ஆன்மீகம் - பணம் நிம்மதி மகிழ்ச்சி வீட்டில் பெருக செய்ய வேண்டிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்!
panam nimmathi peruga
1.நாம் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைப்போம் அது எரியும் போது தானாக அணைக்கக்கூடாது அதனை கையாளும் அணைக்கக்கூடாது புஷ்பத்தினால் மட்டுமே அணைக்க வேண்டும்.
2. கோமாதா க்கு நான் ஒரு படத்தை வழங்கினாலே நம்மளைத் தேடி கோடி புண்ணியம் வந்து சேரும் என்பது உண்மை.அதனால் அவற்றுக்கு நாம் தீவனங்களை வாங்கி தருவது சிறப்பு.
குபேரன் பசுக்களிடம் குடி கொண்டிருப்பதால் நாம் கோமாதா பூஜை செய்யவேண்டும் கோமாதா பூஜை செய்வதால் அது குபேரனுக்கு பூஜை செய்வதுபோல சமமாகும்.
3. அனுமன் ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அவனே தேடி வந்து விடுவான் அவனை அழைக்க வேண்டிய அவசியமில்லை.
அதுபோல ஸ்ரீராமன் பெருமைகளை பேசப்படும் இடத்தில் அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் தானாகவே அன்னை திருமகள் வந்து விடுவாள்.
4. இல்லந்தோறும் காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும் மாலை வேளைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஒளிபது மிகவும் அவசியம். எனவே அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே உயர்ந்துவிடும்.
5. சூரியன் மறைந்த பிறகு பால் தயிர் தண்ணீர் போன்றவற்றை நாம் அடுத்தவர்களுக்கு தரக்கூடாது.வெற்றி இலை வாழை இலை போன்றவற்றை வாட விடக்கூடாது. மேலும் வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.
6. நமது வீட்டிலிருக்கும் அம்மி உரல் மற்றும் வாசற்படியில் அமர்ந்து உட்காரக் கூடாது.
7. நமது வீட்டிலிருக்கும் அன்னம் உப்பு நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது. இவைகளை கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். ஏனென்றால் இவை மூன்றும் கோ மாமிசத்துக்கு சமம் ஆகும். ஆகவே நாம் இவற்றை கையால் பரிமாறக் கூடாது.
8. தினமும் காலையில் எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள் பசு இறைவனின் உருவப் படத்தை பார்க்க வேண்டும்.
9. துளசி மாடம் இருந்தால் தினமும் துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி வழிபட்டு தரிசிக்கவேண்டும்.
10. வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சளும் குங்குமமும் தரவேண்டும். நாம் இவ்வாறு சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் நாம் செய்த பாவங்கள் விலகி சந்தோஷமும் பொருளும் செல்வ வளமும் நிம்மதியும் வீட்டில் பெருகும்.
11. ஒருவருக்கு பணம் கொடுக்கவோ அல்லது வாங்கவோ செய்தால் வாசற்படிக்கு வெளியே நின்று செய்தல் கூடாது.அதை உள்ளே நின்று செய்தல் வேண்டும்.
வீட்டில் ஆன்மீகம்,மன நிம்மதி ,மகிழ்ச்சி, பணம் ஆகிய மூன்றும் அதிகரிக்க வேண்டுமென்றால் மேற்கூறிய வழிமுறைகளை நாம் தொடர்ந்து செய்து வந்தால் நம் வீட்டில் இவை அனைத்தும் நிலைத்து நிற்கும்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com