புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

ராகு,கேது,செவ்வா போன்ற தோஷங்கள் நீங்க பரிகாரங்கள்..!! Rahu ketu sani sevvaai pariharam

 ராகு,கேது,செவ்வா போன்ற தோஷங்கள் நீங்க பரிகாரங்கள்..!! 



தோஷம் என்பது நாம் பிறந்ததில் இருந்தே உண்டாகக்கூடிய ஒன்றாகும். சிலருக்கு இந்த தோஷத்தினால் கண்டங்கள் உண்டாகும். சிலருக்கு இந்த தோஷத்தால் திருமண தடைகள் இருக்கும். சில பேருக்கு இந்த தோஷத்தால் வாழ்நாள் முழுவதும் சில பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டு இருப்பார்கள்.


       முக்கியமா இந்த தோஷம் தோஷங்களுக்கு காரணமாக யார் இருப்பாங்க பார்த்தா முக்கியமா இந்த ராகு கேது செவ்வாய் போன்றவங்கத இருப்பாங்க. இத ஜாதகப்படி ஒரு பக்கம் பார்த்தா இன்னொரு பக்கம் கர்மாப்படி இன்னொரு பக்கம் பார்க்க வேண்டிய தான் இருக்கு. நாம செய்ற முன் வினைகள் தான் நமக்கு கொடுக்கிற பிரச்சினைகள் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இதை நாம் ராகு கேது மற்றும் தோஷங்கள் என்று பல பிரச்சினைகளில் மூலம் கூறலாம்.


ஆனால் ஜோதிடர்கள் குறிப்பாக நம்புவது நம் முன் வினைகள் எப்படி இருந்தாலும் நாம் பிறக்கும் பொழுது எந்த நேரத்தில் பிறக்கிறமோ அல்லது நாம் எந்த லக்கணத்தில் பிறக்கிறமோ அந்த நேரத்தில் ராகு கேது எப்படி இருக்கிறார்கள் என்பதற்கு தகுந்தாற்போல் நமக்கு தோஷங்கள் வந்து சேர்ந்துவிடும்.



ராகு,கேது தோஷம் நீங்க பரிகாரங்கள்…


   இவ்வாறு தோஷங்கள் சேர்ந்து வந்து விட்டால் அதை எப்படி போக்குவது மற்றும் எப்படி நல்வழிப்படுதுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் இருக்கிறது என்பதை கேட்டு வாழ்நாள் முழுவதும் பல விஷயங்களை கேட்டு பல விஷயங்களை நடைமுறைப்படுத்தியும் அல்லது செய்தும் வருகின்றனர்.


ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன், சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்கிரன்,சனி இவர்கள்தான் முக்கியமான கிரகங்கள்.ராகு கேது இரண்டும் சாயா கிரகங்கள் அப்படி என்று அழைக்கப்படும். கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் கூறப்படுகின்றன. ராகு மற்றும் கேது இரண்டு பேரும் செய்த தவ வேள்வியினால் வியந்த பரமேஸ்வரனும் விஷ்ணுவும் நவகிரகங்கள் பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை மற்றும் அந்தஸ்தையும் அவளுக்கு கொடுத்து இருக்கிறார்கள். 


ஒருவர் செய்த முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப ராகு-கேது அதற்கான பலன்களை வழங்குகிறார்கள் என்பதை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவரவர் செய்த வினைப் பயனில் அடிப்படையில்தான் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் அமைவார்கள். இந்த இரண்டு பெரும் எந்த கிரகங்களின் வீட்டில் அமர்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள்.


1.ராகு திசை இருப்பவர்களுக்கும் ராகு கிரக பார்வை இருப்பவர்களுக்கும் ராகு பகவானை  கோமேதக கல்லில் மோதிரம் அல்லது ஆபரணங்கள் செய்து அதை அணிந்து வரவேண்டும். 


2. சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வந்தால் ராகு கேது கிரக பார்வையில் இருந்து விடுபடலாம்.


3. அருகாமையில் இருப்பின் கோவில்களுக்குச் சென்று அங்கிருக்கும் ராகு மற்றும் கேது பகவான்களை வழிபட்டு நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். 12 சனிக்கிழமை இதை செய்தால் தோஷம் விலகும். 


4. அதே நேரத்தில் 7ஆம் இடத்தில் ராகு இருந்தால் அது ரொம்ப கடுமையான திருமண தோஷமாகும். இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் அல்லது செவ்வாய்க்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு ஒன்பது வாரங்கள் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் திருமண தோஷத்திலிருந்து விடுபடலாம். 


5. கடுமையான ராகு கேது தோஷம் நீங்க வேண்டும் என்றால் ஈய விக்ரகம், கோமேதகம் ,எருமை பூமிதானம்,குடை,எண்ணெய் உடைய பாத்திரம், இரும்பு,  உளுந்து, செந்தாமரை மலர் இதில் எதையாவது ஒன்றை ஒரு சுப நாளில் தானம் செய்தால் கடுமையான ராகு கேது தோஷத்தில் இருந்து விடுபடலாம். 


செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு பரிகாரங்கள்… 


பொதுவாக செவ்வாய் தோஷம் ஒருவரது ஜாதகத்தில் கடுமையான தடைகளை உண்டாக்குகிறது. திருமண தடைகள் வருவதற்கு தடங்கள் ஆகிறது. செவ்வாய் தோஷத்திற்கு செவ்வாய் தோசம் தான் சேர்க்க வேண்டும் என்று திருமணத்தில் கூறுகிறார்கள். அதைப்போல் ஜாதகத்தில் 2 4 7 8 12 என்ற இடத்தில் செவ்வாய் உள்ளதாக கூறுகிறார்கள். ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தில் குரு பார்வை பட்டால் செவ்வாய் தோசத்தின் தன்மை குறைவாக இருக்கும் என அனைவரும் கூறுகிறார்கள். 


ஜாதகத்தில் இரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந்தால் இரண்டு வருஷத்திற்கு தோஷம் உண்டாகும். அந்த இரண்டு வருடத்திற்கு மட்டுமே பிரச்சனையாக இருக்கும்.


1. திருமணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மற்றும் சகோதரர் இடத்தில் சொத்துப் பிரச்சினைகளும் இருப்பவர்கள் இந்த செவ்வாய் ஜெயந்தி விழாவில் அன்று செவ்வாய் வழிபட்டு வந்தால் விடுபடலாம். 


2. செவ்வாய் தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்த தானம் செய்வது நல்லதாகும். 


3. மண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மண் தூர்வாருவது மற்றும் பராமரிப்பது புதுப்பிப்பது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தால் செவ்வாய் தோஷம் விலகும். 


4. நீர் வழித் தடங்களை புதுப்பித்து நீர் செல்லக்கூடிய பாதைகளை துர்வாருவது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால் கடுமையான செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடலாம். 


5. சொத்துப் பிரச்சினைகளில் இருப்பவர்கள் சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு தேவைப்படும் அல்லது சேரப்படும் சொத்துகளை வழங்கி விட்டால் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடலாம். 


6. பொதுவாக செவ்வாய் கிரகத்தை ஆளக் கூடியவர் முருகப்பெருமான் ஆகவே முருகப் பெருமானை வாரம் தோறும் வழிபட்டு வந்தால் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.


Post a Comment

0 Comments