சதுரகிரி மலையின் சிறப்பு அம்சங்கள்
மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் வட்டம் சாப்டுர் மற்றும் தனிபரை மலைப்பகுதியில் சிவகிரி விஷ்ணு கிரி பிரம்மகிரி சித்தகிரி ஆகிய நான்கு மலைகள் உள்ளன.
இவைகளுக்கு நடுவில் சிவகிரி என்ற மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் இருக்கிறது சஞ்சீவி மலை என்ற பெயரே பின்னாளில் சதுரகிரி மலை என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
இந்த கோவில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இங்கு சுந்தரலிங்கம் சந்தன லிங்கம் என்ற பெயர்களில் இரண்டு திருமேனி களாக இறைவன் எழுந்தருளி இருக்கிறார்.
இங்கு அகத்தியர் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும் காயகற்ப மூலிகை வளம் நிறைந்து உள்ளது மாக இருக்கிறது இந்த தளம் இங்கு அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.
சதுரகிரி மலை ஏராளமான மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது. இங்கு உள்ள மூலிகைகள் அனைத்திற்கும் நோய்களைத் தீர்க்கும் சக்தி நிறைந்துள்ளது. நான் இந்த மலையின் மீது ஏறி இறங்கும் போது நம் உடலில் உள்ள வியர்வை வெளியேறி அங்குள்ள மூலிகைகள் நிறைந்த காற்று நம் உடலில் பட்டு நம் உடலில் உள்ள எல்லா நோய்களையும் இது குணமாகிவிடும் என கூறுகிறார்கள்.
இங்கு 18 சித்தர்களின் சன்னிதி சந்தன மகாலிங்கம் கோவில் அருகே அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசை போன்ற முக்கிய விழாக்கள் தை அமாவாசை மகாளய அமாவாசை மகா சிவராத்திரி சித்ரா பவுர்ணமி மார்கழி முதல் நாள் என முக்கியமான விசேஷ நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருவது உண்டு.
போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே தான் பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை செய்தார் என்று கூறுகிறார்கள்.
சதுரகிரி மலையில் உள்ள ஜோதி புல்லை பகலில் நீரில் நனைத்து இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல ஒளி போல் காட்சி அளிக்கும் எனக் கூறுகிறார்கள். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
மகாலிங்கம் கோவிலில் வடக்கே ஊஞ்சல் கருப்பண்ணசாமி ஆலயம் அமைந்துள்ளது.
இங்கு இருக்கும் சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் ஒரு மணிக்கு அபிஷேக பூஜை தொடங்கும். ஆடி அம்மாவாசை போன்ற முக்கியமான நாட்களை தவிர மற்ற அமாவாசை நாட்களில் இங்கு பிரசாதமாக தேனும் தினைமாவும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றன.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுந்தர தீர்த்தம் இருக்கிறது. இந்த சுந்தர தீர்த்தத்தை இறைவனை வணங்கி ஒருமுறை நீராடினால் போதும் நாம் கொலை காமம் குரு துரோகம் போன்ற படங்களில் இருந்து நீங்கி புண்ணியத்தைப் பெறலாம்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com