புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

30 நாட்களில் 30 கிலோ எடை குறைக்க Weight loose methods

 

30 நாட்களில் 30 கிலோ எடை குறைக்க weight loose methods

இன்றைய வாழ்க்கை முறையில் உடல் பருமனை குறைக்க பலரும்குறிப்பாக பெண்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றும் மற்றும் மருத்துவமனைக்கு சென்றும் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை நினைத்து கவலைப்பட்டு வருகின்றனர்.உடல் பருமனாக உள்ளவர்களை கேட்டால் தாங்கள் உணவு அதிகமாக உண்ணவில்லை என்றும் உடல் எடையை என்ன செய்தாலும் குறையவே மாட்டேங்குது என்றும் சொல்கிறார்கள்.மேலும் உடல் எடை அதிகரிப்பதால் பல வகையான புது நோய்களுக்கு ஆளாகின்றனர்

இங்கு கூறப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றினால் ஜிம்முக்கு செல்லாமலே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம் .


புரத்தை தவிர்க்க வேண்டாம்:


புரதம் அதிகம் உள்ள உணவுகளான முட்டை, பன்னீர்,நட்ஸ் வகைகளை எடுத்துக்கொள்ளும் பொழுது நீண்ட நேரம் தேவையில்லாத பசி எடுக்காது .இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் புரத உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.


வாட்டர் தெரபி:

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் அடிக்கடி தண்ணீர் குடித்து வர வேண்டும் குறிப்பாக வெந்நீர் அருந்தும் போது உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் நீங்கி உடல் எடை விரைவாக குறையும் என்று கூறுகிறார்கள்.


நொறுக்கு தீனி குறையுங்கள்:


உடல் பருமனாக உள்ளவர்கள் டயட் இருப்பதாக கூறிவிட்டு ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளாமல் இடையில் பசிக்கும் போது அவ்வபோது நொறுக்கு தீனிகளை தின்பதால் உடல் எடையானது கட்டுப்பாட்டுக்குள் வராமல் இருந்து விடுகிறது.நொறுக்கு தீனி தின்பது உடல் பருமனை அதிகரிக்க மிக முக்கிய காரணமாக அமைகிறது என்று கூறுகிறார்கள்.


உணவில் சுகர் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்:


எந்தெந்த உணவில் சர்க்கரை உள்ளதோ உதாரணமாக இனிப்பு வகைகள் பேக்கரி வகை உணவுகள் போன்றவற்றையும் டீ ,காபி போன்றவற்றில் உள்ள சக்கரை அளவை குறைக்கும் போது உடல் எடை கட்டுக் கோப்பில் இருக்கும்.



Post a Comment

0 Comments