புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

கண் திருஷ்டியில் இருந்து விலகுவது எப்படி kan thirusti pariharam

 கண் திருஷ்டி ஏற்பட்டுவிட்டதா!  கண் திருஷ்டியில் இருந்து விலகுவது எப்படி அதற்கான வழிமுறைகளை பார்ப்போம்!



நம்மளுடைய முன்னோர்கள்  நன்றாக வாழ்வதற்காக நல்ல வாழ்க்கை முறைகளை  சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்! அதில் ஒன்றுதான் கண்ணேறு என்று கூறப்படும் கண்திருஷ்டி கண்திருஷ்டி ஏற்படாமல் இருக்க பல வழிகள் நம் நாட்டில் சொல்லப்பட்டுள்ளன..


அதாவது கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லுவார்கள்.


ஒருவரது வீட்டிலோ அல்லது அவர் செய்யும் வியாபாரத்தில் ஓர் மற்ற இடங்களில் கண்திருஷ்டி இருந்தால் அது பலவித பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.


எனவே இந்த கண்திருஷ்டி தீயசக்திகளை அடியோடு போகவும் மற்றும் திரும்பவும் ஏற்படாமல் இருக்கவும் ஒரு சில வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


பொதுவாகவே கண்திருஷ்டி ஏற்படக் கூடாது என்றால் அவர்கள் நெற்றியில் திருநீறு, திருமண், குங்குமம் ,சந்தனம் இவற்றில் ஏதாவது ஒன்றை நெற்றியில் வைக்க வேண்டும் .இது தெய்வீக சக்திகளை கொண்டது ஆகவே வெளியே செல்லும் பொழுது இதில் ஏதாவது ஒன்றை நெற்றியில் இட வேண்டும்.  இவ்வாறு செய்வதன் மூலம் கண் திருஷ்டியில் இருந்து விலக முடியும்.


கழுத்தில் ருத்ராட்சம் அல்லது படிகம் இது போன்ற நல்ல உயர்ந்த இறைசிந்தனை, இறை நம்பிக்கை, இறை ஆற்றலை அதிகப்படுத்தக்கூடிய பொருட்கள் நம் உடலோடு ஒட்டி இருப்பதனால் கண்திருஷ்டி ஏற்படாது.


இதுமட்டுமில்லாமல் காலில் கருப்பு கயிறு, கையில் சிவப்பு அல்லது கருப்பு கயிறு கழுத்தில் கயிறு இதுபோன்ற கயிறுகளை கட்டுவது மற்றும் தலைமுடியை கயிறு போல் திரித்து கை கால்களில் கட்டுவது இவை கண் திருஷ்டிக்கு ஒரு நல்ல பலனை அளிக்கும்.


மேற்கண்டவை எல்லாம் நாம் உடலோடு ஒட்டி காணப் படும் பொருட்கள் ஆகும்.


பிறந்த குழந்தைக்கு கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்றால் அவர்கள் நல்ல தூய்மையான கரிசலாங்கண்ணி இலையில் இருந்து பெறப்பட்ட மயில் கன்னம் நெற்றி மற்றும் உள்ளங்கால்களில் மை வைப்பது உண்டு இவ்வாறு செய்வதால் பெற்றவர்களின் கண்கள் கூட பிள்ளைகளுக்கு படாது.


இது மட்டுமில்லாமல் ஆழம் கரைத்து வெற்றிலை மற்றும் இரண்டு மிளகாய் வைத்து அரைத்து இரவில் குழந்தைகளுக்கு தூங்குவதற்கு முன்பு எடுத்த பின்பு தூங்க வைக்க வேண்டும். இது கண் திருஷ்டியில் இருந்து விலக ஒரு வழியாகும்.


5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கீழ்க்கண்ட விதிகளுக்கும் செயல்முறைகளை செய்யலாம்.


முதலில் நான் இரண்டு உள்ளங் கைகளில் உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் இதை மேலிருந்து கீழாக வைத்து பின்பு அந்த உப்பை தண்ணீரில் கரைத்து வெளியேற்ற வேண்டும்.


இரண்டாவதாக நாம் குளிக்க எடுத்து வைத்திருக்கும் தண்ணீரில் இரண்டு கைப்பிடி அளவு உப்பை கரைத்து அந்த நீரை குளித்து வரவேண்டும்.


மூன்றாவதாக நான் ஒரு கைப்பிடி அளவு உப்பு மிளகாய் மற்றும் கடுகு வாசலில் உள்ள மண் ஆகிய அனைத்தையும் எடுத்துக் கொண்டு ஒரு அட்டைப் பெட்டியிலோ அல்லது ஓலை பெட்டியிலோ வைத்து யாருக்கு சுற்ற வேண்டும் என்று நினைக்கிறோமோ அவங்களுக்கு சுத்தி பின்பு வாசலில் வைத்து எரித்து விட வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் திருஷ்டி கழியும் என்று பழங்காலத்தில் கூறுகிறார்கள்.


வீட்டில் கண் திருஷ்டி ஏற்படாமல் இருக்க வீட்டின் முன் ஒரு நிலைக்கண்ணாடி விநாயகர் படம் திஷ்டி பொம்மை ஆகியவை வைப்பதன் மூலம் வீட்டிற்கு கண்திருஷ்டி ஏற்படாமல் தடுக்கலாம்.





Post a Comment

0 Comments