பேன் பொடுகு தொல்லை விடுபட
pen podugu thollai neenga
நீளமான கூந்தல் வளர்ச்சி இருப்பதனால் முறையாக கூந்தலை சுத்தப் படுத்துவது கிடையாது. அவ்வாறு சுத்தப்படுத்த விட்டால் அழுக்குகள் சேரும்.
தலையில் அரிப்பு தொல்லை ஏற்படும். அங்கு பெண்கள் இனப்பெருக்கம் செய்து புண்களாக மாறும். நாளடைவில் தலை மற்றும் முடி எண்ணெய் பிசுக்கு மற்றும் கசடுத் தன்மையும் சேர்ந்து துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும். இவை எல்லாம் இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
எளிமையான முறையில் போக்கிக் கொள்வதற்கான வழிமுறைகள் :
1.வாரம் இரண்டு அல்லது மூன்று முறை மருதாணி இலை ஒரு கைப்பிடி மருதாணிப் பூ ஒரு கைப்பிடி ஒரு கைக்குட்டையில் வைத்து தலைக்கு அடியில் வைத்து ஒரு வாரம் தூங்கி வரலாம். இதனால் தலையில் உள்ள துர்நாற்றமும் நீங்கும் கிருமிகளையும் போக்கும்.
2. துளசியை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதை தேவையான அளவு தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் பூசி வர வேண்டும்.இது தலையில் தோன்றும் புண்களை புண்களை ஆற்றும். பொடுகுத்தொல்லை கிருமிகளைப் போக்கும். மேலும் கசடுகளையும் மற்றும் எண்ணெய் பிசுக்கு களையும் நீக்கும்.
3. கருவேப்பிலையை ஒரு காப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வர இளநரையைப் போக்கும். நீண்ட கூந்தல் வளர்ச்சியை ஏற்படுத்தும். பொடுகுத் தொல்லையைப் போக்கும்.தலைப்பேன் மற்றும் புண்களை ஒழிக்கும்.
5. தினமும் காலை அல்லது மாலையில் தலைக்கு தேங்காய் எண்ணெயை தேய்த்து வாரி வந்தாலே பேன் தொல்லை நீங்கும்.
6. அரை கப் வெந்தயக் கீரையுடன் ஒரு கப் மரிக்கொழுந்து அரைத்து ஒரு பேக் போன்று தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து தலையை அலசினால் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.
7. எலுமிச்சைச் சாறு மற்றும் வசம்பு தேங்காய் எண்ணெயில் கலந்துதேய்த்துக் குளித்துவர பேனினால் ஏற்படும் அரிப்பு மற்றும் பேன்களால் ஏற்படும் புண் மற்றும் பொடுகு குணமாகும்.
8. எலுமிச்சை சாறில் கருஞ்சீரகத்தை அரைத்து வாரம் இரு முறை தலையில் தேய்த்து குளித்து வர பேன் மற்றும் பொடுகு நீங்கிவிடும்.
9. வேப்பம் பூவை தலையில் அரைத்து தேய்த்து குளித்து வர பேன் முற்றிலுமாக நீங்கும்.
10. வெதுவெதுப்பான பாலில் வெள்ளை மிளகை அரைத்து தலையில் தேய்க்க வேண்டும் இரண்டு மணி நேரம் கழித்து தலையை அலசி வந்தால் இதனால் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும். .
11. இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாறில் சிறிது வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்.
12. அரளிப் பூவை தலையில் சூட்டிக் கொண்டு இரவு முழுவதும் தூங்கினால் பேன் தொல்லை நீங்கும்.
13. ஆவாரம் இலைகளை நன்கு அரைத்து தலையில் தேய்த்து வாரம் இருமுறை குளித்து வர பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.
15. சீதாப்பழ இலையை நன்கு தண்ணீர் விட்டு அரைத்து வாரம் இரு முறை தலையில் தேய்த்து குளித்து வர பேன் மற்றும் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும்.
16. நல்லெண்ணெயில் நன்றாக செம்பருத்திப் பூவை போட்டு காய்ச்சி தலையில் தடவி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com