சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்.
தினந்தோறும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைத்து வழிபட்டு வரவேண்டும்.
வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இரும்பு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட்டு வரவேண்டும் சனிபகவானுக்கு.
கறந்த பசும் பாலினைக் கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வரலாம். வாரந்தோறும் சனிக்கிழமை அன்று வில்வம் கொண்டு சிவபெருமானை அர்ச்சித்து வரலாம் மேலும் இதனை பிரதோஷ நாட்கள் செய்து வந்தால் மிகவும் நல்லது.
அஷ்டம சனி தோஷம் நீங்க விநாயகப் பெருமானை வணங்குவதும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வட மாலை அல்லது துளசி மாலை அணிவித்து பூஜை செய்து வழிபட்டு வருதல் வேண்டும்.
கோவில்களில் 9 நபர்கள் நவகிரகங்களை வலம் வருவதும் உளுந்து கலந்த தானியத்தை தானமாக வழங்குவதும் நீலக்கல் உள்ள மோதிரத்தை அணிவது ஏழரை சனியின் தாக்கத்தை குறைக்கும்.
சனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாக இருக்கும் காலங்களில் தோல் அகற்றாத உளுந்தை எடுத்து 108 என்ற எண்ணிக்கையில் எடுத்து இரவு உறங்கும்போது தலையணையில் வைத்து பின்னர் காலையில் எழுந்து நீராடி கோயிலுக்குச் சென்று சனி பகவானை 108 முறை வலம் வந்து ஒவ்வொரு முறைக்கும் ஒரு உளுந்து என்ற அடிப்படையில் கீழே போடவேண்டும் இவ்வாறு செய்து வருவதன் மூலம் துன்பங்கள் இருக்கும் காலங்களில் அது குறையும் மேலும் கருப்பு உளுந்து சனிபகவானின் நல்லாசி நமக்கு கிடைத்திட அருள் செய்யும்.
சனிக்கிழமைகளில் அசைவம் செய்த உணவை தவிர்ப்பது நல்லது.
சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் கலந்து குளித்து நீராடி வந்தால் தீமைகள் குறையும்.
வன்னி மரத்தை சுற்றி வலம் வந்து வழிபட்டு வந்தால் சனி பகவானின் முழுமையான பாதிப்புகளில் இருந்து விலக முடியும். மேலும் வன்னி மரத்தின் இலைகளை மாலையாகத் தொடுத்து சிவபெருமானுக்கு தொடுத்து சனிக் கிழமைகளில் வழிபட்டு வரவேண்டும்.
தினந்தோறும் காலையில் எழுந்தவுடன்ர ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் பிடியிலிருந்து தப்பிக்க முடியும்.
சனிக்கிழமை அன்று விரதமிருந்து சிவபெருமானுக்கு படையல் போட்டு காக்கைக்கு உணவு வைத்து வழிபட்டு வந்தால் சனி தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.
சனி பிரதோஷ நாட்களில் வழிபட்டு வந்தால் சிறந்த பலனை கொடுக்கும்.
கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு பூஜை செய்து வழிபட்டு வருதல் நல்லது.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com