கரிசலாங்கண்ணி. karisalankanni benefits tamil
இது கற்பக மூலிகை என்று அழைக்கப்படுகிறது .இது எல்லா வகையான காமாலை நோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது.இது தரையோடு படர்ந்து வளரும் ஒரு குறுஞ்செடி. தமிழ்நாட்டில் ஈரமான பகுதிகளில் இது அதிகமாக பயிரிடப்படுகிறது. இதனுடைய பூக்கள்மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கொண்டவை. மஞ்சள் நிறப் பூ உடைய கரிசலாங்கண்ணி மஞ்சள் கரிசலாங்கண்ணி என்றும், வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி வெள்ளை கரிசலாங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறது.
கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான்,பொற்கொடி(ECLIPTA PROCENA) என்ற வேறு பெயர்கள் வெவ்வேறு இடங்களில் அழைக்கப்படுகிறது. இதனுடைய தாவரப்பெயர் ECLIPTA PROSTRATA ROXB.ஆகும். இதனுடைய தாவரக்குடும்பம் ASTERACEAE.ஆகும்.
இதில் செடி முழுவதும் மருத்துவக் குணம் கொண்டது
மஞ்சள் பூ கரிசலாங் காமாலை கும், வெள்ளை பூ கரிசலாங்கண்ணி ஊது காமாலைக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
இதன் இலைகளில் முக்கிய வேதியப் பொருட்களான ஸ்டிக்மாஸடீரால், மற்றும் ஏ-டெர்தைனில் மெத்தானால் மற்றும் எக்லிப்டின், நிக்கோடின் ஆல்கலாய்டுகள் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.. 16 வகையான பாலி அசிட்டெலினிக்தை யொபீன்கள் கொண்ட ஒரு செடியாகும்.
கரிசலாங்கண்ணி கூந்தல் வளர்ச்சி எண்ணெய்:
கரிசிலாங்கண்ணி முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய ஒரு கீரையாகும். கரிசலாங்கண்ணி எண்ணெய் தயாரிக்க இதனுடைய இலை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு சூரிய ஒளி படுமாறு வைக்கவும். அவர் வைத்து அதை எட்டு நாட்கள் கழித்து வடிகட்டி பிறகு உபயோகப்படுத்தினால் முடி மற்றும் கூந்தலானது நீளமாகவும் ,அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும்.
உடல் தங்கம் போல
மினுமினுக்க:
கரிசலாங்கண்ணியில் இரும்பு மற்றும் தங்க
சக்திகள் உள்ளதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே இதை உணவில் அடிக்கடி எடுத்துக் கொண்டால்
உடலானது தங்கம் போல் மினுமினுக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் இது சளி காய்ச்சல்
மற்றும் தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
முக்கியமாக இது உடலிலுள்ள கல்லீரல் மற்றும்
மண்ணீரல், சிறுநீரகம் போன்றவற்றில் உள்ள நச்சுக்களை நீக்கும் மருத்துவ குணம் கொண்டது.
சுத்தம் செய்து உடலை பாதுகாக்கிறது.
கரிசலாங்கண்ணி கீரை அடிக்கடி உணவில்சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி எடையை குறைத்து தொந்தியை குறைக்கிறது. அதுமட்டுமல்லாமல் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது
காமாலை சோகை:
காமாலை சோகை குணமாக மஞ்சள் நிற கரிசலாங்கண்ணி இலையை பத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் 2கீழாநெல்லி இலை மற்றும் துளசி இலை 2 ஆறு வேப்பிலை எடுத்துசேர்த்து பச்சையாக. வெறும் வயிற்றில் காலை மாலை சாப்பிடவும் அவ்வாறு சாப்பிடும்போது காமாலை குணமாகும் பத்து இருபது நாட்களில்.
அவ்வாறு சாப்பிடும் போது மோர் மற்றும் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம்.
கரிசலாங்கண்ணி கீரையின் விலை:
கரிசலாங்கண்ணி பொதுவாக மார்க்கெட்டுகளில் ஒரு கட்டு 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பாம்புகடி மருந்து
தேள் கடிக்கு இந்த இலையை பறித்து சாப்பிட்டுவிட்டு அதனுடைய கடிவாயில் கரிசலாங்கண்ணி இலையை அரைத்து கட்டினால் விஷம் இறங்கும். மேலும் பாம்புகடி விஷம் குறைய இதனுடைய இலை சாறு 50 மில்லி லிட்டர் எடுத்துக்கொண்டு அதனுடன் மோர் 200 மில்லி லிட்டர் எடுத்துக்கொண்ட ஒன்றாக கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் குறையும்
காது வலி ஏற்படும் இதனுடைய சாறு காதில் விட காதுவலி குணமாகும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா சளி உள்ளவர்கள் இதனுடைய சாருடன் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் கலந்து அதில் 100 கிராம் அதிமதுரம் மற்றும் 50 கிராம் திப்பிலி சேர்த்து சுண்டக் காய்ச்சவும். பிறகு அதை வடிகட்டி 5 மில்லி லிட்டர் அளவுக்கு தினமும் காலை மாலை என்று இருவேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா சளி வெளியேறி ஆஸ்துமா சளி குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளி குணமாக இதன் சாறை 10 சொட்டு எடுத்துக் கொண்டு அதனுடன் 10 துளி தேன் சேர்த்து சுடுநீரில் கலந்து பிறகு கொடுக்க குழந்தையின் இருமல் சளி போன்றவைகள் குணமாகும்.
குட்ட நோய்
குட்ட நோய் உள்ளவர்கள் நூறு ஆண்டு பழமையான வேப்ப மரப் பட்டையை உலர்த்தி சூரணம் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதனை கரிசலாங்கண்ணி சாறில் ஏழு முறைஊற வைக்கவும். பின் அந்த உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் 48 நாள் முதல் 144 நாட்கள் வரை சாப்பிட்டு வர 18 வகை குட்டநோய்களும் குணமாகும்.
இளநரை குணமாக:
பூக்காத கொட்டைக் கரந்தை என்ற மூலிகையும் கரிசாலை சமன்செய்து சூரணம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்த சூரணத்தை நாள்தோறும் காலை மாலை என்று இருவேளை அரை டீஸ்பூன் தேனில் கலந்து சாப்பிட்டு வர இளம் வயதில் ஏற்படும் நரை மறையும்.
சாப்பிட்டு வர குரல் நோய்கள் குணமடைந்து குரல் இனிமையாகும். இது பல் சம்பந்தமான நோய்களையும் குணமாக்க வல்லது.
இதனுடைய வேர் பயன்கள்:
இதனுடைய வேரானது வாந்தியை ஏற்படுத்துவதற்கும், மலமிளக்கியாகவும் பயன்படுகிறது. மேலும் இது கால்நடைகளை ஆடு மாடு போன்றவைகளுக்கு ஏற்படும் குடல் புண் ஆற்றும் மற்றும் வெளிப்புறத்தில் ஏற்படும் புண்களை ஆற்ற வல்லது. இது ஒரு கிருமிநாசினி.
கரிசாலை தைலம் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
கரிசாலை
நல்லெண்ணெய் ஒரு லிட்டர்
குமரிச்சாறு-250 மில்லி லிட்டர்
நெல்லிக்காய் சாறு- 250 மில்லி லிட்டர்
ஜாதிக்காய்-10கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 10 கிராம்
பால்- தேவையான அளவு
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பதமுறக் காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொண்டால் அதுவே.கரிசாலை தைலம்.
கரிசாலை தைலத்தை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்துவர தலைவலி, காது வலி, முடி வளர்ச்சி சம்பந்தமான நோய்கள், கிறுகிறுப்பு போன்ற நோய்கள் குணமாகும் மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து உடலில் உள்ள வெப்பத்தை வெளியேற்றும்.
கரிசாலையை தீயிலிட்டு பிறகு சுட்டெரித்து
கிடைக்கும் சாம்பலை மைபோல் நெற்றியில் வைத்து பூசி கற்பூரம் காட்டி கீழ்க்கண்ட மந்திரத்தை கூற அணிந்தவர் வசியமாவார்.
"பணிந்து நின்ற பொற்பாவை தன்ணை நீயும்
பாலனே சுழிமுறையான் மெருகேற்று
அணிந்து நின்று "யவசிவய' " என்று நீயும்
அப்பனே கற்பூரம் தீபம் பார்த்து
துணிந்து நின்று பூதி தன்னைக் கையில் வாங்கிச்
சுத்தமுடன் லலாட மதில் பூசிவிட்டால்
அணிந்து நின்ற சத்துருக்கன் வசியமாவார்
அனைவருந்தான் பின் வணங்கி நிற்பார் கேளே.
-------------------------அகத்தியர் பரிபூரணம்."
karisalankanni benefits tamil,manjal karisilanganni,karisilankanni keerai uses,payangal,nanmaigal,bhringraj powder uses,powder online,price rate vilai business