புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

Health drink boost recipes

Health drink boost recipes


 குழந்தைகளுக்கு தற்போது கடைகளில் விற்கும் பல வண்ண நிர சாக்லேட்டுகளை கொடுப்பதை விட வீட்டிலேயே தயார் செய்யப்படும் பர்பி வகைகள் மிகவும் ஆரோக்கியமானது .நாம் கடலை மிட்டாய் பர்பி,தேங்காய் பர்பி போன்றவற்றை கேள்விப்பட்டிருப்போம் அதன் வரிசையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில் மற்றும் மாலையில் அருந்தும்  பூஸ்ட் ஐ கொண்டு அ

பர்பி தயாரிப்பது எப்படி என்பதை பார்ப்போம்.இந்த பூஸ்ட் பர்ப்பி தயார் செய்வது எப்படி என்பதை கீழே பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:


1.சக்கரை ஒரு கப்

2.ஏலக்காய் 2

3. நெய் முக்கால் கப்

4.பொட்டுக்கடலை ஒரு கப்

5.ஐந்து ரூபாய் பூஸ்ட் பாக்கெட் ஒன்று


ஒரு பாத்திரம் அடிப்பகுதி கனமாக இருக்க வேண்டும் அல்லது நான்ஸ்டிக் தவாவில் சிறிது நெய்யை சுற்றிலும் தடவிக்கொள்ள வேண்டும்.

மிக்ஸி ஜாரை நன்றாக ஈரம் இல்லாத அளவுக்கு துடைத்துக் கொண்டு,அதில் பொட்டுக்கடலை சர்க்கரை ஏலக்காய் போன்றவற்றை நன்றாக அரைத்து பிறகு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.இதனுடன் ஐந்து ரூபாய் பூஸ்ட் பாக்கெட் கலந்து வைத்துக் கொள்ளவும்.


நான்ஸ்டிக் தவாவில் நெய்யை ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும்.பிறகு நெய்யில் ஏற்கனவே உள்ள மாவு கலவை போட்டு நன்றாக கைப்படாதவாறு கிளற வேண்டும்.மாவு பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு,மாவு கலவையை நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி விட வேண்டும்.பிறகு சிறிது நேரம் ஆறிய பிறகு நமக்கு தேவையான வடிவத்தில் பர்பிகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.இதை வாயில் போட்டால் நன்றாக கரையும் பர்பி ரெடி.

Post a Comment

0 Comments