புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...! thalai mudi uthira karanam


தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...!


அடிக்கடி தண்ணீர் மாற்றி தலைக்கு குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின்  அளவு காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம். உடலில் சரியான அளவு விட்டமின்  இல்லாவிட்டாலும்முடி உதிரலாம்.

 தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...! thalai mudi uthira karanamதலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...! thalai mudi uthira karanam


தலை முடியை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் முடி  உதிர்வதை  நிறுத்தலாம். தினமும் தலைக்கு குளித்து தலையை சுத்தமாக வைத்து கொள்ள  வேண்டியது அவசியம்.


 தூக்கம்

தூக்கம் தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...! thalai mudi uthira karanam

தூக்கம் மனித உடலுக்கு மிகவும்  அத்தியாவசியமான ஒன்றாகும்.. தூக்கம் குறையும் போது தலை முடி உதிர்கிறது  என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.. நாளொன்றுக்கு சராசரியாக 8மணி நேரம் தூங்க வேண்டும். இதன் மூலம் முடி கொட்டுவதை  நிறுத்தலாம்.


சோம்பு 

சோம்பு
சோம்பினை நன்கு அரைத்துக் கொண்டு தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து வர முடி கொட்டுவது  நிற்கும். தலையின் உச்சந்தலையில் இருந்து தலைமுடி நுனி வரை சீப்பை வைத்து நன்றாக சீவ வேண்டும். இம்முறை தலையில் இரத்த ஓட்டம் சீராக  பாய்ந்துமுடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பொடுகு
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள்

பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக முடி உதிர்வதற்கு ஆளாவார்கள் என்பது நிச்சயம். பொடுகை போக்குவதன் மூலம் முடி   உதிர்வது இருந்து தப்பிக்கலாம். முடி கொட்டுவதை தடுக்க வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிமையாக முடி கொட்டுவதை தடுக்கலாம்.


கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் அதிகமான இரும்புசத்து


கறிவேப்பிலையை அதிகம் உணவில்  சாப்பிட்டு வந்தால்  தலைமுடி உதிர்வதை தடுப்பதோடு அடர்த்தியான முடியையும் பெறலாம். கறிவேப்பிலையில் அதிகமான இரும்புசத்து உள்ளது.

தயிர் 
தயிர்


வாரம் ஒருமுறை குளிப்பதற்கு முன் தயிறை ஒரு ½  மணி நேரம் தலையில் ஊற வைத்து குளிப்பதால் முடிக்கு ஊட்டசத்து கிடைத்து முடி கொட்டுவது குறையும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லி  இலையில் முடியின் வளர்ச்சிக்கு உதவும் மூலப்பொருள் உள்ளது  மற்றும் எளிமையாக கிடைக்கும் ஒரு பொருளாகும். அனைத்து வீடுகளிலும் கட்டாயமாக இருக்கும் ஒரு பொருள். கொத்தமல்லி இலை சாறினை எடுத்து கொண்டு தலையில் தடவி வர முடி கொட்டுவது தடுக்கப்படும்.

இளநீர் மற்றும் தேங்காய்ப்பால்

இளநீர்தேங்காய்ப்பால்

இளநீர் மற்றும் தேங்காய்ப்பால் கொண்டு தலைமுடியை கழுவுவதன் மூலம் முடி கொட்டுவதில் இருந்து  விடுபட்டு நன்கு அடர்த்தியான முடியை பெறலாம்..


இளஞ்சூடான எண்ணெய்
இளஞ்சூடான எண்ணெய்


இளஞ்சூடான எண்ணெய்யை தலையில் தடவி மசாஜ் செய்வதன் மூலம் முடி கொட்டுவதை  தடுத்து நிறுத்தலாம் . இதன் மூலம் தலையில் இரத்த ஓட்டம் அதிகமாக பாய்ந்து முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்  கிடைக்கும்/..

முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை விதை மற்றும் மிளகு சேர்த்து அரைத்து தடவி  வந்தார்முடி கொட்டுவது நிற்பதோடு புதியதாக முடி வளர்வதற்கும் உதவுகிறது.


தலைமுடி உதிர்வதற்கான காரணங்களும் தடுக்கும் வழிமுறைகளும்...! thalai mudi uthira karanam -thalai mudi kotta karanam-thalaimudi