முருகனின் ஆறுபடை வீடுகள்
தமிழகத்தில் இந்து சமய கடவுள்கள் பல உள்ளன.அவர்கள் தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு படை வீடுகள் உள்ளன. ஆறுபடை வீடுகள் என்பது அவற்றின் ஆறு கோயில்களை குறிப்பதாகும்.
திருப்பரங்குன்றம்
திருச்செந்தூர்
திருவாவினன்குடி என்கிற பழனி
திருவேரகம்
திருத்தணி
பழமுதிர்ச்சோலை என்பதாகும்.
திருப்பரங்குன்றம்
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது வீடாக இருப்பது திருப்பரங்குன்றம். இங்கு எப்பொழுதும் மக்கள் ஒரு சிறிய கூட்டத்துடன் காணப்படுவர். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட மணக்கோலத்தில் காட்சி தருவார்.
திருச்செந்தூர்
முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக இருப்பது திருச்செந்தூர் ஆகும் இது கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரே கோயில் இதுதான் ஏனெனில் பொதுவாக முருகன் கோயில்கள் அனைத்தும் ஏதாவது ஒரு குன்றின்மேல் தான் இருக்கும். இந்த தளம் கைலாயத்திற்கு சமமானதாக கருதப்படுகிறது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு தங்கும் இடமாக இது உள்ளது. இங்கு முருகப் பெருமான் திருவடிகளை படகிற்கு சமமாக கூறுகிறார்கள்.
பழனி
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இடங்களில் ஒன்று பழனி மலை ஆகும். இது முருகனின் ஆறுபடை வீடுகளுள் மூன்றாவது வீடாக உள்ளது. இந்த பழனி மலையில் மக்கள் எப்பொழுதும் அதிகமாக இருந்து கொண்டே இருப்பார்கள்.
இங்கு நாரதர் சிவனுக்கு அடைத்த ஞான்று பழம் தனக்கு கிடைக்காததால் முருகன் கோபமடைந்தார்.எனவே அவர் பழனியில் சென்று ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கி விட்டதாக புராணங்கள் கூறப்படுகின்றது.
திருவேரகம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த சுவாமிமலை என்கிற திருவேரகம் அமைந்துள்ளது.இது கும்பகோணத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.இந்த கோவிலில் அதிக அளவு கூட்டம் இல்லாமல் நிம்மதியாக இருக்கும் தரிசனம் செய்ய ஏற்ற இடமாக உள்ளது. சுவாமிமலை வீடுகளில் நான்காவது இடமாக இந்த இடம் உள்ளது.
திருத்தணி
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்த இடமாக இது உள்ளது.திருத்தணி முருகன் கோயில் ஒரு குன்றின்மீது முருகனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மலையாகும். இக்கோயிலுக்கு தணிகை முருகன் கோவில் என்றும் பெயருண்டு.
பழமுதிர்ச்சோலை
பழமுதிர்ச்சோலை முருகனின் ஆறுபடைவீடுகளில் கடைசி வீடாக உள்ளது. இங்கு முருகப்பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இந்த இடம்தான். என நம்பப்படுகிறது. விஷ்ணு பெருமானான அழகர்கோவில் மலை மீது இந்த முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த தளத்தின் மீது திருப்புகழ் பாடியுள்ளார் அருணகிரிநாதர்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com