முதுகுவலி தசை பிடிப்பு, மூட்டுவலி, muthugu vali
அடிக்கடி வரும் வலிகளில் ஒன்று முதுகு வலி ஆகும். இவர்கள் நல்ல ஆரோக்கியமாக உணவுகளை எடுத்துக் கொண்டாலும் மற்றும் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட வலிவந்துவிடும் இதற்கு நாம் செய்யும் சில தவறுகள் ஆகும். அதை மாற்றிக் கொண்டாலே அந்த வலியிலிருந்து விடுபடலாம்.
அவை என்னென்ன மற்றும் அதற்கான பயிற்சிகள் என்னென்ன என்பதை கீளே பார்ப்போம் .தவறாமல் கடைசி வரை படிக்கவும் .
பணி(work )
வலி வருபவர்கள் பலபேர் நின்றுகொண்டேபணி செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கும். அதற்கு பதிலாக கால்களை மாற்றி மாற்றி நின்று பயிற்சி கொடுத்தாலே இதுபோன்ற வலிகளிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கலாம்.
இன்றைய நவீன காலத்தில் காலணிகள் பலவிதமாக வருகிறது. அதிலும் குதிகால் வைத்த காலணிகள் பெரும்பாலான இளம்பெண்கள் விரும்புவதால் அந்த காலணிகளை அவர்களுக்கு முதுகு வலி மூட்டு வலி வருவதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இதற்கு இந்த காலணிகளை தவிர்த்து உடல் நலத்திற்கு நன்மை தரும் காலணிகளை அணிய வேண்டும்.. இவ்வாறு பயன்படுத்தும் போது ரத்தம் ஓட்டம் இரு கால்களுக்கும் சீராக பாயும் இதனால் உடல் எடை சமமாக இரு கால்களுக்கும் பிரிவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுகிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தோளில் மாட்டிக் கொள்ளும் வகைகள் மிகவும் பிரபலமாகி விட்டது. நாம் வெளியூருக்கு சென்றாலோ அல்லது படிப்பிற்காக சென்றாலும் நமக்கு தேவையானவற்றை அந்த பையில் எடுத்துக் கொண்டு செல்லும் போது ஒரே தோளில் மாட்டி எடுத்துச் சென்றால் அதுவே ஒரு பெரிய சுமை ஆகிவிடுகிறது. இதை தவிர்க்க முடியாது என்றாலும் அடிக்கடி கைகளை தோள் மாற்றிக்கொண்டால் முதுகு வலி போன்ற வலியில் இருந்து விடுபடலாம்.
முதுகு மற்றும் தண்டுவடம்:
நமது வேலைகளை எளிமையாக்கும் வண்ணம் இன்று பல இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வந்துவிட்டன. இதனால் நம்முடைய வேலைப்பளு குறைந்துவிடுகிறது. ஆனால் நாம் பாத்திரங்கள் தூக்கும் போதோ, அல்லது தரை துடைக்கும் பொழுது, வீட்டை சுத்தம் செய்யும் பொழுது நம்மை அறியாமலே பல கலோரி செலவாகி நம்மை ஆரோக்கிய படுத்தும். இது போன்ற வேலைகளை செய்து வந்தாலே முதுகு மற்றும் தண்டுவடம் நல்ல நிலைமையில் இயங்கும் என்றும் கூறுகிறார்கள்.
நம்முடைய ஆரோக்கியம் மேம்படுவதற்கு நமது உடலின் இரு பகுதிகளிலும் உள்ள உறுப்புகள் சரிசமமாக வேலை செய்ய வேண்டும்.
கர்ப்பிணிகள்:
குறிப்பாக கர்ப்பிணிகள் குழந்தை பிறந்த பிறகும் அதற்கு முன்பும் ஒரு சில எளிய உடற்பயிற்சிகளை மருத்துவர்கள் அறிவுரையின்படி செய்தார் முதுகு வலியிலிருந்து தப்பிக்கலாம்.
ஒருசில கடின வேலைகளும் முதுகு வலி,, தசைப்பிடிப்பு, மூட்டு வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம். விபத்து மற்றும் மூட்டில் அடிபடுதல் போன்ற காரணங்களினாலும் மூட்டு வலி ஏற்படலாம்.
பயிற்சி 1:
இதற்கான எளிய பயிற்சி என்னவென்றால் வலி ஏற்படும் நபர் தங்கள் குதிகால்களை நாற்காலியின் மீது வைத்துக் கொள்ளவேண்டும். குதி கால்களுக்கு அடியில் தலையணை வைத்துக் கொள்ளவும். முதுகு ஆனது தரையில் இருக்குமாறு படுத்துக்கொண்டு பயிற்சி செய்யவும். பிறகு வலியுள்ள இடங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும்போது வலி குறையும்.
முதுகுவலி மற்றும் மூட்டு வலி ஏற்படுவதற்கு உடல் எடையும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. உடல் எடையை சரியாக பராமரித்தால் இது போன்ற வலிகளில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதிக எடையுள்ள பொருட்களை தூக்கும் போது முழங்காலை ஊன்றி தூக்க வேண்டும்.
மேலும் இரவில் தூங்கும் போதும், பொருட்களை கொண்டு செல்லும் போதும், தூக்கும் போதும் சரியான சமநிலையை கடைபிடித்தால் முதுகு ஆனது பாதிக்காது இதனால் முதுகு வலி வருவதற்கு வாய்ப்புகள் குறையும்.
நீண்ட தூரம் பயணிக்கும் போதோ, அல்லது ஓட்டுநர் வேலை செய்பவர்களுக்கும் ஏற்படும் முதுகு வலியை சரிசெய்ய கீழ்க்கண்ட பயிற்சியை மேற்கொண்டால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
பயிற்சி 2:
அதற்கு தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு வலது காலை மடக்கி தூக்க வேண்டும் . கால் பாதத்தின் பெருவிரல் நமது நெஞ்சுக்கு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்நிலையில் 5 வினாடிகள் நிலைநிறுத்த வேண்டும். பிறகு வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். இதே போன்று இடது காலை தூக்கி பயிற்சி செய்ய வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி ஒரு நாளைக்கு 10 முறை செய்தால் முதுகு வலி குறைந்து, ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
muthugu-vali-muthuhu-back-pain-