புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

மூட்டு வலி போக்கும் முடக்கற்றான் குடிநீர் mudakathan uses tamil


முடக்கற்றான் பயன்கள் .mudakathan uses tamil


 இது மூட்டுக்களை முடக்கி  வைக்கும்     மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான்  என்று அழைக்கப்படுகிறது. முடக்கு+அறுத்தான்=முடக்கற்றான்

 

முடக்கறுத்தான், முடர்குற்றான், மொடக்கொத்தான். என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இதனுடைய இலை, தண்டு ,வேர் போன்றவை மருத்துவ குணம் கொண்டது. 

 mudakathan uses tamil,You can get details of mudakathan benefits in tamil,mudakathan uses in tamil,mudakathan nanmaigal in tamil,mudakathan payangal in tamil,mudakathan etharku payanpadukirathu,mudakathan ulla sathukal,mudakathan engu kidaikkum,mudakathan vilai/price/rate,mudakathan   eppadi irukkum,mudakaruthan,mudakutran,modakathan tamil sidha patti vaithiyama

இது இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும் ஒருவகையான கொடி.  பெரும்பாலும் வேலி ஓரங்களிலும், கிணற் ஓரங்களிலும், குட்டை ஏரி கரை ஓரங்களிலும், ஈரமான இடங்களிலும் வளரக்கூடியது. இதை உஷ்ணமான நாடுகளில் வளராது. இதனுடைய கொடிகள் முடிந்ததாகவும் பச்சை நிறத்துடனும் நீளமாக வளரும் தன்மை கொண்டது. இதனுடைய பூக்கள் வெள்ளையாகவும் காய்கள் மூன்று அறைகள் கொண்ட பச்சையாகவும் இருக்கும். காயில் காற்றுப் பை போன்று இருக்கும் .காய் சற்று பழுத்தால்  பருப்புநிறத்துடன் மாறிவிடும். இதன் இலைகளை அரைத்து துவையலாகவோ அல்லது முடக்கத்தான் தோசை ஆகவோ அல்லது முடக்கற்றான் இரசம் சூப்வைத்தோ சாப்பிடலாம். இதன் சுவையானது கசப்பு.

இதனுடைய தாவரப்பெயர்   CARDIOSPERMUM HALICACABUM.  இதனுடைய தாவரக்குடும்பம் SAPINDACEAE.


இலையில் அடங்கியுள்ள சத்துக்கள் -: 
ஈரப்பதம்-83.3 , 
புரதச்சத்து-4.7, 
கொழுப்புச் சத்து 0.6, 
மாவு சத்து 9.1,
 தாது சத்து 2.3,
 சக்தி-6 கலோரி 

 

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.தேவையான அளவு எடுத்துக்கொண்டு அம்மியில் அரைத்து பின்பு பெண்ணின் வயிற்றில் பூசி கனமாக பூசினால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஆகிவிடும் என்று சித்தர் நூல்கள் கூறுகிறது அவ்வாறு செய்யும் பொழுது அந்தப் பெண்ணிற்கு களைப்போ கஷ்டமா ஏற்படாது என்றும் கூறுகிறார்கள். இந்த முறையை நம்  முன்னோர்கள் பயன்படுத்திய பாட்டி வைத்தியம் ஆகும்




மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: 
முடக்கற்றான் இரசம் வைத்துச் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை -: 

முடக்கற்றான் ரசம் தயாரிப்பதற்கு  முடக்கற்றான் இலை, தண்டு, காம்பு  போன்றவற்றை கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும். அதன் ஒரு டம்ளர் அளவுக்கு நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் நாம் சாதாரணமாக வைக்கும் ரசத்திற்கு தேவையான பொருட்களான புளி ,பூண்டு ,சீரகம், மிளகு போன்றவற்றை சேர்த்து கொதிக்க வைத்தால் முடக்கத்தான் ரசம் தயார்..

 


முடக்கத்தான் எண்ணெய்:

 முடக்கத்தான் இலைகளை எண்ணெயில் போட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெய்யை மூட்டுகளுக்கு தடவி வர மூட்டு வலி குணமாகும்.

 

 முடக்கத்தான் குடிநீர்:

 முடக்கத்தான் வேரை உலர்த்தி சூரணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு முறைப்படி செய்த சூரணத்தை  நீரில் கலந்து குடித்து வர மூல நோய்க்கு உள்ளாகும்.

 

 முடக்கத்தான் மேலும்காய்ச்சல் மற்றும்  மலச்சிக்கல் போன்ற நோய்களுக்கும் மருந்தாக பயன்படுகிறது.

 பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

 

 சுகபேதி ஏற்பட:

 முடக்கத்தான் இலைகளை ஒரு கைப்பிடி எடுத்துக்கொண்டு அதனுடன் பூண்டு ,4மிளகுசேர்த்து நன்று  சுண்ட காய்ச்ச வேண்டும். அந்த காட்சியை நீர் ஒரு டம்ளர் வரும் அளவிற்கு எடுத்துக்கொண்டு அதை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை விடியற்காலையில் குடித்துவந்தால் பேதியாகும். இதனால் வயிறு சுத்தமாகும். பேதியை நிறுத்துவதற்கு எலுமிச்சை பழச்சாறை சாப்பிட்டால் நின்றுவிடும். அதன் பிறகு ரசம் சாதம் அல்லது  இட்லி போன்ற பதார்த்தங்கள் சாப்பிடலாம்.

 


You can get details of mudakathan benefits in tamil,mudakathan uses in tamil,mudakathan nanmaigal in tamil,mudakathan payangal in tamil,mudakathan etharku payanpadukirathu,mudakathan ulla sathukal,mudakathan engu kidaikkum,mudakathan vilai/price/rate,mudakathan  
eppadi irukkum,mudakaruthan,mudakutran,modakathan tamil sidha patti vaithiyama,business,