Benefits of ashwagandha for men and women in tamil
அஸ்வகந்தா என்பது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை ஆகும். இதனுடைய இலை மற்றும் வேர்கள் , கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. இது வடமொழியில் அஸ்வகந்தா என்றும், தமிழில் அமுக்கிரா கிழங்கு என்றும் அழைக்கப்படுகிறது. அஸ்வம் என்றால் வடமொழியில்குதிரை என்றும் கந்தம் என்றால் கிழங்கு என்றும் பொருள். எனவே அஸ்வகந்தா என்று பெயர் பெற்றது. அமுக்குரா என்பதன் பெயர் என்றால்இதன் இலைகளை பூசும் போது இது உடலில் தோன்றும் கட்டிகளை அமுக்கும் வல்லமை கொண்டது. இதை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைப்படியே பயன்படுத்த வேண்டும்.
இதில் நாட்டு அமுக்கிரா(naatu amukra) மற்றும் சீமை அமுக்கிரா(seemai amukra) என்ற இரண்டு வகைகள் உண்டு.
இதனுடைய பொதுப்பயன்கள் என்னவென்றால் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது, தூக்கமின்மை விடுவிக்க கூடியது, இல்லற குறைபாடுகளை நீக்க கூடியது. இவை ஒவ்வொன்றும் என்னவென்று கீழே பார்ப்போம்.
மன அழுத்தம்: மற்றும் தூக்கமின்மை:
அஸ்வகந்தா வை (ashwagandha churna)பயன்படுத்தும் போது மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பலரது தூக்கமின்மைக்கு காரணம் மன அழுத்தம் ஆகவும் இருக்கலாம். இதை பயன்படுத்தும் பொழுது மனம் அமைதி பெற்று நிம்மதியான தூக்கத்தை பெறமுடியும்.
அமுக்கிரா கிழங்கின்(amukra kilangu) உள்ள ஊட்டச்சத்துக்கள் இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை தடுக்கும் ஆற்றலைப் பெற்றது ஏனென்றால் இதில் அடோப் சோனிக் என்ற பண்பு உள்ளது என்று ஆய்வுகள் கூறுகிறது.
சக்கரை நோயாளிகள் அமுக்கிரா கிழங்கை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க பயன்படுத்தவேண்டும். மேலும் இது சர்க்கரை நோயாளிகளின் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. ஆரோக்கியமானவர்கள் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும் இது பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஸ்வகந்தா வில் உள்ள பீட்டா சக்தி மூட்டு வலி மற்றும் மூட்டு வாதம் போன்றவற்றை குணப்படுத்தும் வல்லமை கொண்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஜலதோஷம் உள்ளவர்கள் அஸ்வகந்தா பொடியை தேநீரில் போட்டு தேனீர் தயாரித்துக் குடிக்கும்போது ஜலதோஷம் கிருமிகளை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குவதாக நூல்கள் குறிப்பிடுகிறது’
பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன பிரச்சினை காரணமாக ஏற்படும் பாலியல் விரைப்புத்தன்மை பிரச்சனைகளை தீர்க்கும் நல்ல மருந்தாக அஸ்வகந்தா பயன்படுகிறது. மேலும் இது ஆண்களின் விந்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்து கருவுறுதல் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதிலுள்ள சத்துக்கள் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வீரியம், வலிமை, ஆண்மை அதிகரிப்பு போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன் படுவதாக கூறுகிறார்கள்.
இதய சம்பந்தமான நோய்களை குணப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு இது பயன்படுகிறது.
தலைமுடி பாதுகாப்பு:
பொதுவாக தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தமும் ஒரு காரணமாகும். அஸ்வகந்தா அளவாக அடிக்கடி எடுத்துக் கொள்ளும் பொழுது மனம் சம்பந்தமான பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்தது தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
மேலும் அஸ்வகந்தாவின் உள்ள மூலக்கூறுகள் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. மேலும் இது பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய்களை குணப்படுத்த மருந்தாக பயன் படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தி:
அஸ்வகந்தா கிழங்கை அல்லது அமுக்கரா கிழங்கை அடிக்கடி அளவாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வழியாக வெளியேறி உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது. அதனால் இது உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஸ்வகந்தா விலை அல்லது அமுக்கிரா கிழங்கின் விலை:(price or vilai)
அஸ்வகந்தா பொதுவாக பொடியாக நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இதனுடைய விலை ஒரு கிலோ தோராயமாக 950 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com