வெட்டிவேர் மருத்துவ பயன்கள் . vetti veru benefits tamil
1) மூலிகையின் பெயர் -: வெட்டிவேர்.
2) வேறுபெயர்கள் -: குருவேர், உசிர், வீராணம்.
3) தாவரப்பெயர் -: CHRYSOPOGON ZIZANIOIDES.
4) தாவரக்குடும்பம் -: POACEAE.
5) தாவர அமைப்பு -:
இது மணல் பாங்கான இடங்களிலும் ஆற்று ஓரங்களில் வளரும் தன்மை உடையது.
இது பார்ப்பதற்கு நாணல் புல் தர்ப்பைப்புல் போன்று இருக்கும். இதனுடைய உயரம் 4 அடி
முதல் 5 அடி. இதனுடைய பூவின் நிறம் ஊதா. வெட்டிவேர் அனைத்து வகையான மண் வகைகளிலும்
வளரும் தன்மை உடையது. இதனுடைய வேர் மண்ணுக்கடியில் நான்கு அடி முதல் ஐந்து அடி செல்லும். வேரின்நிறம் கருப்பு.
இதனுடைய வேர் பகுதி மட்டும் மருத்துவ குணம் கொண்டது. இது சிறுநீர் பெருக்கியாகவும்,
வேர்வை பெருக்கியாகவும் செயல்பட்டு உடலில் உள்ள வெப்பத்தை அகற்றுகிறது
7) மருத்துவப் பயன்கள் -:
வெட்டிவேரின் தைலம் நறுமணப் பொருள்களிலும் குளியல் சோப்புகளில் தைலங்களிலும்
எண்ணங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது கை கால் பிடிப்பு கலை விளக்குகிறது.
வெட்டிவேரை பெரும்பாலும் விசிறியாக செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள்
இந்த விசிறியை பயன்படுத்தும்போது கோடைகாலங்களில் ஏற்படுத்தப்படும் எரிச்சல் மற்றும்
நாவறட்சியை குணப்படுத்துகிறது. இது ஒரு குளிர்ச்சி தரும் பொருளாக பயன்படுகிறது
இதை இரண்டு கைப்பிடி அளவு எடுத்து ஒரு பாண்டத்தில் போட்டு நன்கு
காய்ச்சிய பின்னர் திருநீற்றுப்பச்சிலை விதையைப் போட்டு குடித்துவர சூட்டினால் உண்டாகும்
எரிச்சல் கொப்புளங்கள் தாது நஷ்டம் சிறுநீர் சொட்டுச் சொட்டாக வெளியேறுதல் போன்ற கோடை
வியாதிகள் குறையும். இதனால் குறையும் மற்ற நோய்கள் வாந்தி பேதி தேக எரிச்சல் வயிற்றுக்
கடுப்பு போன்றவையாகும்.