உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் புதினா...! puthina payangal
அருசி யொடுவாந்தி யக்கினி மந்தங்
குருதி யழுக்குமலக் கொட்ட – விரியுந்
துதியதன்று சோறிறங்குத் தொல்லுலகில் நாளும்
புதியனல் மூலி புகல்.
(அகத்தியர் குணபாடம்)
பொருள்
ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ண நோய்களை இருக்கிறது. ரத்தத்தைத் தூய்மை படுத்தும் தன்மை கொண்டது,. வாயுப் பிரச்னையைத் தீர்ப்பதுடன், மலச்சிக்கலையும் போக்கவல்லது..
புதினா கீரையின்
தன்மை
பசித்தூண்டி
= Stomachic
சிறுநீர்ப்பெருக்கி = Diuretic
வெப்பம் உண்டாக்கி = Stimulant
அகட்டுவாய் அகற்றி = Carminative
இசிவு அகற்றி = Anti Spasmodic
புதினாவில் உள்ள சத்துக்கள்:
புதினாக்கீரை ஆண்மைக் குறைபாட்டை நீக்கி
முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்க உதவுகிறது.
புதினா ரத்தத்தை சுத்திகரிக்கவும், எளிதில் ஜீரணமாகாத உணவுகளை
>> புதினா அவனது உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
வயிற்றுப் போக்கால் ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் வல்லமை கொண்டது.
>>மேலும் இது முகத்தில் ஏற்படும் முகப்பருக்களை குணப்படுத்தவும், டிரை ஸ்கின் போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
>>புதினாக்கீரை நரம்பு வலி, தலைவலி, தசை வலி போன்றவற்றை சரி செய்ய பயன்படுகிறது.
ஆசியா மற்றும்
ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வந்த இது இப்பொழுது உலகமெங்கும் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.
இது உடலுக்குத்
தேவையான விட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் அடங்கியிருக்கின்றன. இதை துவையலாகவோ
, சட்னியாகவோ, பொடியாகவோ, அல்லது மணமூட்டியாக பயன்படுத்தலாம்.
புதினாவில் உள்ள நறுமணம் வாய் துர்நாற்றத்தை நீக்கி வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் இது பல் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவும் உதவுகிறது.
எப்படி வளர்ப்பது??
புதினாக் கீரை வாங்கும்போது புதினா இலைகளை அகற்றி கொள்ளவும். பின் மீதி இருக்கும் தண்டுகளை மடித்து தொட்டிகளில் அல்லது வீட்டு தோட்டங்களில் நட்டு வைத்து நீர் ஊற்றினால் உடனே வளரும் தன்மை கொண்டது.
வெறும் ஐந்து ரூபாயில் இயற்கை முறையில் பல் பொடி தயாரிக்க வேண்டுமா??
புதினாக்கீரையின் விலை ஒரு கட்டு ரூபாய் 5 ஆகும். ஆனால் அதனுடைய மருத்துவ குணமும் அல்லது மருத்துவ பயனும் ஏராளம். அதிலிருந்து எப்படி பல்பொடி தயாரிப்பது என்பதை பார்ப்போம்...
புதினா இலைகளை தனியாக பிரித்து எடுத்து வெயிலில் காய வைத்து பின் நிழலில் நன்கு உலர்த்திக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் நான்கில் அரை மடங்கு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பொடியை தனியாக ஒரு பாட்டிலில் எடுத்து காற்று புகாதபடி அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும். புதினா பல்பொடி தயாரித்து அதை தினசரி பயன்படுத்தி வரும்போது பல் சம்பந்தப்பட்ட எந்த வியாதிகளும் வராது என்பது நிச்சயம்.மேலும் இது பற்களில் ஈறுகளில் வரும் இரத்தக்கசிவு மற்றும் சீழ் வடிதல் போன்ற பிரச்சனைகளையும் ,பல் கூச்சத்தையும் தடுக்கும் வல்லமை கொண்டது.
– அனைவருக்கும் பகிருங்கள்