிய வைக்க வேண்டும். தெளிந்த நீரை ஒரு பீங்கான் பாத்திரத்தில் வைத்து பத்து நாட்கள் வெயிலில் காய வைத்தால் நீர் முழுவதும் சுண்டி உப்பு படிந்து இருக்கும். இந்த உப்பை பிரண்டை உப்பு என்று அழைக்கப்படுகிறது.இந்த உப்பு அதிக மருத்துவ குணம் கொண்டது.
பிரண்டை உப்பின் பயன்கள்
பேதி, வாந்தி -:
குழந்தைகள் வாந்தி பேதி எடுத்தாள் ஒரு கிராம் அளவு உப்பை எடுத்து
பாலில் கரைத்து மூன்று வேளை கொடுத்து வர வாந்தி பேதி குணமாகும் மற்றும் செரியாமை பிரச்சனை
தீரும். பெரியவர்களுக்கு 2 முதல் 3 கிராம் எடுத்து கஞ்சி அல்லது மோரில் கலந்து கொடுக்கவும்
வாய்ப்புண் - :
நம்மில் பல பேருக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று
வாய்ப்புண், வாய் நாற்றம், உதடு மற்றும் நாக்கில் ஏற்படும் வெடிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு
பிரண்டை உப்பை 2 கிராம் எடுத்து வெண்ணெயில் கலந்து இரண்டு வேளை மூன்று நாட்கள் கொடுத்தால்
குணமாகும் .இதை தொடர்ந்து சாப்பிட 48 நாட்களில் வயிற்றுப்புண் குணமாகும்.மேலும் மூலம்,
உடல் பருமன் ,சூதகவலி ,காது வலி,காதில் சீழ் வடிதல், மாதவிலக்கு பிரச்சனைகள்போன்றவற்றிற்கு
மருந்தாகப் பயன்படுகிறது
ஆஸ்துமா -:
பிரண்டைஉப்பை தென்னங்கள்ளில் கொடுத்துவர ஆஸ்துமா, எலும்புருக்கி,
மதுமேகம், நீரிழிவு குணமடையும் என்று கூறுகிறார்கள்.
தாதுநட்டம் -:
இந்தஉப்பை 2 கிராம் அளவு
ஜாதிக்காய்த் தூள் 5 கிராம் கலந்து சாப்பிட்டு வர தாது நட்டம் குணமடையும். வீரியம் பெருகும்,
உடம்பு வன்மை பெரும்.
பிரண்டை உப்பின் பயன்கள், பிரண்டை பயன்கள் ,You can get details of pirandai benefits in tamil, pirandai uses in tamil, pirandai nanmaigal in tamil, pirandai payangal in tamil, pirandai etharku payanpadukirathu, pirandai ulla sathukal, pirandai engu kidaikkum, pirandai vilai/price/rate, pirandai
eppadi irukkum,pirandai uppu,pirandai chutney,pirandai thuvaiyal,