புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

அனைத்து மூலத்திற்கும் மருந்து துத்தி

 துத்தி.Thuthi benefits tamil





1) வேறுபெயர்கள் -: கக்கடி, கிக்கசி, துத்திக்கீரை.


2) தாவரப்பெயர் -: ABUTILON INDICUM.


3) தாவரக்குடும்பம் -: MALVACEAE.


Thuthi benefits tamil4) வகைகள் -: பசும்துத்தி, கருந்துத்தி, சிறுத்துத்தி, பெருந்துத்தி, எலிச்செவிதுத்தி, நிலத்துத்தி, ஐயிதழ்துத்தி, ஒட்டுத்துத்தி, கண்டுத்துத்தி, காட்டுத்துத்தி,கொடித்துத்தி, நாடத்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத்துத்தி, பலன் எல்லாம் ஒன்றே.


5) தாவர அமைப்பு -: 

இது அரச இலையை போன்று இருக்கும் கீரை வகையைச் சேர்ந்த தாவரம். இது தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் மற்றும் உஷ்ண பிரதேசங்களிலும் தானாகவே வளரக்கூடியது. இதனுடைய பூக்களின் நிறம் மஞ்சள். இதனுடைய இலை மென்மையான சுவை இருந்தாலும்  சற்று    அரிக்கும்.
6) பயன் தரும் பாகங்கள் -: இலை, பூ, வேர்,பட்டை, ஆகியவை மருத்துவப் பயனுடையவை.


7) மருத்துவப்பயன்கள் -:

  இது உடலிலுள்ள புண்களைஆற்றி, மலத்தை இளக்கி உடலைத்  தேற்றும் வல்லமை கொண்டது. இதனுடைய இலை மண் பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பின் ஆறவைத்து  கை  தாங்கும் சூடு அளவிற்கு எடுத்து வாழை   இலையில் வைத்து ஒரு துணியில் வைத்து கட்டிக்கொண்டால் மூல வீக்கம், வலி, ரத்த மூலம் சீல் மூலம் போன்றவை குணமாகும் என்று கூறுகிறார்கள்.

இதனுடைய இலை வேர்  போன்றவற்றின் பொடியை நீரில் கலந்து முறைப்படி அளவு எடுத்து வாய் கொப்பளித்து வர பற்களில் ஈறுகளில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.





இது உடல் வலி, கழிச்சல், ஆசனவாய் கடுப்பு ,     மலமிளக்கி போன்றவற்றிற்கும் மருந்தாக பயன்படுகிறது

துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தார்மூலச்சூடு நீங்கும்.

 எளிதில் பழுத்து உடையாத கட்டிலின் மீது இதனுடைய  இலைச்சாறை அரிசி மாவுடன் கலந்து அதன் மீது பூசி வர கட்டி எளிதில் பழுத்து உடையும்


துத்திப் பூவை எடுத்து நன்றாக உலரவைத்து சூரணம் செய்து அதனுடன் பால் கற்கண்டு சேர்த்து அருந்திவந்தால் ரத்த வாந்தி நிற்கும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும். மேலும் கபம் இருமல்   காசநோய் போன்றவை குணமாகும்


 துத்தி விதைகள் சரும நோய்களையும் உடல் சூடு தொழுநோய்  மேகநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதனுடைய நீரைக் குடித்து வர வெள்ளைப்படுதல் மூலம் போன்றவை குணமாகும்


You can get details of Thuthi benefits in tamil,Thuthi uses in tamil,Thuthi nanmaigal in tamil,Thuthi payangal in tamil,Thuthi etharku payanpadukirathu,Thuthi ulla sathukal,thuthi ilai powder,thuthi poo,thuthi vithai,thuthi keerai,thuthi ilai powder,thuthi poo,thuthi vithai,thuthi keerai