புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

முடி வளர்ச்சி எண்ணெய் தயாரிப்பது எப்படி? hair growth oil

 Hair growth oil 

முடி வளர்ச்சி எண்ணெய் தயாரிப்பது எப்படி?

 

இப்பொழுது பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய ஆரோக்கிய குறைபாடு முடி உதிர்வது மற்றும், கூந்தல் வளர்ச்சி இன்மை மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளாகும்.  முடி வளர்வதற்காக  பலரிடம்  பெண்கள் ஆலோசனை கேட்டிருப்பீர்கள். ஆனால்  மிக குறைந்த செலவில் எளிய முறையில் இந்த மூலிகை எண்ணெய் தயாரித்து உபயோகப்படுத்தி வந்தால் முடி நன்றாக வளர்ந்து முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் நீங்கி கூந்தல் நீளமாகவும்.

 

தேவையான பொருட்கள் 

அளவு

கரிசலாங்கண்ணி கீரை இலை

25 கிராம்

 நெல்லிக்காய் 

50 கிராம்

கீழாநெல்லி இலை 

50 கிராம்

கறிவேப்பிலை 

50 கிராம்

செம்பருத்திப்பூ

50 கிராம்

 வெந்தயம்

 25 கிராம் 

 தேங்காய் எண்ணெய்

1   லிட்டர்

 

  மூலிகை எண்ணெய் தயாரிப்பதற்கு , மேற்கண்ட மூலிகைகளை தயார் செய்து, வெயிலில் நன்றாக உலர்த்தி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேங்காய் எண்ணெய் வாணலியில் எடுத்து  அதனுடன் இந்த மூலிகைகளை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இவ்வாறு கொதிக்க வைக்கும் போது இந்த மூலிகைகளின் சாறு தேங்காய் எண்ணெயில் இறங்கிவிடும். அப்பொழுது தேங்காய் எண்ணெய் நிறம் மாறும். அதன்பிறகு என்னை இறக்கி வைத்து பிறகு ஆறவைத்து ஒரு பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி நன்றாக வளரும் என்று  கூறுகிறார்கள்.

 

நேச்சுரல்ஸ் ஷாம்பூ தயாரிப்பது எப்படி?

 

இதற்கு தேவையான பொருட்கள் பூந்திக்காய், கற்றாழை, செம்பருத்தி பூ ஆகும். பூந்திக்காயை   நாட்டு மருந்து கடைகளில்  வாங்கிக் கொள்ளலாம்பூந்திக்காய் 20 கிராம் எடுத்துக்கொண்டு  அதனை  ஒரு நாள் இரவு நீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் பூந்திக்காய் விதைகளை நீக்கிவிட்டு,  20 கிராம் கற்றாழையின் சோற்றுப் பகுதி மற்றும் செம்பருத்தி பூ 3 எடுத்துக்கொண்டு  மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனை குளிப்பதற்கு ஷாம்பூவுக்கு பதிலாக பயன்படுத்தினால்  முடியானது நன்றாக வளரும் மற்றும்  சைனிங்  ஆக  அழகாக இருக்கும்.

 

 

 

Post a Comment

0 Comments