புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

வீட்டில் காணப்படும் கொசு, கரப்பான்பூச்சி அகற்ற. kosuvai viratta



 வீட்டில் காணப்படும் கொசு, கரப்பான்பூச்சி, பல்லி, எறும்புகள் போன்றவற்றை அகற்ற சில வழிமுறைகள்!.
kosuvai viratta tips


ஹவுஸ் இன்டெக்ஸ் என்று சொல்லப்படும் பூச்சிகள் வீடுகளில் எல்லா இடங்களிலும் தான் இருக்கின்றது அவற்றை விரட்டி அடிப்பதில் பல்வேறு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது அவற்றில் எளிமையாகவும் வீடுகளில் பயன்படுத்தும் ஆனதாக இருக்கும் வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.



கொசுக்கள்




நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றான பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இதில் மருத்துவ குணங்கள் மட்டுமின்றி கொசுக்களை விரட்டும் குணமும் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. நான்கு அல்லது ஐந்து எண்ணிக்கையில் பூண்டை எடுத்து நன்றாக நசுக்கி அதனை சுடுநீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அந்த நீரை வீடு முழுக்க தெளித்தால் கொசு தொல்லை வீட்டில் இருந்து விலகி விடும். பூண்டின் வாசம் பரவலாக இருந்தால் கொசு வீட்டை நெருங்கவே நெருங்காது.


எறும்புகள்


எறும்புகள் பொதுவாக எல்லார் வீடுகளிலும்  இருக்கின்றன. வெயில் காலமாக இருந்தாலும் சரி மழை காலமாக இருந்தாலும் சரி இரண்டு காலங்களிலும் எறும்புகள் வீட்டை சுற்றி வலம் கொண்டு தான் இருக்கின்றது. இந்த எறும்புகளை விரட்ட வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம் .இந்த வெள்ளை வினிகரை தெளிப்பதன் மூலம் எறும்புகளை விரட்ட முடியும்.எரும்பு தொல்லைகள் இருக்கும் இடத்தில் இந்த வெள்ளை வினிகர் ஸ்பிரேயர் மூலமாக தெளித்து விடலாம். எறும்புகளை வரவிடாமல் செய்ய இம்முறையானது பாதுகாப்பானதாகவும் இயற்கையான தாகவும் இருக்கின்றது.


கரப்பான் பூச்சி







நமது வீடுகளில் கழிவறை சமையல் அறை பூஜை அறை உள்ளிட்ட எல்லா இடங்களிலும் இந்த கரப்பான் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கின்றன. இந்த போரிக் பவுடர் கரப்பான் பூச்சியின் தொல்லையை விலக்க கூடியது .எனவே நாம் இந்த கரப்பான் பூச்சியை விரட்ட கோதுமை மாவுடன் சிறிது போரிக் பவுடரை சிறிது நீரும் கலந்து உருண்டை பிடித்து கரப்பான்பூச்சி இருக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நாம் இந்த கரப்பான் பூச்சி தொல்லையை முற்றிலுமாக ஒழித்து விடலாம்.


பல்லி





வீட்டு சுவற்றில் எங்கு பார்த்தாலும் பல்லிகள் ஆக்கிரமித்து உள்ளதா அப்படி எனில் இதோ சில வழிமுறைகள். வீட்டின் மூலைகளில் முட்டையின் ஓட்டினை ஒட்டி வையுங்கள் நாற்றத்தினால் பல்லிகள் வீட்டை நெருங்காது. போய்விடும் அல்லது நாப்தலீன் உருண்டைகள் சிறந்த பூச்சிக் கொல்லிகள் ஆகும். இதை உங்கள் வீட்டு அலமாரிகளில் சீங்குளில் கேஸ் அடுப்பு கடையில் போட்டு வையுங்கள் பல்லிகளை விரட்ட இது ஒரு சிறந்த முறையாக உள்ளது.



Post a Comment

0 Comments